டெக்னாலஜி குலோத்துங்கன் - 1
காட்சி 1 - அரண்மனை வளாகம்
( மன்னர் டெக்னாலஜி பெண்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன், மந்திரி மொபைல் மணிவாசகன், சேவகர்கள்)
அரச சபைக்கான சப்தங்கள்
சேவகன் : ராஜாதி ராஜ...ராஜ பார்வை மிக்க, மைடியர் மார்த்தாண்ட... மன்னாதி மன்னர்...
மன்னர் : யேய் ! நிறுத்து எனக்கு பராக் சொல்லச்சொன்னால் என்ன இது படங்களின் பெயர்களாகச்சொல்கிறாய் அதுவும் பராக்குப்பார்த்துக் கொண்டு!
சேவகன் : ஸாரி மன்னா! டங் ஸ்லிப்பாகிவிட்டது.
அரசர் : ஜாக்கிரதை..என் வாளும் உன் கழுத்தில் ஸ்லிப்பாகி விடப்போகிறது ! ..அமைச்சர் மொபைல் மணிவாசகரே!
அமைச்சர் : சொல்லுங்கள் மன்னா!
அரசர் : என்னய்யா! இப்படி ஒரு மொக்கையை பராக் சொல்லும் வேலைக்கு நியமித்திருக்கிறீர்கள் !?
அமைச்சர் : (மனதுக்குள்) உம்மைப் போல் மொக்கை மன்னருக்கு பின்னர் என்ன பில் கேட்ஸா சேவகனாக வருவார்.
அரசர் : என்ன அங்கு முனகல்!?
அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னா! உங்களைப்போன்ற சிறந்த மன்னருக்கு இப்படி ஒரு சேவகனா என்று வருந்தினேன்..
அரசர் : இருக்கட்டும் இருக்கட்டும்
சேவகன் : அமைச்சரே ! இப்போ நான் மிச்சத்தை சொல்லலாமா?
அமைச்சர் : சொல்லுமய்யா! இதற்கு வேறு அனுமதி வேண்டுமா?
சேவகன் : நமது மன்னாதி மன்னர்...டெக்னாலஜி தங்கம் ..! ஈ மயில் சிங்கம்.! பெண்டியம் செவன், பே சேனல் குலோத்துங்கன் பராக் ! பராக்! பராக்!
அரசவை கூடுகிறது...
காட்சி 2 அரசவை
( மன்னர், அமைச்சர், புவன், வருமான வரி அதிகாரி )
மன்னர் : அவையில் எல்லோரும் அவரவர் கணிப்பொறி முன்னர் அமருங்கள் ! (தொண்டையைச் செருமிக்கொண்டு) ஹ்ம்..ஹ்ம்.. அமைச்சரே மாதம் முழுவதும் இன்ட்டெர்நெட், ஈ மெயில் எல்லாம் வேலை பார்க்கிறதா? எல்லோர் வீட்டு கம்ப்யூட்டரும் நன்றாகச் செயல்படுகிறதா?
அமைச்சர்: ஆமாம் மன்னா! பிரமாதமாய் வேலை செய்கிறது.! (மனதுக்குள்)அந்தக்காலத்துல எங்க பாட்டன் பூட்டனெல்லாம் மாதம் மும்மாரி மழை பொழிகிறதாங்கிற கேள்விக்குத்த்தான் பதில் சொல்லியிருக்கான். என் விதி.. இன்டெர்நெட்.. பிள்ளைப்பூச்சி மெயில். கொசுமெயில் பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மன்னர் : என்னய்யா அங்கு நீண்ட முணுமுணுப்பு!?
அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னா !
மன்னர் : உம் கவலை எமக்குப்புரிகிறது... நான் மட்டும் என்ன விரும்பியா இந்தக்கேள்வியைக் கேட்கிறேன். இப்போதுதான் வானத்தில் மழை பொழிவது மூன்றாண்டுக்கு ஒருமுறை என்று மாறிவிட்டதே...!
அமைச்சர் : ஆம் மன்னா ! அந்தக்காலத்தில் மரங்கள் என்ற ஒரு தாவர இனம் இருந்ததாம்..! அதன் மூலம் மழை பொழிந்துகொண்டிருந்ததாம்..! இப்போதுதான் நாம் எல்லாவற்றுக்கும் இரும்புக்கம்பங்களே பயன்படுத்துகிறோமே!
மன்னர் : சரி அமைச்சரே..! அதைப்பற்றி இன்னொரு சமயத்தில் பேசுவோம்.! இப்போது நாட்டில் எல்லோரும் நன்றாக வேலை பார்த்து வருமானவரி கட்டுகிறார்களா?
அமைச்சர் : அது சம்பந்தமாகத்தான் ஒருவரை நமது வருமான வரி அலுவலர்கள் கைது செய்து அழைத்துவந்துள்ளார்கள்.!
மன்னர் : அது என்ன வழக்கு ? வருமான வரி அதிகாரி அவர்களே!
வருமானவரி அதிகாரி : மாட்சிமை தாங்கிய மன்னா ! இந்த கணிப்பொறி அலுவலர் திரு.புவன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு வருமான வரி கட்டாமல் டபாய்த்து வருகிறார்!
மன்னர் : ஏனப்பா ! என்ன பிரச்சனை ? ஏன் வருமானவரி கட்டவில்லை?
புவன் : மன்னா ! நல்ல வருமானம் வருகிறது..ஆனால் உணவுப்பொருட்களுக்கும், பால் , எரிபொருள் என எல்லா பொருட்களுக்கும் கடுமையாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
மன்னர் : என்னய்யா நகைச்சுவையாய் இருக்கிறது..! அரிசி கிலோ 3000 ரூபாய்க்கும், பால் ஒரு குவளை 1500 ரூபாய்க்கும், வாகன எரிபொருள் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் சகாய விலைக்கு வழங்கியிருக்கிறேன். இதைப்போய் அதிகமென்கிறாயே! இந்த டெக்னாலஜி குலோத்துங்கன் ஆட்சியில்தான் ஒரு கணிப்பொறி எல்லா மென்பொருட்களும் சேர்த்தே 249 ரூபாய்க்குக்கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்குக்கூட ஒரு செல்பேசியை இலவசமாக வழங்குகிறார்கள் என்று அண்டை நாட்டார்கள் மூக்கின்மேல் மௌஸை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
புவன் : ஆமாம் மன்னா...வீட்டில் இரண்டு கணிப்பொறியும், எல்லா எலக்ட்ரானிக் உபகரணங்களும் உள்ளன. ஆனால் சோறு சாப்பிடத்தான் முடியவில்லை. அதான் என்னால் வருமான வரி வேறு கட்டமுடியவில்லை.
மன்னர்: மீண்டும் மீண்டும் சோற்றைப்பற்றியே பேசி என்னை மூட் அவுட் செய்கிறாயே! ஒரு நாள் முழுவதும் வெளிநாட்டு மங்கைகளுடன் இன்டெர்நெட்டில் சாட் செய்துபார்! ஒரு நிமிடம் கூட பசிக்காது. அப்படிப்பசித்தாலும் வெளிநாட்டு உணவு வகைகள் மிகவும் சீப்பாகக்கிடைக்கிறது. பீஸா , பர்கர் என்று...!
அமைச்சர் : ஆமாம் மன்னா! மிகவும் சீப்பாகக்கிடைக்கிறது. இன்று காலையில்கூட நான் ஒரு பீஸாவை முக்கி முக்கி தின்றுவிட்டுத்தான் வந்தேன். அதுவும் அமைச்சருக்காக சகாயவிலையில் ஒன்று 900 ரூபாய்க்கே தந்தார்கள்.
புவன் : அது சரி அமைச்சரே ! நீங்கள் அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளீர்கள் அதனால் இது சாத்தியம் என்னைப்போன்ற மாதச்சம்பளம் வாங்கும் சாமானியனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. வருமானவரியும் மிகவும் அதிகமாக இருக்கிறது.
மன்னர் : என்ன சொல்கிறாய் மிஸ்டர் புவன்! என் ஆட்சியில் வருமானவரி அதிகமா? உங்களைப்போன்ற மாதச்சம்பளம் வாங்கும் மிடில்கிளாஸ் மக்கள் துன்பப்ப்டக்கூடாது என்றுதான் உங்கள் சம்பளத்தில் பிசாத்து 80 சதவீதத்தை வருமானவரியாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள இருபது சதவீதத்தை பெரிய மனதுடன் தந்து மகிழ்ந்திருக்கிறேன்.
புவன் : அதில்தான் மன்னா சிக்கல் ! இந்த சம்பளத்தாலேயே என்னால் என் குடும்பத்தைக்காக்க முடியவில்லை...இதில் என் வருமானவரி போக கிடைக்கும் 20 சதவீதத்தை வைத்து நானும் வேலைக்குப்போக முடியாத என் தந்தையும் , என் தாயும் வாழமுடியவில்லை! எனவேதான் வருமான வரியைக்கட்டவில்லை! இது என் பிரச்சனை மட்டுமல்ல ! இந்த நாட்டின் பிரச்சனை! என்னிடம் இதைத்தீர்க்க யோசனையும் உள்ளது..! அதாவது.....
மன்னர் : நிறுத்து ! எனக்கே யோசனை சொல்கிறாயா ? புரட்சி செய்கிறாயா? உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
புவன் : என்ன தண்டனையாக இருந்தாலும் கொடுங்கள் மன்னா! அது மரணதண்டனையாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
அமைச்சர் : அய்ய! ஆசையைப்பாரேன். அப்படியெல்லாம் எங்கள் மன்னர் கருணைகாட்டிவிட மாட்டார். உனக்கு தண்டனையாக நமது அரண்மனையில் உள்ள எல்லா கணிப்பொறிகளையும் , செல்போன்களையும் சர்வீஸ் செய்யவேண்டும்.
மன்னர் : என்னய்யா நான் சொல்லாமலேயே அவனுக்கு தண்டனை கொடுக்கிறீர்! மேலும் அவனுக்கு எப்படி கணிப்பொறி சர்வீஸ் செய்யத்தெரியும்.?
அமைச்சர் (மன்னர் காதில் மெதுவாக) மன்னா! அவன் எப்படியும் வருமான வரியைக்கட்டப்போவதில்லை. நீங்களும் அவனை விட்டுவிடப்போவதில்லை. அதே நேரம் அவன் கணிப்பொறி குறைதீர்க்கும் நிறுவனத்தில் வேலை செய்பவன் என்று தெரிந்துதான் இவ்வாறான தண்டனைக்குப்பரிந்துரைத்தேன். மேலும் அரண்மனை கணிப்பொறிகளுக்கு ஏ எம் ஸி எடுத்த அயல் நாட்டு நிறுவனம் அதிகத்தொகை கேட்கிறது. இதுபோன்ற இளிச்சவாயர்கள் நான்கு பேர் கிடைத்தால் நாம் நம் வேலையை இலவசமாக முடித்துக்கொள்ளலாம் அல்லவா? எப்படி என் மந்திரிதந்திரம்...!
மன்னர் : அதென்ன மந்திரி தந்திரம்?
அமைச்சர் : மன்னர் சிந்தித்தால் ராஜ தந்திரம்...! மந்திரி சிந்தித்தால் மந்திரி தந்திரம்...!
மன்னர் : அடடா! அடடா! என்ன ஒரு புத்திக்கூர்மை..! இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் ரோபாட்டை விட நீர் சிறப்பாகச்சிந்திக்கிறீர் அய்யா!
அமைச்சர் : ஹி..ஹி..நன்றி மன்னா! அப்படியே என் இன்க்கிரிமென்ட் சம்மந்தமாக...!
மன்னர் : யாரங்கே! சென்ற வாரம் அரண்மனையில் இன்கிரிமென்ட் கேட்ட சேவகனின் வாயை வெட்டியாயிற்றா?
அமைச்சர் : அய்யய்யோ ! எனக்கு எதுவும் வேண்டாம் மன்னா!
மன்னர்: அது....! மிஸ்டர் புவன்! நீங்கள் இந்த் ஆண்டுமுழுவதும் அரண்மனை கம்ப்யூட்டர்களை இலவசமாக சர்வீஸ் செய்யவேண்டும். இதுதான் தண்டனை!
புவன்: இது அநியாயம் மன்னா! ஒரு ஆண்டுகாலம் என் குடும்பத்தை கவனிக்க யாருமில்லை! என் பெற்றோரின் கதி என்னாவது? உங்கள் அராஜகத்துக்கு முடிவு ஏற்படும்..!
மன்னர்: ரொம்ப்பேசாதே! பின்னர் தண்டனையை அதிகப்படுத்திவிடுவேன். உன் தர்ம நியாயங்களே எனக்குப்பிடிக்கவில்லை! இவனை உடனே அப்புறப்படுத்துங்கள்!
புவன்: மக்களின் நிலை அறியாத மட மன்னா ! நீயெல்லாம் விளங்கவே மாட்டாய்!
மன்னர்: யாரப்பா அங்கே ! அவனைப்பேச விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு! இழுத்துச்சென்று அந்த அடிமை ஐடி கார்டை அவன் கழுத்தில் மாட்டுங்கள்!
(தொடரும்...)
டிஸ்கி : சிறுவயதில் நாடகங்கள் மேல் கொள்ளை ஆசை.. சில நாடகங்களில் நடித்தும், எழுதியும் இருந்தாலும் நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு நாடக முயற்சி! தேறுமா பாப்போம்..! :)

//என்ன சொல்கிறாய் மிஸ்டர் புவன்! என் ஆட்சியில் வருமானவரி அதிகமா? உங்களைப்போன்ற மாதச்சம்பளம் வாங்கும் மிடில்கிளாஸ் மக்கள் துன்பப்ப்டக்கூடாது என்றுதான் உங்கள் சம்பளத்தில் பிசாத்து 80 சதவீதத்தை வருமானவரியாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள இருபது சதவீதத்தை பெரிய மனதுடன் தந்து மகிழ்ந்திருக்கிறேன்.///
ReplyDeleteநினைச்சு பார்த்தா திக் திக்ன்னு தான் இருக்கு :)
முயற்சி மேன்மேலும் தொடரட்டும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் :)
வாங்க ஆயில்யன்..
ReplyDeleteநன்றிங்க!
உங்களுக்கே இப்படி இருந்தா....?
:))
அன்பின் சுரேகா
ReplyDeleteநாடகம் நன்றாக இருக்கிறது - நகசிசுவை - இன்றைய இயல்பு நிலை - அனைத்துமே அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. நல்ல முயர்சி - தொடர்க - நல்வாழ்த்துகள்
நிறைய வரிகளில் சிரிப்பு - :))) - பேரெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு!! மந்திரிதந்திரம்...!!
ReplyDeleteசூப்பர் தல.. நல்ல முயற்சி.. தொடருங்கள்..
ReplyDeleteமுயற்சி மேன்மேலும் தொடரட்டும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் //
ReplyDeleteகன்னாபின்னா ரிப்பீட்டுங்க
//சேவகனின் வாயை வெட்டியாயிற்றா?//
ReplyDeleteவாயை எப்டி வெட்டுவாங்க?? :)
nice drama
ReplyDeleteதேறினாலும் தேறும்...தேறவில்லை என்றால் உமது கணணி படுக்கையில் துங்கட்டும்...
ReplyDeleteமுழுசும் படிச்சிட்டேன், கண்ணா! நாடகம் நகைச்சுவை உணர்வுடன் நகர முயற்சித்தாலும் இன்றைய காலத்தின் நெருங்கி வரும் எதார்த்தம் தூக்கலாக இருக்கிறது.
ReplyDeleteமுதல் முயற்சியா? வாழ்த்துக்கள்! இன்னும் சிந்தி... :)
வாங்க சீனா சார்
ReplyDeleteஉங்கள் அன்பும் பாராட்டுதலும்
எனக்கு மிக உற்சாகத்தைக்கொடுக்கும்.
மிக்க நன்றி சார்!
வாங்க சந்தனமுல்லை!
ReplyDeleteசும்மா எழுத ஆரம்பிச்சது..!
பேரு ..புதுசா யோசிக்கவேண்டியதாப்போயிடுச்சு!
மிக்க நன்றிங்க!

வாங்க சகா!
ReplyDeleteமுயற்சி...அவ்வளவுதான்..
நீங்கள்லாம் இருக்கீங்கங்கிற திமிரில்தான்..!
:))
நன்றிப்பா !
வாங்க புதுகைத்தென்றல்..!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
உங்கள் பாராட்டுத்தான் டானிக்!
நல்ல முயற்சி.. தொடருங்கள்..
ReplyDelete