புதுக்கோட்டை

புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்

மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!

இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!

நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.

நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!





மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்



பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!



கீழ ராஜ வீதி.


புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....


புதிய அரண்மனையின் மேலிருந்து...



நகராட்சிக்கட்டிடம்.

Comments

  1. புதுகையின் பெருமை அறிந்ததே !

    நல்வாழ்த்துகள் சுரேகா

    ReplyDelete
  2. wow! coool photos and intro about pudukotai.

    என்னம்மா ஒரே ஊரா போட்டுத் தள்ளிட்டே இடையிடையே, இருந்தாலும் அனைத்திலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை. அருமையான வாரம்.

    ReplyDelete
  3. இப்பவும் எப்பவும் புதுக்கோட்டை என்ற பெயர் கேட்டமாத்திரத்திலேயே டக்கென்று பிருந்தாவனிலிருந்து காமராஜர் வீதிகள் வரை சென்று திரும்பி வந்துவிடும் மனசு ! :)

    புதுக்கோட்டையின் பெருமைக்கு இன்னும் நிறைய விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக கூற மறந்தது புதுக்கோட்டை மியூசியமும் & ஊருக்கே தண்ணீர் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் புதுக்குளமும் :)

    வாழ்வில் என்னால் மறக்கமுடியாத ஊர் !

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அருமை, அழகைக் கூட்டிக் காட்டுகிறது.

    தொண்டைமான் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே?

    ReplyDelete
  5. வாங்க சீனா சார்!
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. வாங்க தெகா அண்ணா!

    மிக்க நன்றி ! நம்மைச்சுற்றியுள்ள பல வற்றில், ஊர்கள் மிக முக்கியமானது இல்லையா? அதான்!

    ReplyDelete
  7. வாங்க ஆயில்யன்...

    ஆமாங்க! நான் மியூசியத்தை விட்டுட்டேன். மன்னிக்கணும். இத்தனைக்கும் அது என் வீட்டுக்கருகிலேயே இருக்கு! :(

    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. வாங்க சுடுதண்ணி!
    மிக்க நன்றி!

    தொண்டைமான் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன்! :)

    ReplyDelete
  9. நம்ம ஊர் பெருமை லிஸ்ட் பெருசாச்சே.

    திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் ஓவியம், சமணர் படுக்கை. அற்புதங்கள் நிறைந்த நம்ம ஊர் நீங்க சொன்னது போல வாழ்ந்து கெட்ட ஊராப் போச்சு.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான புகைப்படங்கள்..
    வாழத்துக்கள் சுரேகா....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!