சிறு மூளை



உடனே ஒட்டும்
பசை விளம்பரம்!
பார்த்துக்கொண்டிருந்த
மகன் கேட்டான்.
அப்பா! அது
எல்லாத்தையும் 
ஒட்டுமா?
ஆமாம் என்றேன்.
போனை? ஆமாம்!
நோட்டை? ஆமாம்!
கார் பொம்மையை? ஆமாம்!
அப்புறம் ஏன்
அது வச்சிருக்கும்
குப்பியில்
ஒட்டிக்கலை?

24மணி நேர
மருத்துவமனை!
வாசலில் பலகை பார்த்து
கேட்க ஆரம்பித்தான்.
எல்லா நேரமும்
திறந்திருக்குமா?
ஆமாம்!
நடுராத்திரி? ஆமாம்!
தீபாவளிக்கு? ஆமாம்!
ஞாயிற்றுக்கிழமை? ஆமாம்!
அப்புறம் ஏன்
வாசல்ல கதவு
வச்சிருக்காங்க?

இவர்களுக்கு
பதில் சொல்ல
மூளைக்கு
என்ன செய்ய?

Comments

  1. las நாலு வரி தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கேபிள ரிப்பீட்டிக்கிறேன்.

    ReplyDelete
  3. ஹாஸ்பிட்டல் கதவு மேட்டர் சூப்பர்!

    ReplyDelete
  4. haa haa
    பதில் சொல்லுங்கய்யா என் கொய்யானு கேட்டானா???

    :)))))))))))))

    வாழ்த்துக்கள் ஜூனியர்!

    ReplyDelete
  5. ஜூனியர்கிட்ட சிக்கிக்கிட்டு முழிக்கறீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா... கொஞ்சம் கஷ்டம் தான் இந்த காலத்து பிள்ளைகள சமாளிக்கறது

    ReplyDelete
  6. கேபிள் ஜி! நீங்க காலங்காத்தால எந்திருச்சு கேப்பீங்கன்னுதான்! :)

    அதுசரி! என்னடா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பார்ட்டி லேட்டா வருதேன்னு பார்த்தேன். இப்ப இந்த யாவாரம் ஓடிக்கிட்டிருக்கா?

    ReplyDelete
  7. வாங்க ஷங்கர் ஜி! ஆமாம்..!

    ReplyDelete
  8. வாங்க ராஜு ! மிக்க நன்றி!

    ReplyDelete
  9. வாய்யா மங் சிங்!

    நன்றி!

    ReplyDelete
  10. வாங்க அப்பாவி தங்கமணி!

    ஆமாங்க! எல்லாப்பிள்ளைங்களும் அப்படித்தான் இருக்குன்னுதான் அதை எழுதினேன்.

    ReplyDelete
  11. வாங்க பரிசல்...! மொக்கையாவாவது இருக்கா? :)

    ReplyDelete
  12. ஹிஹிஹி பய புள்ள மடக்கிட்டானா..??..:))

    ReplyDelete
  13. வாங்க தேனம்மை ஜி! ஆமா..எல்லாப்புள்ளையும் அப்படித்தான் இருக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!