இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !



சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:



   கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அவர்களிடம் சரியான பதிலில்லை. தனக்கு நேரமாகிவிட்டது என்று உடனே ஒரு டாக்ஸி பிடித்து 6000 ரூபாய் கொடுத்து சென்னை வந்து சேர்கிறார்.

அவர் அமெரிக்கா சென்றபின் , இதை எனக்கு ஜூலை 4 அன்று மின்னஞ்சல் அனுப்புகிறார்.

நானும், அவரிடம் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொண்டு, ரெட்பஸ்ஸின்  support@redbus.in  க்கு ஒரு மின்னஞ்சல் ஜூலை  5ல்  அனுப்பினேன்.

முழு விபரத்தையும், சுருக்கமாகச் சொல்லி, தவறான தகவலுடன் டிக்கெட் புக் செய்தது உங்கள் தவறு.! அவரது பயணச்செலவுக்கு நீங்கள்தான் பொறுப்பு.! இந்த விஷயத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில்… ரெட்பஸ்ஸுக்கு எதிராக சுமார் 1500 மின்னஞ்சல்கள் ஒரே நாளில் வரும் என்றும்.. இது சம்பந்தமாக சட்டப்படி அணுகுவதற்குமுன் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று ஒரு நுகர்வோரின் சார்பாகவும், ஒரு குழுமத்தின் நிர்வாகியாகவும் எழுதியிருந்தேன்.

ஜூலை  10 ம்தேதி அன்று ரெட்பஸ்ஸின் Alok Goel - Chief Product Officer, சண்முகம் அவர்கள் செலவழித்த தொகை அனைத்தையும் திரும்பத்தருவதாகச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார். அதாவது ரூபாய் 6000 +700 = 6700.

கேட்டால் கிடைக்கும் என்று போராடியதால்தான் சாதிக்க முடிந்தது என்று சண்முகம் மிகவும் மகிழ்ச்சிப்பெருக்குடன் நன்றி சொல்லி மின்னஞ்சலிட்டார்.

முடிந்தது.

அடுத்து..


மயில்சாமி அவர்கள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை வர அபி&அபி ட்ராவல்ஸ் பஸ்ஸுக்காக, MAKEMYTRIP.COMல் நான்கு டிக்கெட்கள் புக் செய்திருக்கிறார். அவர்களுக்கான பஸ்ஸில் ஏறும்போதுதான் தெரியவருகிறது. அவர்களது சீட்டில் வேறு சிலர் அமர்ந்திருப்பது…! அதை அபி & அபியிடம்  கேட்டபோது, ‘இந்தப்பயணிகள்தான் எங்களிடம் புக் செய்தவர்கள்’ நீங்கள் வைத்திருக்கும் டிக்கெட் எங்கள் டேட்டாபேஸில் ஆகஸ்ட் 22ம் தேதிக்கானது. நீங்கள் சொல்லும் MAKEMYTRIP.COMக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இந்தப் பிரச்னை இவர்கள் 4 பேருக்கு மட்டுமல்ல. இதேபோல் 15 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இரக்கப்பட்டு, அபி&அபி மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு சிறப்பு(!) பேருந்தை சென்னைக்கு இயக்கியிருக்கிறார்கள். மிச்ச டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் சென்று நிரப்பிய கதை தனி! ஆக.. மிகவும் போராடி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். மேலும், மேக் மை ட்ரிப்பை அணுகி பேசியபோது சரியான பதில் சொல்ல ஆள் இல்லை. அல்லது இதோ அதோ என்று இழுத்திருக்கிறார்கள். பின்னர் ஆகஸ்டு 18 அன்று என்னிடம் பேசினார்.
இது முழுக்க முழுக்க MAKE MY TRIP ன் தவறுதான். அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்றேன். மேக் மை ட்ரிப்புக்கும் தனக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை என்று அபி& அபியிடம் ஒரு மின்னஞ்சலும் வாங்கியாயிற்று.!
அதன்படி அந்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்து,  அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப, நானும் ஆகஸ்டு 21ம் தேதி காலையில் busservice@makemytrip.comக்கு எப்பவும்போல, விளக்கம்சொல்லி, நுகர்வோரின் பலம் சொல்லி, மேக் மை ட்ரிப்புக்கு எதிராக ஆன்லைனில் போராட்டம் நடத்தப்படும் என்று லைட்ட்ட்டாக மிரட்டி, .ஒரு மின்னஞ்சல் அனுப்ப..

அடுத்த நாளே மயில்சாமி போன் செய்தார்.

”தேங்க்யூ சுரேகா! மேக் மை ட்ரிப்பிலிருந்து எங்கள் டிக்கட் பணத்தை திரும்பத் தருவதாக மெயில் வந்திருக்கிறது.” என்றார்.

இதுவும் முடிந்தது.


     
       நானும், கேபிளும் எதேச்சையாக செய்யும் விஷயத்தை எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதை நினைக்கும்போது பெருமையாய் இருக்கிறது.

   நமது தனிமனித தட்டிக்கேட்கும் குணம் குறைந்து போயிருப்பதால்தான் இதுபோன்ற அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்று நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

  எங்கள் ஊரில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் இருக்கிறது 1 லட்சம் பேர் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அது பெருமை இல்லை. 1 லட்சம் பேர் பட்டினியாக இருந்திருக்கிறார்கள் என்றும் அர்த்தப்படும். எனினும்..

  தொடர்ந்து போராடுவோம். நம் ஊரின் சாக்கடை நாற்றத்துக்கு செண்ட் அடிக்கமுடியாது. இறங்கித்தான் அள்ளவேண்டும்.

கை கோர்ப்பவர்களுக்கு மீண்டும் நன்றி!


Comments

  1. Red bus ல டிக்கெட் புக் பண்ணி கோயம்புத்தூர் போனேன். ஸ்ரீ கணபதி டிராவல்ஸ் பயணம் நல்லபடியா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆம்..ரெட்பஸ் தவறை ஒத்துக்கொண்டு, பணத்தையும், நஷ்டத்தையும் ஈடாக வழங்கியிருக்கிறார்கள்.

      Delete
  2. From my experience red bus is one of the greatest service provider... Their customer service also good... I

    ReplyDelete
    Replies
    1. சரிதான்...குறைகள் , தவறுகள் ஏற்படுவது சகஜம்தான்...அதை ஒத்துக்கொண்டு வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும்போதுதான் சேவை முழுமையடைகிறது.

      Delete
  3. wow..good to know.. i feel bad that i couldnt able to take active part in ASK..i will be part of your team in future..

    ReplyDelete
    Replies
    1. இந்த எண்ணத்துக்கே நன்றி! எப்போது வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.

      Delete
  4. அண்ணே நீங்களும் கேபிளும் ஒரு சூப்பரான அமைப்பை முன்னெடுத்துச் செல்கிறீர்கள்.
    மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க...!! எனது மற்றும் கேபிளின் சார்பாக!

      Delete
  5. சுரேகாஜி,

    இது போன்று "சராசரி மக்களின் "அத்யாவசிய,அன்றாட தேவைகளில் ஏற்படும் சேவைக்குறைப்பாடுகளை சுட்டிக்க்காட்டி தட்டிக்கேட்கும் சேவை செய்யும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி வவ்வால்! வாங்க நேரில் சந்திப்போம்..!!

      Delete
  6. Superb Sureakha sir. Kudos to you & Cable Shankar... Let us ASK all the cheating with this kind of support from u.

    ReplyDelete
  7. Thanks for sharing this Surekaa ! keep rocking.

    ReplyDelete
  8. மகிழ்ச்சியாக உள்ளது,

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிக்கு மீண்டும் நன்றி

      Delete
  9. சாதனைகள் தொடரட்டும்...!

    ReplyDelete
  10. Fantastic Sundararaman. Continue your efforts

    ReplyDelete
    Replies
    1. நன்றி பேரின்பநாதன்...!!

      Delete
  11. வாழ்த்துகள் சுரேகா

    ReplyDelete
  12. Replies
    1. நன்றி...!! நன்றிக்கும்..!!

      Delete
  13. செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே.......... இல்லை இல்லை....... கேட்டால் கிடைக்கும் வெற்றிச் செய்த்திகளை கேக்கையிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே....... உங்கள் அனுபவத்தை படிக்கையிலே சக்தி பிறக்குது மூச்சினிலே.............

    ReplyDelete
    Replies
    1. கைகோர்த்து செயல்படும்போது...சக்தி அதிகமாகிறது சரவண பிரகாஷ்..!! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

      Delete
  14. இந்த மாதிரி தீர்வுகள் கிடைக்கும் போது தான் நமக்கான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை வருகிறது.

    ReplyDelete
  15. நல்ல முன்னெடுப்பு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே.

    NATO வா இருக்கத விட இப்டி சின்ன சின்ன விஷயங்கள்ல ஆரம்பிச்சா தான் ஒரு பெரிய புரட்சிய செய்ய முடியம்.

    - NATO = No Action Talk Only

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜோசப்பு...!!

      செய்வோம்..!

      Delete
  16. பிரமிக்க வைக்கிறீர்கள் சுரேகா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளா...ஆனா இது ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டியது...நம்ம ஆட்கள் செய்வதில்லை..அதான் பிரச்னை..!!

      Delete
  17. வெல்டன் சுரேகா & கேபிள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! கேபிளுக்கும் சொல்லிவிடுகிறேன்.

      Delete
  18. வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...
    என்றும் உடனிருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உடனிருப்புதான் பலம்..!!

      Delete
  19. உணர்வு மேலீடாக சொல்கிறேன். 'லவ் யூ மக்கள்ஸ்' # கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு மிக்க நன்றி பா.ரா அண்ணே!

      Delete
  20. அன்பின் சுரேகா = மேன் மேலும் பணி தொடர - நுகர்வோர் துயரம் களைய - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனா சார்!

      Delete
  21. நானும் கேட்டால் கிடைக்கும் குழுமத்தின் உறுப்பினர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன்!! தாங்களின் சீரிய முயற்சியால் குழுமத்திக்கு கிடைக்கும் பலனை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க !! வளர்க!!

    இதே போல நான் makemytrip room book செய்து பம்பாய்க்கு சென்றபோது ரூம் புக் ஆகவில்லை என ஹோடேலில் கூறினார்கள் பின்னேர் சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு எங்கேயோ தொலைபேசி பின் மன்னிப்பு கேட்டு ரூம் கொடுத்தார்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி..!!

      வாருங்கள் வடம் பிடிப்போம்!
      வரலாற்றில் இடம் பிடிப்போம்!

      Delete
  22. Dear Sureka and Cable,

    Fantastic! Very proud of you. Ithu PonRa siru muyaRchi thaan periya maaRRathukku Vazhivakukkum. Very sorry for writing in English. Great.

    Anbudan
    Nalina
    Hong Kong

    ReplyDelete
  23. arumai anna - really proud of you and sankar anna

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் சுரேகா அண்ட் கேபிள்

    இந்த நிகழ்வுகளும் மால்களில் நீங்கள் போராடி ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் மிச்சப்படுத்தி வருவதும் பெரும் மதிப்பை ஏற்படுத்தி வருகிறது

    ReplyDelete
  25. வெற்றி தொடர வாழ்த்துக்கள் சுரேகா!

    அன்புடன்,
    ரஞ்சித்

    ReplyDelete
  26. அருமை. கொஞ்சம் தெம்பு கூடி இருக்கிறது. கே.கி.கு விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  27. அட்டகாசம் ! In my experience, redbus travels customer service is good.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. வணக்கம் சுரேகா அண்ணே... நானும் இத்தளத்தின் தொடர் வாசகன். ஒரு சிறு திருத்தம். "redbus.com" அல்ல, அது "redbus.in".

    ReplyDelete
    Replies
    1. வாங்க உதயம்... நீங்க சொல்வது சரிதான்! நான் தவறாக Redbus.com என்று போட்டுவிட்டேன்.. இதோ திருத்திவிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி!

      Delete
  30. நீங்கள் ஒரு உரிமை போராளி.. உங்களின் வெற்றி மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  31. Dear Sureka, Your actions are inspiring and motivative, thanks for your service and efforts .By Sagaa

    ReplyDelete
  32. கேட்டால் கிடைக்கும் - இது மீண்டும் உறுதியாக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் சுரேகா.

    ReplyDelete
  33. இது போல பலர் முயர்ச்சி எடுக்க தயங்கையில் உங்களின் சேவை பாராட்டுகு உரியது.கேபிள் சாருக்கும்,சுரேகா சாருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. என் பிரதிபலிப்பாக பார்கிறேன் ..இத்தனை நாள் நான் உங்களை அறியாமல் இருந்தது வேதனை..ஒன்று கூடுவோம்.... நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!