இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்.. பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கி
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!!!
ReplyDeletealaipukku nandri anna
ReplyDeleteமதியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா அவர்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் சாப்பாட்டுக்கு பின் வரும் தூக்கத்தை இப்போது வரும் கவியரங்கம் வர விடாமல் செய்து விடும் என்றார் அது உண்மைதான் கவியரங்கம் நன்றாக இருந்தது. தூக்கமும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்றாலும் சுரேகா அவர்களின் பேச்சால் அது விரட்டியடிக்கபட்டது . சில பேரை பார்க்கிறப்ப பொறமை வரும் இவர் பேசுவதை பார்க்கையில் எனக்கு கொஞ்சம் லைட்டா வந்தது (சார் இது ஆரோக்கியமான பொறாமை )
ReplyDeleteதங்களை பற்றி என் தளத்தில் பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி
r.v.saravanan
kudanthaiyur.blogspot.in