மூன்றுவரித் திரைப்படங்கள்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..!

தம்பி கிழித்தான் கோட்டை!
அண்ணி தாண்டினாள் கோட்டை!
அண்ணன் விட்டான் கோட்டை!


இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்!



படித்து கிராமம் சென்றான்!
ஊருக்காக நின்றான்!
பங்காளியைக் கொன்றான்!

----

பொய்யாய் வேலை வைத்தியம்!
பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்!
மருத்துவமனைக்கே வைத்தியம்!

-----


பத்துபேரும் பினாமி!
கிருமிதான் எனிமி!
எனிமி கொல்ல சுனாமி!

-----
சேர்த்துவைத்த நட்புக்கு வலி!
நட்பினால் காதல் பலி!
மீண்டும் பிரிந்தால் பொலி!

------
ஆசையாய் இலவசப் படிப்பு !
ஆதிகேசவனால் இடிப்பு !
கள்ளப்பணத்தால் முடிப்பு!



பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்!
படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!

Comments

  1. 1 தேவர்மகன்
    2 வசூல் ராஜா M.B.B.S
    3 தசாவதாரம்
    4
    5 சிவாஜி

    ReplyDelete
  2. வாங்க இளந்தென்றல்..!

    அனைத்தும் சரியே! :)

    ReplyDelete
  3. நாலாவது படம் காசிக்குப்பமா..?:)

    ReplyDelete
  4. ஏன்..ஏன்..இந்தக் கொலைவெறி கேபிள் ஜி!! :))

    ReplyDelete
  5. அருமை.. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி. கவித்துவமாய் சினிமாவை சொல்லிவுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. டீ.ஆர்.கிட்ட ட்ரைய்னிங் போனீரோ..?

    ReplyDelete
  7. குஜாலாக்கீதுபா..!

    ReplyDelete
  8. கமல் ஸ்பெஷலா? :)

    ReplyDelete
  9. செம ஐடியா ய்யா! பின்றீங்க!

    நானும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன்...

    ReplyDelete
  10. வாங்க மதுரை சரவணன்! மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  11. வாங்க சின்னப்பயல்...! அவரிடம் ட்ரெய்ன் ஆகாமல் தமிழனா?

    :)

    ReplyDelete
  12. வாங்க சஞ்சய்!

    அட..அது தானா அமைஞ்சது!!

    ReplyDelete
  13. வாப்பா பரிசல்..!

    எப்படி கீற?

    இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி!!

    ReplyDelete
  14. 1.தேவர் மகன்
    2.வசூல் ராசா
    3.தசாவதாரம்
    4.நாடோடிகள்
    5.சிவாசி

    ReplyDelete
  15. விடைகளை வெளிவிடாமல் இருந்திருக்கலாம். நான் பார்க்காமல் தான் எழுதினேன் :-)

    ReplyDelete
  16. ஹையா ஆன்சர் ஷீட்டே கிடைச்சிருச்சு..:))

    அருமை சுரேகா.. நல்ல முயற்சி.

    ReplyDelete
  17. சுரேகா

    உண்மையில் ரசித்துப் படித்தேன், வித்தியாசமான கவி நடையில் நச்

    ReplyDelete
  18. மிக்க நன்றி இளா ஜி!

    ReplyDelete
  19. வாங்க TBCD அண்ணே!

    சூப்பர் பதில்கள்!

    நான் பின்னூட்டத்தை மாடரேட் பண்றதில்லை! அதனால்தான் இப்படி!!

    லூஸுல விட்ருங்க! :))

    ReplyDelete
  20. வாங்க தேனம்மை!
    நன்றிங்க

    ReplyDelete
  21. அன்புக்கு நன்றி கானா பிரபா அண்ணாச்சி! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!