Thursday, April 16, 2009

சங்கரின் காதல்!

என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.
ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா...
நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்!
நீதானேடா கூப்புட்டன்னா,
நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.
அவன் நல்லவனா ? கெட்டவனா? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.

கட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.

அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு போய்வந்துக்கிட்டிருந்தேன்.

அப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு! ன்னு சந்தோஷமாகி...

என்னடா இங்கன்னு கேக்க!

அது ஒரு மேட்டரு மாப்புள! ன்னான்.

என்ன மேட்டருடா?

இரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.

சரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா (!) அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.
கிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,
அது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் ! (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல ! அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.
(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)

சரிடா ! எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்
சங்கரு!
என்னடா..!
நீ எங்க தங்கியிருக்க?
இடத்தைச்சொன்னேன்.
தியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.

இது நடந்து 2 மாசத்தில்..
ஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...
திறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் !
என்னடா இந்தக்கோலம்?

இல்ல மாப்புள ஓடிப்போறோம்.

என்னது ? ஓடிப்போறியா? எங்க ? யாரோட?

அப்பதான் சொன்னான்.

டிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு...! நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க! நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். கோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.
(தொடரும்..)

13 comments :

 1. அச்சச்சோ அப்பறம்?? :)))

  ReplyDelete
 2. ENAKKU ORU UNMAI THERINJAGANUM



  SANKAR




  NALLAVARA KETTAVARA??????????

  ReplyDelete
 3. ஆகா..இது நல்ல கதையா இருக்கே! என்ன ஆனாங்க அப்புறம்?!

  ReplyDelete
 4. வாங்கம்மா கவிதாயினி ஸ்ரீமதி!
  நலமா?

  நாளைக்கே அடுத்த பாகம்...!

  ReplyDelete
 5. வாங்க உங்களோடு நான்!

  அதுதான் கிளைமாக்ஸே!! :)

  ReplyDelete
 6. வாங்க முல்லை!
  அடுத்த பாகம் நாளைக்கே!
  படிங்க தெரியும்....:))

  ReplyDelete
 7. ரொம்ப பக்கத்தில நடந்திருக்கு! அதிர்வு இங்க வரைக்கும் ஜிவ்வுன்னு வருதுவோய். ஆமா எல்லாத்துக்கும் ஒரு இடைவேளை உன் அலும்பு தாங்கமுடியலடா :-)).

  சீக்கிரமா சொல்லித்தொலையப்பா :-P

  ReplyDelete
 8. ippadiya pause panrathu ha ha waiting for ur next post

  ReplyDelete
 9. நல்லா எழுதுறீங்க

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஹா ஹா
  நல்லா கெளப்புறான்யா பீதிய
  :))))))))


  சங்கரை சொன்னேன்

  ReplyDelete
 11. ஹா ஹா
  நல்லா கெளப்புறான்யா பீதிய
  :))))))))


  சங்கரை சொன்னேன்

  ReplyDelete
 12. இங்க போயா தொடரும் போடரது???????

  ReplyDelete
 13. நல்லாருக்கு கதை - தொடரும்னா ..... எப்ப்போ

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...