யுடான்ஸ் வணக்கம்!




திரட்டியாக ஆரம்பிக்கும்போது , நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற அளவில்தான் தெரியும். அப்புறம் அது பதிவர்களிடையே பரவ ஆரம்பித்தது. அப்புறம் குறும்படங்கள் காட்ட டிவியும் இணைத்தார்கள். பின்னர் நேரடியாக ஒரு விழாவை ஒலிபரப்பினார்கள். திடீரென்று பரிசலும்,ஆதியும் நடத்தும் சவால் சிறுகதைப்போட்டியை வழங்கினார்கள். அலெக்ஸாவில் ரேட்டிங் அள்ளினார்கள். வார நட்சத்திரம் தேர்ந்தெடுத்து, முகப்பில் வைத்தார்கள். குடான்ஸாக ஆரம்பித்தவர்கள் யுடான்ஸாக , நீங்களும் ஆடுங்களென்று பிரமிக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கேபிள் அண்ணன் கூப்பிட்டு நீங்க அடுத்த வாரம் என்றார். நான் அதற்கடுத்த வாரம் என்றேன்.சரி என்றார். நானும் விட்டுவிட்டேன். சொன்னபடி சரியாகக் கூப்பிட்டார். நான் ஜகா வாங்க முயற்சித்தேன். நடக்கவில்லை. 

இதோ.. வந்து நிற்கிறேன்.

அதுவும் வாரம் ஒரு பதிவாவது எழுதாமல், மாதத்துக்கே இரண்டு, மூன்று என்று சுருங்கிப்போன சுண்டெலிப் பதிவனான என்னைத் தூக்கி நிறுத்தினால், இந்த வாரம் கட்டாயம் 7வது தேறிவிடும் போலிருக்கிறது. ஜெய் ஜோசப் சங்கர ஜேகே !  

திரட்டியின் முகப்பில், நான் இருப்பதைப் பார்த்து நம்பி எதிர்பார்த்தீர்களென்றால் ஏமாந்து போகும் சாத்தியம் நிறைய உண்டு! ம்க்கும்..என்று செருமினீர்களென்றாலும் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது. பதிவர்களின் அன்பும், அறிவும் அறிந்தவன் என்ற முறையில், என்னால் முடிந்ததை..(சட்டியில்………..அகப்பையில்…..….) டைப்புகிறேன்.

இது..உளறலாகத் தெரிந்தால்,..மிகச்சரி! திடுக்கென்று மேடை ஏறி, அதுவும் ஸ்பாட் லைட் நம்மைத் துரத்தும்போது இருக்கும் கிடுக்….மிரட்சிதான்..! வேறொன்றுமில்லை.

அனைவருக்கும். யுடான்ஸ் வார வணக்கங்கள்!

Comments

  1. சுரேகா,

    என்னமோ நீங்க உடான்ஸ் உடுறிங்களோனு நினைச்சேன். வாழ்த்துகள்!

    சட்டி பெருசோ சிறுசோ ஆனால் அதுல சரக்கு இருக்கும்னூ தெரியும், எதுக்கும் கொஞ்சம் பெரிய அகப்பைல அள்ளிப்போடுங்க... சாப்புட்டுகிறோம், செம பசி நமக்குலாம்!

    ReplyDelete
  2. வாங்க வவ்வால்!

    நன்றி!

    அய்யோ! அய்யோ! இந்தச்சட்டியை இவ்ளோ நம்புறீங்க!!

    முயற்சிக்கிறேன்..!

    :)

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள் சுரேகா - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சுரேகா.

    ReplyDelete
  5. அகப்பையில் இல்லாமலா அகப்பையில் வந்திருக்கு பாஸ். (அட அகம்+பை = அகப்பை , இப்படித்தான் )

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!