ஈரோட்டுப் பெண்கள்
கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..
அற்புதமான ஊர் !
வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!
வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!
வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்
அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!
வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு விற்கும் புத்தகப்பிரியர்கள்!
யோகாவில் வென்றுவிடலாம் என்று வாழ்வியல் சொல்லும் அற்புத மாணவிகள்!
இவர்தான் முதலாளியா? என்று வியந்தபின் வணங்கி நிற்கும், தோற்றத்தில் எளிமை பூண்ட இயல்பான ரசனைக்காரர்கள்!
ஒரு மாபெரும் துணிக்கடையின் தொழிலாளர்களை வேலை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிகம் படிக்காத பெண்கள்!
ஆனால் எத்தனை தெரசாக்கள் ? எடுத்தவுடன் உண்மைசொல்லும் நம்பிக்கை!
நான் சந்தித்த நங்கைகளில் சிலரது வாழ்வுத்துளிகள், படித்தபின் தான் புரியும், இந்த கணிணிக்கு முன்னால் அமர்ந்து கலாய்த்துக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று!
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் அம்மாவின் கையை அப்பா கோபத்தில் வெட்டிவிட்டு தற்கொலையும் செய்துகொண்டபோது அவளுக்கு வயது 5 ! ஒற்றைக்கையை இழந்துவிட்டு அம்மா பட்ட துன்பத்தை இன்றுவரை மறக்காமல் , தற்போது உடல்நலமின்றி இருக்கும் அம்மாவுக்காக திருமணமே வேண்டாமென்று புலனடக்கி வாழும் நங்கை ஒருத்தி!
கட்டிய காதல் கணவன் இதோ வெளியே சென்றுவருகிறேன் என்றுசென்றுவிட்டு உயிரற்று திரும்பி வர, இவளோ நிறைமாத கர்ப்பம்!கணவன் இறந்த மூன்றாம் நாள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு,அம்மா வீட்டோடு வந்துவிட, அந்தப்பிள்ளையை வளர்ப்பதற்காக யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாமென்று அண்ணன் பார்த்துவைத்த வயதான ஆளை சீர்திருத்தத்திருமணம் செய்ய , அவளது இளமை அவனை சந்தேகப்பட வைக்க, தைரியமாக பிள்ளக்காக அவனைவிட்டு வெளியே வந்து, வேலைக்கு வந்து சமூக அவமானம் வாங்கும் நங்கை
இன்னொருத்தி !
சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் மறுமணம் செய்து கொண்ட அம்மா, இன்னொரு மகனைப்பெற்று , அவனை மட்டும் நன்கு வளர்த்து, முதல் கணவனுக்குப் பிறந்த இவளை வேலைக்காரியாகவே மாற்றி (பெற்ற அம்மா!) இவள் பருவமடைந்தபின் தன் கணவனுக்கே தீனியாகக்கொடுக்க முயற்சிக்க, இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என்று உறவுகளிடம் தஞ்சமடைந்த அவளுக்கு இன்னும் 10 நாளில் ஒரு நல்ல மனிதனுடன் பெரியோர் பார்த்துவைத்த திருமணம்.! அதைக்கெடுக்கும் முதல் வரிசையில் இவளது ...அம்மா! அதையும் மீறி சமூகத்தில் நல்லவளாக வாழமுடியும் என்று தைரியம் கொண்ட நங்கை வேறொருத்தி!
அம்மாவின் சகோதரனே கணவனாக வாய்க்க, அற்புதமான இல்லறம் ! அதில் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள்! சந்தோஷமான வாழ்க்கையில் ஒருநாள், பல்வலியென்று மருத்துவமனை போன அவன் இறந்ததாக செய்திவர, இடிந்துபோனாள் இவள் ! வெளியுலகமே தெரியாத இவளுக்கு முதலில் வேலை எப்படி கேட்பதென்றே தெரியாது! அந்தப்பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தன்னைத்தேய்த்துக்கொள்ளும் நங்கை மற்றொருத்தி!
தந்தையை பெரியப்பா குடும்பம் கொன்றுவிட, அவர்களை பழிவாங்குவதுதான் லட்சியம் என்று மூத்த மகனை வளர்க்கும் அம்மாவின் ஆசைக்கு, அண்ணன் வாழ்வு பாழாகிவிடக்கூடாது என்று
தங்கையாக இருந்து வருந்தி, அவனுக்கு புத்தி சொல்லி, மெதுவாக அவனை திருத்தி, வடமாநில நகரத்துக்கு அம்மாவுக்கு தெரியாமல் அனுப்பி, அவனுக்கு பதிலாக, குடும்பப்பொறுப்பை எடுத்து நடத்தும் நங்கை இன்னொருத்தி!
ஒரு முக்கியத்தகவல்...
இவர்கள் அனைவரும்....அந்த நிறுவனத்தின் முதல் தர ஊழியர்களாக பட்டியலிடப்பட்டு , பதவி உயர்வு பெற்றவர்கள் ! மேலும் இவர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார்தான் 'கடவுள்' !!

பெண்கள் மேலிருந்த மதிப்பு மிகமிக அதிகமாக கூடிப்போயிருக்கிறது!இவர்கள் , என்னுடன் பேசிய பிறகு பாரம் குறைந்ததாகச்சொன்னார்கள்.ஆனால் எனக்கு ஏறியது பாரமும், மதிப்பும்தான்!
-மற்றவருக்காக வாழும் ஈரோட்டு நங்கைகளே! ..உங்களுக்கு , இந்தப்பதிவு சமர்ப்பணம்.
தலை வணங்குகிறேன்
ReplyDeleteநம்ம ஊரைப்பத்தி பெருமையா சொன்னதுக்கு எங்க ஊர் சார்பா நன்றி சொல்லிக்கிறேங்க..
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete//தலை வணங்குகிறேன்//
நன்றி சிவா!
ஈரோட்டு மக்களை பெருமைப்படுத்திய தங்களை ஈரோட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். நன்றி.
ReplyDeleteILA(a)இளா said...
ReplyDelete//நம்ம ஊரைப்பத்தி பெருமையா சொன்னதுக்கு எங்க ஊர் சார்பா நன்றி சொல்லிக்கிறேங்க..//
உண்மைக்கு நன்றியா?
இருந்தாலும் ஏத்துக்கிறேங்க!
இன்னும் இங்கதாங்க இருக்கேன்..ஈரோட்டில்..!
மனது கனத்துப் போனாலும் வாழ்க்கையை எதிர் கொள்ளத் துடிக்கும் அவர்களின் தன்னம்பிக்கை நிறைவளிக்கிறது.
ReplyDeleteஅந்தப் பெண்களுக்கு ஒரு சல்யூட்!
ReplyDeleteSureKa,
ReplyDeleteWell done!
Will you add me in your team :-)?
//இவர்கள் , என்னுடன் பேசிய பிறகு பாரம் குறைந்ததாகச் சொன்னார்கள்.ஆனால் எனக்கு ஏறியது பாரமும், மதிப்பும்தான்!//
This is what exactly happen to someone in the line of counseling people. Therefore, is your next Avatar a counselor :-) ??
மனசு கனக்குது.ஆம்,நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட்வர்கள் இவர்களைப் பார்கரப்ப
ReplyDeleteகண்மணி said...
ReplyDelete//மனது கனத்துப் போனாலும் வாழ்க்கையை எதிர் கொள்ளத் துடிக்கும் அவர்களின் தன்னம்பிக்கை நிறைவளிக்கிறது.//
ஆமாம் கண்மணி..! அவர்கள் நம்பிக்கைமட்டும்தான் உலகம் புரட்டும் நெம்புகோல்.!
தங்கள் வருகைக்கு நன்றி!
தாமோதர் சந்துரு said...
ReplyDelete//ஈரோட்டு மக்களை பெருமைப்படுத்திய தங்களை ஈரோட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். நன்றி.//
உண்மைக்கு நன்றியா?
இருந்தாலும் ஏத்துக்கிறேங்க!
இன்னும் இங்கதாங்க இருக்கேன்..ஈரோட்டில்..!
ரிப்பீட்டேய் ! :)
பாச மலர் said...
ReplyDelete//அந்தப் பெண்களுக்கு ஒரு சல்யூட்!//.
வாங்க!
உங்கள் சார்பா இன்னிக்கே கொடுத்துட்டேன்.
Thekkikattan|தெகா said...
ReplyDelete//SureKa,
Well done!
Will you add me in your team :-)?//
நீங்கள் ஆரம்பம் முதல் என் அணியில் இருக்கிறீர்கள் அண்ணா!
//This is what exactly happen to someone in the line of counseling people. Therefore, is your next Avatar a counselor :-) ??//
கண்டிப்பாக..! இந்த ஜென்மத்திலேயே எல்லாம் முடித்துவிடவேண்டும்:-)
இப்பத்தான் இலங்கை வந்த பிறகு அடுத்தவர்களின் பதிவையும் படிக்க நேரம் கிடைத்தது.
ReplyDeleteஉங்களின் இந்தப் பதிவு படித்து மனம் கணத்தாலும் அந்தப் பெண்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது.
புதுகைத் தென்றல் said...
ReplyDelete//இப்பத்தான் இலங்கை வந்த பிறகு அடுத்தவர்களின் பதிவையும் படிக்க நேரம் கிடைத்தது.//
ஆஹா..சொல்லவே இல்ல!
///உங்களின் இந்தப் பதிவு படித்து மனம் கணத்தாலும் அந்தப் பெண்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது.//
கண்டிப்பா..அவர்களின் தன்னம்பிக்கைக்கு முன்னால் எல்லா தலைவர்களும் தூசுதான்..!
புல்லரிக்குது!
ReplyDeleteசில பெண்களின் வாழ்க்கையை தவிர எவ்வளவு அழகாக ஈரோட்டை யாராலும் விமர்சிக்க முடியாது,
பெரியாரின் வரிகள் ஆங்காங்கே எழுதி வைத்திருப்பதால் ஈரோட்டு பெண்களுக்கு இயற்கையிலே சுயமாரியாதை கொஞ்சம் ஜாஸ்தி,
அதை ஒரு ஈரோட்டு காரனாக பெருமையுடன் சொல்கிறேன்
வால்பையன்
ரொம்ப கொடுரமா இருக்கு சுரேகா.. ஆனாலும் உங்கள் கட்டுரையில் ஆண்களால் பெண்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை பற்றி இருக்கிறது. பெண்களால் ஆண்களுக்கு நேர்ந்துள்ள பாதிப்புகளையும் எழுத வேண்டும். அது தான் நடுநிலைக்கு அடையாளம். நம் சமூகத்தில் பெண்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களுடைய அறியாமையும் அல்லது கோழைத்தனமும் துணிந்து முடிவெடுக்கத் தயங்கும் போக்கும்தான் முதல் காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteவால்பையன் said...
ReplyDelete//பெரியாரின் வரிகள் ஆங்காங்கே எழுதி வைத்திருப்பதால் ஈரோட்டு பெண்களுக்கு இயற்கையிலே சுயமாரியாதை கொஞ்சம் ஜாஸ்தி,//
வருகைக்கு நன்றிங்க!
உங்கள் கோணம் மிகச்சரி..! இது நீங்கள் சொன்ன பின் தான் எனக்கு புரிந்தது.!
Thamizachi said...
ReplyDelete//உங்கள் கட்டுரையில் ஆண்களால் பெண்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை பற்றி இருக்கிறது. பெண்களால் ஆண்களுக்கு நேர்ந்துள்ள பாதிப்புகளையும் எழுத வேண்டும். அது தான் நடுநிலைக்கு அடையாளம்.//
வாங்க தமிழச்சி!
அழைப்பிற்கு இணங்கி வந்ததுக்கு நன்றி!
இதில் பெண்கள் பங்கும் கூர்ந்து கவனித்தால் தெரியும்.!
அம்மா,பையனை கொலை செய்ய வளர்ப்பது போன்று!
மேலும், ஆண்கள் பக்கத்தையும் கட்டாயம் எழுத உள்ளேன்.
அடிக்கடி வந்து போங்க!
மிக அருமை சுரேகா. மனது கனத்துப் போய்தான் இருக்கிறது.
ReplyDeleteGood to read ur article, I am proud to belongs to Erode. Expecting more from you.
ReplyDeleteGuna
நங்கைகள் பற்றி படித்து மனம் கனத்தது சுரேகா.
ReplyDelete//மேலும் இவர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார்தான் 'கடவுள்' !! //
இது நச் வரிகள்... ஆனால் கடவுள் , தனி மனிதனை போற்றி சொல்லுதல் பெரியார் கூட வேண்டாம் என்று சொல்லுவார்.. "இவர்களின் மனதில் பெரியார் வீற்றிருப்பது தெரிகிறது " என்று சொல்லியிருக்கலாம்
தோழி தமிழச்சி சொன்னது போல, ஆண்களுடன் நீங்கள் ஏதேனு கருத்து பறிமாற்றல் செய்திருந்தால் அதையும் பதியவும்
நல்ல பதிவு
வீ எம்
பரவாயில்லையே!
ReplyDeleteநம்மூரு புள்ளைகளையும் ஈரோட்டுக்கு அனுப்பி பயிற்ச்சி எடுக்கச்சொல்லனும்...!!
அருமையான கட்டுரை. அந்த பெண்களுக்கு மேலும் தைரியத்தையும் உங்களுக்கு நன்றியையும் கூறிக்கொள்கிறேன் ஒரு ஈரோடுக்காரன் என்ற முறையில். சும்மா பேலன்ஸ் செய்யவேண்டும் என்பதற்காக ஆண்களைப்பற்றியும் சொல்ல வேண்டும் என்று எந்த கட்டாயத்திற்கும் உள்ளாகாதீர்கள். பிறகு அது செயற்கையாகப்போய்விடும்.
ReplyDeleteRoyal salute to All
ReplyDeleteRegards
ஆஹா ஆஹா!!! ஈரோடு பொண்ணுங்க சைடு ஹேர்பின் குத்தற ஸ்டைல வச்சே கண்டுபிடிச்சிடலாம்...
ReplyDeleteசூப்பர் ஊரு :)))
அதுக்குப் பக்கத்துல இருக்கற நாமக்கல் அதை விட சூப்பர் ஊரு ;)))
எப்ப பாத்தாலும் லேட்டா வந்து வெளில நிக்கறதே என் வேலையாப் போச்சி..
ReplyDeleteஹ்ம்ம் ரொம்ப பெருமையா இருக்குங்க. நன்றி!
நான் பிறந்தது ஈரோட்டில் தான்... ஆனால் இவர்கள் பக்கத்திலும் நிற்கமுடியாது! சல்யூட் என்பதே சரியான வார்த்தை!
ReplyDeleteநந்தா said...
ReplyDelete//மிக அருமை சுரேகா. மனது கனத்துப் போய்தான் இருக்கிறது.//
வாங்க...!
நன்றி..!
ஆமாம்! எனக்கு 2 நாட்களுக்கு அப்படி இருந்தது!
Guna said...
ReplyDelete//Good to read ur article, I am proud to belongs to Erode. Expecting more from you.//
நன்றிங்க!
வருகைக்கும் வாழ்த்துக்கும்!
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDelete//மனசு கனக்குது.ஆம்,நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட்வர்கள் இவர்களைப் பார்கரப்ப//
வாங்க வாங்க!
கண்டிப்பா..நாமெல்லாம் பல மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
வீ. எம் said...
ReplyDelete//இது நச் வரிகள்... ஆனால் கடவுள் , தனி மனிதனை போற்றி சொல்லுதல் பெரியார் கூட வேண்டாம் என்று சொல்லுவார்.. "இவர்களின் மனதில் பெரியார் வீற்றிருப்பது தெரிகிறது " என்று சொல்லியிருக்கலாம்/
வாங்க!
சரியா கவனிச்சு சொல்லியிருக்கீங்க!
அதை யோசிச்சுதான் எழுதினேன். ஒரு முரண்பாடான வார்த்தையாக, மற்றும் ஒரே வார்த்தையில் விளங்குவதற்காக.!
நீங்கள் கூறும் விதமும்..மிகச்சரியாக அமையும்! நன்றி!
கருப்பன்/Karuppan said...
ReplyDelete//பரவாயில்லையே!
நம்மூரு புள்ளைகளையும் ஈரோட்டுக்கு அனுப்பி பயிற்ச்சி எடுக்கச்சொல்லனும்...!!//
வாங்க கருப்பன்!
அவர்கள்கிட்ட பேசினாலே போதும்..!
பயிற்சிதான்.!
Anonymous said...
ReplyDelete//அருமையான கட்டுரை. அந்த பெண்களுக்கு மேலும் தைரியத்தையும் உங்களுக்கு நன்றியையும் கூறிக்கொள்கிறேன//
நன்றிக்கு நன்றிங்க அனானி!
//ஒரு ஈரோடுக்காரன் என்ற முறையில். சும்மா பேலன்ஸ் செய்யவேண்டும் என்பதற்காக ஆண்களைப்பற்றியும் சொல்ல வேண்டும் என்று எந்த கட்டாயத்திற்கும் உள்ளாகாதீர்கள். பிறகு அது செயற்கையாகப்போய்விடும்.//
அப்படி இல்லை..! ஆனால் ஆண்களையும் சந்தித்தேன். பேசினேன்.
என்றாவது ஒரு நாள், சந்தர்ப்பத்தில் எழுதுவேன்..இப்ப எழுதினால் கண்டிப்பா - நீங்கள் சொல்வதுபோல்- பேலன்ஸ் செய்வதாகத்தான் ஆகிவிடும்.!
இம்சை அரசி said...
ReplyDelete//ஆஹா ஆஹா!!! ஈரோடு பொண்ணுங்க சைடு ஹேர்பின் குத்தற ஸ்டைல வச்சே கண்டுபிடிச்சிடலாம்...
சூப்பர் ஊரு :)))//
வாங்க! 'ஆனந்த விகடன் புகழ்' இம்சை அரசி அவர்களே!
ஆஹா..இதை நான் கவனிக்கலையே!
//அதுக்குப் பக்கத்துல இருக்கற நாமக்கல் அதை விட சூப்பர் ஊரு ;)))//
ஆமா.! இது பக்கத்து இலை பாயாசம் மாதிரி இல்லை!? :-))))
காயத்ரி said...
ReplyDelete//எப்ப பாத்தாலும் லேட்டா வந்து வெளில நிக்கறதே என் வேலையாப் போச்சி..
ஹ்ம்ம் ரொம்ப பெருமையா இருக்குங்க. நன்றி!//
வாங்க கவிதாயினி!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!
சேதுக்கரசி said...
ReplyDelete//நான் பிறந்தது ஈரோட்டில் தான்... ஆனால் இவர்கள் பக்கத்திலும் நிற்கமுடியாது! சல்யூட் என்பதே சரியான வார்த்தை!//
வாங்க! நல்வரவு!
ரொம்ப நல்ல ஊருங்க..! அன்பான மனிதர்கள் அதிகமா இருக்காங்க!
படிக்கும் பொழுதே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க!
ReplyDeleteநல்ல பதிவு!!
நன்றிகள் பல..
ReplyDeleteAll Hindus must read this
ReplyDeletehttp://nadunilaiyanavan.blogspot.com/
ஊர் சார்பா நன்றி.நாட்டாமை அண்ணனுக்கு ஒரு எளனி வெட்டு
ReplyDeleteஈரோட்டு மக்களை பெருமைப்படுத்திய தங்களை ஈரோட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். நன்றி.நானும் ஈரோட்டுகாரந்தான்.
ReplyDelete