இளைஞர்கள் இரண்டுபேர்!



       ஒரு சில விஷயங்கள்  நடக்கும்போது கேயாஸ் தியரிபோல், ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது.


         ஊழல் நிறைந்துபோய், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான் Mohamed Bouazizi  என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர்வாதிகாரி அதிபராக அநியாய ஆட்சி நடத்திய பென் அலியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இவை அனைத்தும் அந்த இளைஞன் தன்னை எரித்துக்கொண்ட் டிசம்பர் 17 ம் தேதி ஆரம்பித்து, ஜனவரி 17ம் தேதியில் நடந்துவிடுகிறது.



அந்த தீக்குச்சி இளைஞன் முகமது பௌ அஸீஸி
     
ஒரு தனி இளைஞன் பற்றவைத்த நெருப்பு, பற்றிக்கொண்டு ஒரு நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர 31 நாட்கள் எடுத்துக்கொண்டு, ஒரு ஓய்வுபோல், இடையில் 8 நாட்களுக்குப்பிறகு ஜனவரி 25ம்தேதி எகிப்தில் புரட்சியாக வெடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் லட்சக்கணக்கில் ஒரே மைதானத்தில் கூடுகிறார்கள். போராட்டங்களின் உயிரிழப்புகளுக்குப்பிறகு புரட்சி இன்னும் வேகம்பிடித்து அதிபர் முபாரக்கை பதவியிறக்கி, தலைமறைவாக ஆக்குகிறது. இந்த இரண்டு புரட்சியிலும், பொதுமக்களின் கொந்தளிப்பும், பங்களிப்பும்தான் இப்படி ஒரு முடிவைத் தந்திருக்கிறது. மேலும் இதில் இணையத்தின் பங்கும் அதிகம் இருக்கிறது. இதோ அடுத்து பஹ்ரைனில் தொடங்கியிருக்கிறது. இது தொடரும் எனத்தெரிகிறது.




     இந்தப்படத்திலுள்ள இளைஞனும் ஒரு அராஜகத்தை நிறுத்துவதற்காகத்தான் உயிர் மாய்த்துக்கொண்டான். கொஞ்சம் கூட அசரவில்லையே நாம்! ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே?  அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது? புரட்சியாவது..பொடலங்காயாவது…போங்க பாஸு! போய் ஓட்டுக்கு 1000 ரூபா சேத்துக்குடுப்பாங்களான்னு கேட்டுச்சொல்லுங்க!! நம்ப வீட்டில் நாலு ஓட்டு இருக்கு! 

Comments

  1. நம் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. இதுபோல் செய்திகளை படித்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  2. சுடும் உண்மை. கண்களைத் தாழ்த்த வைக்கின்ற பதிவு.

    ReplyDelete
  3. வெட்சித் தலை குனிகிறேன்

    ReplyDelete
  4. உண்மையான சோரம் போகாத இளைஞர்கள்

    ReplyDelete
  5. பதிவுலகம் என்றால் கொச்சை தமிழ், கும்மியடிக்கும் போக்கு, சினிமா, மற்றும் குப்பைகள் கொட்டும் தொட்டி போலாகிவிட்ட நிலையில், உணர்வைச் சுட வைக்கும் நல்ல பதிவு - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. செருப்பில அடிச்ச மாதிரி இருக்குது...

    ReplyDelete
  7. இங்கே உண்மை சுட்டவர்கள், தலைகுனிந்தவர்கள் , செருப்பால் அடிபட்டவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள். ஒரு முத்துகுமார் செய்த தியாகம் பெரிதென்று இம்மாதிரியான பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டதோடு சரி.. விடுங்க பாஸு..

    ReplyDelete
  8. சிந்திக்க ஒரு பதிவு ..!
    அனானியாக வந்து கும்முவதில் ஒரு அல்ப்ப பிரிய சிலருக்கு......!

    ReplyDelete
  9. உங்க பங்குக்கு நீங்க பதிவு போட்டுட்டீங்க!என் பங்குக்கு நான் பின்னூட்டம் போடுறேன்.

    ReplyDelete
  10. பாஸ், நீங்க எழுதினதுல tunisya, egypt , lybia ஒன்னும் என்னை பெருசா impact பன்னால ஆனா கடைசி 5 வரி ரொம்ப அசிங்க பட வைக்குது.
    தமிழன், வீரன், மானம், பண்புன்னு சொல்றதெல்லாம் புறநானூறுளையும் தமிழ் சினிமாலையும் மட்டும் தான் இருக்குது.

    ஆனா உண்மை அந்த கடைசி 5 வரியில தான் இருக்கு.

    ReplyDelete
  11. வாங்க குசும்பரே!

    மழுங்கடிக்கப்பட்டுவிட்டன!
    மழுங்கிவிட்டன!
    மழுங்க வைக்கின்றன!

    அப்படித்தானே? :)

    கண்டிப்பா நீங்க சொன்னது உண்மை!

    ReplyDelete
  12. வாங்க யுவா!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  13. வாங்க எல் கே!

    அதையாவது செய்வோமே என்றுதான்!

    ReplyDelete
  14. ஆமாம்.. ஆர்.கே.சதீஷ்குமார்!
    நீங்கள் சொல்வது சரிதான்!

    நாம்தான் சோரம் போய்விட்டோம்! :)

    ReplyDelete
  15. வாங்க சம்பத்!
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  16. வாங்க மதுரை சரவணன்!

    எனக்குத்தோணினதை எழுதினேன் அவ்வளவுதாங்க!

    ReplyDelete
  17. அனானிகளுக்கு பதில் சொல்வது..வெற்றுக்காட்டை நோக்கி உரையாற்றுவதாக எண்ணுவதால் நான் பதில் சொல்வதில்லை லவ்டேல் மேடி!

    உங்க அன்புக்கு நன்றி பாஸு!

    அவரும் வந்து வேற கருத்தை இங்க பதிஞ்சுட்டுப்போறாரு விடுங்க!

    ReplyDelete
  18. வாங்க ராஜு!

    இதுல என்ன பங்கு? :)

    ReplyDelete
  19. வாங்க அசோக்!

    வருகைக்கு மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  20. அன்பின் சுரேகா - என்ன மறுமொழி போடுவதென்று தெரியவில்லை - பல்வேறு உணர்ச்சிகளுடன் சீனா

    ReplyDelete
  21. நம் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. இதுபோல் செய்திகளை படித்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !