நானா...? அவ்வளவு கூலா?


நம்ம சக பதிவர்...
அன்புச்சகோதரி..
பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக
மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய
தென்றல்,
தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல்

....புதுகைத்தென்றல்
திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ,

இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க!


மிக்க நன்றிங்க!
இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது!
இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் !

சொன்னதுக்காக கொஞ்சம் கூல்...
வெயிலுக்கு இதமாக..!


தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் !

காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥

அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா

சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்!

விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்...சஞ்சய் ஜி

Comments

 1. உங்களிடம் பெற்றவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. நன்றி ஜமால்..!
  அதிராம்பட்டினத்தில்தான் முந்தாநாள் இருந்தேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்... :)

  ReplyDelete
 4. ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - சுரேகாவிற்கும் அவரது நண்பர்களுக்கும்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சுரேகா!!!!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.

  அப்துல்லா, முரளிகண்ணன் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!!

  ReplyDelete
 8. அண்ணே .. என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணே.. அழுகாச்சியே வருது.. நான் இன்னும் மனசளவுல குழந்தை தான். இதை நானே சொல்லிக்கக் கூடாது தான். ஆனா அது தான் நிஜம். எனக்கு எப்போவுமே பெரிய விஷயங்கள் மேல விருப்பம் இருக்காது. ஆனா தானா கிடைக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா கிடைக்கிறதில்லை. வெட்கத்த விட்டு சொல்றென் சுரேகா.. ஊரெல்லாம் இந்தப் பட்டாம் பூச்சி விருது குடுத்து/வாங்கி சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தப்போ நமக்கு ஒருத்தரும் குடுக்கலையேன்னு நிஜமா ரொம்ப ஃபீல் பண்ணேன் அண்ணே. பீலிங்குக்கு 2 காரணம்.
  1. இந்த விருது நல்ல எழுத்துக்கு குடுக்கறதா இருந்தா, நான் மத்தவங்க ரசிக்கிற மாதிரி ஒன்னுமே எழுதலையோ?
  2. நட்ப்புக்காக குடுக்கறதா இருந்தா, என்னை யாருமே நண்பனா நினைக்கலையோ?

  இன்னொரு மேட்டர் சொல்லனும்னா, இந்த ஒரே காரணத்துக்காக எழுதறத கூட நிறுத்த நினைச்சேன். அதுக்கப்புறம் தான் மனச தேத்திக்கிட்டேன். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைபடக் கூடாதுன்னு. ஆனா இந்த முடவனுக்கும் கொம்புத் தேன் கிடைச்சிடிச்சி.

  ஹிஹி.. என்னடா இவன் ரேஞ்ச்னு தானே யோசிக்கிறிங்க. ஆமங்ணே.. இதான்ணே நம்ம ரேஞ்ச். :))

  இன்னும் குழந்தையாவாத் தான்னே இருக்கேன். :))

  ReplyDelete
 9. இதுல கூட பெரிய சந்தோஷம் என்னன்னா , என் மாமன் அப்துல்லா கூட சேர்ந்து வாங்கினதுக்கும் சினமா எழுத்து ஜாம்பவான் முரளி க(அ)அண்ணன் கூட சேர்ந்து வாங்கினதும் தான்.

  நன்றி சுரேகா. :)

  ReplyDelete
 10. /
  Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

  அண்ணே .. என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணே.. அழுகாச்சியே வருது.. நான் இன்னும் மனசளவுல குழந்தை தான்
  /
  உன்னைய மாதிரியே சாயல்ல அரூர்லயும் கோயமுத்தூர்லயும் ஏகப்பட்ட கொழந்தைங்க இருக்குதாம் நீ கொழந்தையா???????

  நெம்பாஆஆஆ ஓவரு சொல்லிபுட்டேன்

  :))))))))))))))

  ReplyDelete
 11. /
  Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

  அண்ணே .. என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணே.. அழுகாச்சியே வருது.. நான் இன்னும் மனசளவுல குழந்தை தான்
  /
  உன்னைய மாதிரியே சாயல்ல அரூர்லயும் கோயமுத்தூர்லயும் ஏகப்பட்ட கொழந்தைங்க இருக்குதாம் நீ கொழந்தையா???????

  நெம்பாஆஆஆ ஓவரு சொல்லிபுட்டேன்

  :))))))))))))))

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சுரேகா!

  ReplyDelete
 13. /உன்னைய மாதிரியே சாயல்ல அரூர்லயும் கோயமுத்தூர்லயும் ஏகப்பட்ட கொழந்தைங்க இருக்குதாம்//

  என்ன இருந்தாலும் எங்கப்பாவை நீங்க சந்தேகப் படறதை என்னால ஏத்துக்க முடியலை மாம்ஸ்.. :))

  ...எப்புடு? :)))

  ReplyDelete
 14. /
  Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

  /உன்னைய மாதிரியே சாயல்ல அரூர்லயும் கோயமுத்தூர்லயும் ஏகப்பட்ட கொழந்தைங்க இருக்குதாம்//

  என்ன இருந்தாலும் எங்கப்பாவை நீங்க சந்தேகப் படறதை என்னால ஏத்துக்க முடியலை மாம்ஸ்.. :))

  ...எப்புடு? :)))
  /

  உன்மேலதான்யா சந்தேகம் என் வென்று!

  :)))))))))))

  ReplyDelete
 15. வாங்க தமிழ்ப்ரியன்..

  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 16. நன்றி சீனா சார்!
  எல்லாம் நீங்க கொடுக்குற ஊக்கம்தான்.!

  ReplyDelete
 17. மிக்க நன்றி ஆதவா!

  ReplyDelete
 18. விருது கொடுத்த விருதே! புதுகைத்தென்றலே!

  வருக...வருக!

  உங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்..!

  ReplyDelete
 19. வாங்க முல்லை!
  நன்றிங்க!

  ReplyDelete
 20. அன்பு சஞ்சய்..!

  ரொம்ப டச்சிங்கா இருக்கு!
  உங்களைவிட யாரால் நல்ல நண்பராக,
  நல்ல பதிவராக, கூலான ஆளாக இருக்கமுடியும்...?

  வாழ்த்துக்கள்!


  நீங்கள் வாங்கினால்தான் இந்த விருதுக்கே பெருமை!
  (குடுத்த காசுக்கு மேல கூவுறாரே சுரேகா!..- மங்களூர் சிவா)

  ReplyDelete
 21. வாங்க சிவா!

  பாவங்க அவரு!

  அவரை வறுக்காதீங்க!
  ஏற்கனவே வெயில் வேற 'மண்டையை' பிளக்குது!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தசாவதாரம் - விமர்சனம் !

இறைவி - எண்ணங்கள் எனது !

அகவை 70ல் அப்பா!