டெக்னாலஜி குலோத்துங்கன் - 4
டெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..!
இளவரசி ஏன் நிகழக்கூடாதா? யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்? என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும்.? எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே? என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்! :(
புவன் அப்படியில்லை!
இளவரசி அப்படியென்றால் பிடித்திருக்கிறது..சரிதானே!
புவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்! மன்னருக்குத்தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார்.
இளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ! இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.
புவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது
இளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை! நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன்.
புவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
இளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்
புவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்!
காட்சி—6
அந்தப்புரம்
(மன்னர், மகாராணி, இளவரசி)
மன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே! திருப்தியாகச்செய்தார்களா?
மகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்
ஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது
வேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்
கேட்டுக்கொள்ளவாவது செய்யலாமே!
மன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை! இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா?
மகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் !
மன்னர் நான் என்னடீ செய்வேன்! என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.
மகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்!
மன்னர் நீ சொல்வது மிகச்சரி! உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
மகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை.! நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே! அதைப்பற்றி ஏதாவது யோசித்தீர்களா?
மன்னர் யோசிக்காமல் இருப்பேனா? , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு ! முடித்துவிடுகிறேன்.
மகாராணி நம் மகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ! ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்!
மன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி! இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை!
மகாராணி அப்படி என்ன பிரச்னை? நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா? ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா? இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா? என்ன பிரச்னை ? சொல்லுங்கள்!
மன்னர் அய்யோ ! கொடுமைப்படுத்தாதே! நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை! அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன்! இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை!
மகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்! எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள்! அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு! மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்..! யோசித்துப்பாருங்கள்! ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.
மன்னர் சரி..சரி..நீயும் வேதனைப்படுத்தாதே! இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொடங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை!
(மன்னிக்கணும் மக்கா..! அதுபாட்டுக்கும் வளந்துக்கிட்டே போயிருச்சு! )
அடுத்த பாகத்திலயாவது முடிக்கப்பாக்குறேன்..!

மீ ..... தி..... பஸ்ட்டு.........!!!
ReplyDeleteமுதல் மூன்று பாகங்களுக்கான லிங்கை இந்த பதிவில் கொடுக்காததால் .... வெளி நடப்பு செய்கிறேன்...!!
are u going to close next padivu?
ReplyDeleteinnum koncham episodes vantha nalla irukkume?
sayu.
வாப்பா மேடி...
ReplyDeleteநாட்டு நடப்பு, எதிர்காலம் நல்லா தெரியுது.
ReplyDeleteதூள்! டெம்ப்ளேட்டையும் சேர்த்தே சொல்லுறேன் :)
ReplyDeleteவாங்க சிவா...!
ReplyDeleteஅட..அப்துல்லா ஜி! எப்படி இருக்கீங்க?
உங்கள் ஆலோசனைதான் டெம்ப்ளேட்டுக்கு காரணம் தலைவா!