Posts

ஓமப்பொடி # 6

Image
இடையில் எதுவுமே பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது தெரியவில்லை. சென்ற மாதம்  ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன. நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப் பேசியிருக்கிறார்கள். இவர்களும...

ஓமப்பொடி # 5

Image
     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்.. கையெழுத்துப் பயிற்சி, கலர் அடிக்கும் பயிற்சி, காசு எண்ணும் பயிற்சி, பூஜை செய்யப் பயிற்சி, புத்தகம் படிக்கும் பயிற்சி, பாட்டுப்பாடும் பயிற்சி, படம் வரையப் பயிற்சி, பறவை பார்க்கப் பயிற்சி போட்டோ எடுக்கப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி, பொருள் அடுக்கப் பயிற்சி இசை கேட்கப் பயிற்சி இசை வாசிக்கப் பயிற்சி சதுரங்கப் பயிற்சி சக்கரக்கால் பயிற்சி சோறு உண்ணப் பயிற்சி யோகா பயிற்சி அபாக்கஸ் பயிற்சி என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள். இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் எ...

ஒரு பேரீச்சையும் , இரண்டு மிக்ஸிகளும்..!!

Image
     இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் கேட்டால் கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது இந்த உலகம்.! இந்த ஏப்ரல் 14 அன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். அங்கு ஒரு லயன் டேட்ஸ் பேரீச்சை அரைக்கிலோ பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தாயிற்று.! பெட்டியை பிரிக்காமலேயே வைத்திருந்து, 19ம் தேதி அதைப் பிரித்து ஒரு பழம் எடுத்து தின்னலாம் என்று பார்த்தால், முதல் பழத்திலேயே வாலைக்குழைத்துக்கொண்டு, மூக்கை நீட்டியது ஒரு குட்டி வெண் புழு ஒன்று! திடுக்கிட்டுப் போனேன். சரி.. ஒரு பேரிச்சையில் தான் இருக்கும்போல என்று அடுத்ததை எடுத்தால் அதில் ஒரு கருப்பு நிற குட்டீஸான வண்டு.. புழுவின் பெரியக்கா போலிருக்கிறது. அப்புறம் சில பழங்கள் சுத்தமாக இருந்தது. மீண்டும் புழு..! ஆஹா.. பழைய சரக்கை வாங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்து டப்பாவைப் பார்த்தேன். தெளிவாக மார்ச் 2012 என்று போட்டிருந்தது. ஆக இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதில் நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் ...

குதிரை(க்கொம்பு) யாவாரம் -2

Image
முந்தாநாள்சொன்னபடி … என் மகளுக்கு தன் பள்ளியில் இடம் இல்லையென்று அந்த முதல்வர் சொன்ன பின், தங்கமணி அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வி அவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து, ‘பட்டாக்’ என்று இருகரம் கூப்பி வணங்கி….தயவுசெஞ்சு போய்ட்டு வாங்க என்றார். ‘Get out’ என்று நாகரீகமாகச் சொன்னதை மனம் ஏற்க மறுத்தது. மேலும் நான் பேச ஆரம்பிக்க.. ஒரு பிரின்ஸிபால்…நானே இறங்கி வந்து உங்ககிட்ட கைகூப்புறேன். அதுக்கப்புறமும் என்ன இது ….திரும்பத்திரும்ப கேக்குறீங்க? என்று குரலை உயர்த்த… அந்த ‘நானே’ வில் இருந்த அகந்தை, என்னை அசைத்துப்போட்டது. குரலை உயர்த்தலாம் என்று நினைக்கும்போது, காலைக்கட்டிக்கொண்டு தான் படித்த அத்தனையையும் உளறிக்கொண்டிருந்தாள் என் வீட்டு தேவதை..!! எப்போதும் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் ருத்ர தாண்டவமாடும் சுரேகா என்ற மானஸ்தன், ’பவ்’ என்றுகூடக் கத்தமுடியாமல் நொந்துகொண்டே வெளியில் வந்தான் . நடந்தவை எவற்றையும் விளங்கிக்கொள்ளமுடியாமல், நாளைலேருந்து ’அண்ணன் ஷூல்லதான் நானும் பதிக்கப் போதேனா?’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாணவியாக வேண்ட...

குதிரை(க்கொம்பு) யாவாரம்

Image
      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!! தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம். ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க! உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.       ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண...