ஈரோட்டு சாப்பாடு.

ஈரோட்டில் சில நாட்களா வேலை நிமித்தமா இருக்கறதால,
சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு!

மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனாலயும்,ஒரே ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கவேண்டாம்னு நினைச்சும், பதிவுலகத்துக்கு ஈரோட்டு உணவுவிடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஊரில், ஒரு ஏரியாவை சுத்தி சுத்தி...

பேருந்து நிலையத்திலிருந்து இறங்கின உடனேயே எதிரில் தெரிவது, கண்ணன் உணவகம்...உயர்தரம்னு இப்ப எல்லாருமே போட்டுவிடுவதால். உள்ளே போனால், பார்க்க நல்லா இருக்கு !...சாப்பாடு சூப்பர்ன்னு சொல்ல முடியாது...ஓகே! உள்ளே மற்ற விஷயங்கள் அழகா இருக்கு!

ஊருக்குள்ள ஆர்.கே.வி ரோட்டில்.. இரண்டு உணவகங்கள் உள்ளன.! (எனக்குத்தெரிஞ்சு) ஒண்ணு பாரத் - உணவும், கவனிப்பும் ரொம்ப சுமார்.!அதனால் அதைப்பற்றிய விமர்சனமே வேண்டாம். ஆனால் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்பவர் நாம் சொல்வதை ஆமோதித்து
கேட்டுக்கொள்கிறார். அது மட்டும்தான் கூட்டல்புள்ளி (+.) :-)

அதை அடுத்து ஜோதி உணவகம் இருக்கு..! மிகவும் அருமையான உணவும், நல்ல காபியும், மனிதாபிமானமுள்ள முதலாளியும்...
அன்று முகூர்த்த நாள், காலை உணவு சாப்பிடப்போனபோது, சரியான கூட்டம் , என்னடா செய்வது என்று யோசித்து நிற்கும்போது எங்களுடன் வந்த ஒரு குழந்தைக்கு மட்டுமாவது இட்லி வாங்கிவிடலாம்னு நான் உள்ளே சமையலறைக்கு போய்விட்டேன். அங்குதான் அதன் முதலாளி நின்றிருந்தார். அவரிடம் 'இரண்டு இட்லி மட்டும் குழந்தைக்கு வேண்டும்' னு கேட்க, சரி தருகிறேன்னு. உடனே பார்சல் கட்ட ஆரம்பித்துவிட்டார். பார்சலை கையில் தந்துகொண்டே கேட்டார்..

"நீங்க சாப்பிட்டீங்களா?"

ரொம்ப சோகமா, நானும்..."இல்லங்க..கூட்டமா இருக்கு' ன்னேன்.

"அப்ப என்ன வேணும்னு சொல்லுங்க..! உங்களுக்கும் பார்சலே கட்டித்தரேன். காத்திருந்து சாப்பிடணும்னா லேட்டாயிடும்!' என்று பரிவுடன் சொன்னார்.
நினைவில் நின்றவர்!

ஆர் கே வி ரோட்டுக்கு பின்புறம்..திருச்சி கபேன்னு ஒரு பிரபல உணவகம்.முதலில் அங்க மதிய சாப்பாட்டுக்கு போய் டோக்கனை வாங்கிக்கொண்டு உட்கார இடம் தேடினால், எல்லாம் நிரம்பி இருக்கு...உள்ளே ஒரு சாப்பாட்டு அறை இருக்கு.. போங்கன்னு சொல்ல, அம்புக்குறி போட்டிருந்த பகுதியை நோக்கி நடந்தால்..முதலில். சமையலறை . அப்புறம் தண்ணீர் பிடிக்கும் பகுதி...கொஞ்சம் தள்ளி இடதுபுறம் காபி போடும் பகுதி..அதையும் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய ஹால்..! அதிலும் முழுசா வாடிக்கையாளர்கள்.! (மணிரத்னத்தின் 'குரு' படத்தில் அபிஷேக் நம்மகிட்ட பேசிட்டு மைதானத்தை பார்ப்பார்..மைதானமே மக்கள்
வெள்ளத்தால் நிரம்பி ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமே..அந்த அதிர்வை உணர்ந்தேன்) எங்களப்போல நின்னுக்கிட்டே இன்னும் பல பேர்.! அடேயப்பா ன்னு ஆகிப்போச்சு! ருசியான அளவு சாப்பாடுதான்.! ஆனா அந்த கூட்டம்...அப்பப்பா! அங்கு சாப்பிட்ட கேசரியும் காபியும் அற்புதம். சாப்பிட்ட எல்லோரும் சாப்பிடாத எல்லோருக்கும் பரிந்துரைக்கும் உணவகம்!

அடுத்து, ஸ்ரீதேவி மெஸ்...திருச்சி கபேக்கு மிகவும் அருகில்..2 கடை தள்ளி இருக்கும்..காலை 11 மணிக்கு போனாலும் ஏதாவது டிபன் இருக்கும். பரோட்டா நல்ல மென்மையா இருக்கும். தோசை வீட்டுத்தோசைமாதிரி..! பந்தி பரிமாறுவது மாதிரி வரிசையா மேசை போட்டு வச்சிருப்பாங்க! சாப்பாடு சுமார்தான்.! ஆனா அளவில்லா சாப்பாடு! ஒரு 25-30 வயது பையன் மிகவும் நன்றாக கவனிப்பார். ஒரு 40+ ஆளுக்கு என்ன கஷ்டமோ..! அவர் பில் கொடுத்து நாம் சாப்பிடுவது மாதிரி ஒரு அடுப்பு முகத்தோடயே அலைவார். முதலாளியிடம் சொன்னால்.. அதை ஏன் கேக்குறீங்க.! என்னால் ஒன்னும் செய்யமுடியாது. இல்லைன்னா வேலையை விட்டுட்டு போய்டுவேன்னு மிரட்டுறார்.இவுங்களை நம்பிதான் தொழில் பண்ணவேண்டியிருக்குன்னு ஒரே அழுகாச்சி!

அப்புறம் கலைமகள் பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் பட்டேல் தெருவுக்கு அருகில் ஒரு சின்ன டிபன் கடை! மருத்துவமனை நோயாளிகள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள்!..காலையும் , இரவும் சரியான கூட்டம். 4 பென்ச்தான்.! டிபன் நல்ல சுவை! அதிலும் அந்த கொத்து பரோட்டா ! நைஸ் எனப்படும் ஈரோட்டு ஸ்பெஷல் தோசை ஆஹா..! மிகவும் சின்ன..ஆனால் பெரிய சுவை உள்ள உணவகம்!

அதே சாலையில் போனால்....ஒரு பிள்ளையார் கோவில் உள்ள பிரதான சாலையில் ( சாலை பேரு மறந்து போச்சு) நிறைய அசைவ உணவகங்கள் உள்ளன! அதை அடுத்து உள்ளதுதான். நளன் உணவகம்.!ஈரோட்டுவாசிகள் எத்தனைபேருக்கு இதைப்பற்றித்தெரியும்னு தெரியலை.!
முழுக்க முழுக்க சித்த மருத்துவமுறைப்படி.. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரித்து வழங்கும் கடை! கிழமைக்கு ஒரு மெனு செய்து வைத்து அதன் படி உணவிடுகிறார்கள்! நாங்கள் போனபோது வெந்தய தோசையும், ஆப்பம் தேங்காய்ப்பாலும்,
காய்கறி அடையும் சாப்பிட்டோம். அங்கு பல்வேறு மூலிகை உணவுகள் உள்ளன! அதன் நிறுவனர்.. SS மியூசிக்கில் வேலை பார்க்கிறாராம்.! 'குருஜி' என்றார்கள்.

கடைசியாக ஐஸ்கிரீம்..!
ஈரோட்டில்.SOFTY ICE CREAM PARLOUR என்ற ஒரு கடை உள்ளது. ஆஹா! என்ன ஒரு சுவை! அதையும் விஞ்சி..அதில் வாடிக்கையாளர் அமர அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், இருக்கைகள் மற்றும் ப்ளாஸ்மா டிவி என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்..நல்ல கூட்டம் வருகிறது..குறிப்பாக காதலர்கள்!

இன்னும் சின்னச்சின்ன உணவகங்கள்ல சாப்பிட்டிருந்தாலும்..இவைதான் மனசுல நின்னது மற்றும் ஈரோட்டுக்காரங்க யாராவது இதைப்படிச்சுட்டு போய் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது!








Comments

  1. நல்லா எழுதியிருக்கீங்க. எல்லோரும் என்னத்தான் சாப்பாட்டு பத்தியும், ஹோட்டலைப்பத்தியும் எழுதறேன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க.

    இப்ப நீங்களும் நம்ம செட்டுல சேர்ந்துகிட்டீங்க. பாருங்க பஸ் சார்ஜ் + ஹோட்டல் ஜார்ஜ் கேட்டு பின்னூட்டங்கள் கூடிய விரைவில் வரும்.

    ReplyDelete
  2. ஒரு காலத்துல கோயம்புத்தூர்ல சுப்பு மெஸ்ல சாப்பிடும் ஞாபகம் வருது.ருசி மற்றும் உழைப்பின் உயர்வை நேரில் பார்த்த விசயம்.

    ReplyDelete
  3. சுந்தர்,

    கொல்லம்பாளையத்துல ஒரு அரசு மீன் உணவகம் இருக்குங்க. அதுல முள்ளே இல்லாத மீன் வருவல் கிடைக்கும் செம டேஸ்ட் கல்லூரி படிக்கும்போது நண்பர்களோட போய் சாப்பிட்டுருக்கேன். சும்மா டேஸ்ட் பண்ணலாம்னு போய் மொத்தமா கடையே காலி பண்ணிட்டு வந்தோம்.
    இன்னும் இருக்குதான்னு தெரில.

    ReplyDelete
  4. அட்டகாசம்!

    பதிவைத்தான் சொன்னேன்.
    எல்லாம் நமக்கு வேண்டப்பட்ட முக்கிய சமாச்சாரம்.

    ஆமாம். வடை எந்தக் கடையிலே நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை எழுதி இருக்கக்கூடாதா?

    நான் பொறந்தது கரூர். அதனால் ஈரோட்டு மேலே ஒரு அன்பு:-)

    ReplyDelete
  5. Balakrishnan R Wrote...
    Anbu thanbi,

    really good,

    Naanum en thambiyudan payanam seythathu pol erunthathu,

    en thambi sundarin Pesum style apadiya erunthahu, mikavum arputham

    annaa

    ReplyDelete
  6. புதுகைத் தென்றல் said...

    //நல்லா எழுதியிருக்கீங்க. எல்லோரும் என்னத்தான் சாப்பாட்டு பத்தியும், ஹோட்டலைப்பத்தியும் எழுதறேன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க.//

    உங்களைப்பாத்துதான் நானே கத்துக்கிட்டேன்.

    //இப்ப நீங்களும் நம்ம செட்டுல சேர்ந்துகிட்டீங்க. பாருங்க பஸ் சார்ஜ் + ஹோட்டல் ஜார்ஜ் கேட்டு பின்னூட்டங்கள் கூடிய விரைவில் வரும்.//

    வரட்டும்...வரட்டும்..ரேட்டெல்லாம் போட்டு கலக்கிருவோமுல்ல!

    ReplyDelete
  7. நட்டு said...

    //ஒரு காலத்துல கோயம்புத்தூர்ல சுப்பு மெஸ்ல சாப்பிடும் ஞாபகம் வருது.ருசி மற்றும் உழைப்பின் உயர்வை நேரில் பார்த்த விசயம்.//

    வாங்க!..ஆமாங்க!

    உணவகம் நடத்துறது ஒண்ணும் சாதாரண விஷயமில்லை.!

    ReplyDelete
  8. துளசி கோபால் said...


    //ஆமாம். வடை எந்தக் கடையிலே நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை எழுதி இருக்கக்கூடாதா?//

    வாங்க!
    கண்டிப்பாங்க!

    திருச்சி கபேலயும்...நளன்லயும்தான். வடை அருமை.!

    ReplyDelete
  9. தம்பி said...



    //கொல்லம்பாளையத்துல ஒரு அரசு மீன் உணவகம் இருக்குங்க. அதுல முள்ளே இல்லாத மீன் வருவல் கிடைக்கும் செம டேஸ்ட் கல்லூரி படிக்கும்போது நண்பர்களோட போய் சாப்பிட்டுருக்கேன்.//

    என்ன கொடுமைன்னா...நான் பிறந்ததிலருந்தே சைவம்..! அதான் அசைவத்தைப்பத்தி ரொம்ப தெரியலை!

    ReplyDelete
  10. Balakrishnan R Wrote...
    //Anbu thanbi,

    really good,

    Naanum en thambiyudan payanam seythathu pol erunthathu,

    en thambi sundarin Pesum style apadiya erunthahu, mikavum arputham//

    நன்றிங்ண்ணா!

    ReplyDelete
  11. அடப் பாவிங்களா,

    அப்ப ஈரோட்டுக்கு உணவு விடுதிகளின் தரக் கட்டுப்பாடு செய்ய போனீங்களா, இல்லை வேலை பார்க்கப் போனீங்களா...

    ஒரு இடத்தையும் விட்டுவைக்கலயா? புதுசா ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போடுற மாதிரி ஏதும் திட்டமிருக்கா?? :))

    ReplyDelete
  12. நளன் உணவகத்துல வாழைப்பூ வடை போடுவாங்க. அதைசாப்புட்டுப்பாருங்க சூப்பரா இருக்கும்.

    ReplyDelete
  13. முக்கியமான சில உணவகங்கள் உங்களுக்கு தெரியாம இருக்கு சுரேகா. ப்ரஃப் ரோட்ல கலைமகள் பள்ளிக்கு முன்னடி சந்துல சங்கர் மெஸ் இருக்கு.எங்கள் நிறுவனத்துக்கு வரும் பெரும் நிறுவன உயர் அதிகாரிகள் சிலர் மறுமுறை வரும் போது சங்கர் மெஸ்ஸில் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பார்கள். அது அசைவத்துக்கு பெயர் பெற்ற உணவகம் என்பதால் நான் அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் அசைவப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடம்.

    அடுத்து சஞ்சய் நகர் :) அருகில் ரங்கீலா பஞ்சாபி ஹோட்டல். சைவம் அசைவம் என்று எல்லாமே நல்லா இருக்கும். தாபாவில் கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். அங்கு சாப்பிட வருபவர்கள் தயிர் சாதமும் பால் பாயசமும் சாப்பிட தவறமாட்டார்கள். அபப்டி ஒரு சுவை.

    அடுத்து கொங்கு புரோட்டா ஹோட்டல். அட அட அட.. எப்டி தான் செய்வாங்களோ? செம டேஸ்ட். மாலை நேரத்தில் பார்சல் வங்குபவர்களை பார்த்தால் ரயில் டிக்கட் வாங்க இருக்கும் க்யூ போல இருக்கும். அதுக்கு பக்கத்துல பத்மம் என்ற உயர் தர ( அதாங்க அதிகம் காசு வாங்கும்) ஹோட்டல் இருக்கு. ஃபிகருங்க கூட போய் சாப்ட சரியான இடம்( டபுள் எக்ஸ்பென்ஸிவ் :P ). மணிரத்ணம் படம் மாதிரி ஒரு மாதிரி இருட்டா தான் எப்போவும் இருக்கும்.சுவையும் நல்ல்ல இருக்கும்.

    .... பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மேட்டூர் ரோடு திரும்பினதும் ராயல் தியேட்டர்க்கு அடுத்து கிருஷ்ணன் ஒரு கையேந்திபவன் இருக்கும். அங்க புரோட்டா குருமா சூப்பரா இருக்கும். வீட்டில் சமைப்பதற்கு ஒரு பாட்டி இருந்தும் நான் அடிக்கடி அங்க போய் சாப்டுவேன். :)

    ReplyDelete
  14. //
    புதுகைத் தென்றல் said
    இப்ப நீங்களும் நம்ம செட்டுல சேர்ந்துகிட்டீங்க. பாருங்க பஸ் சார்ஜ் + ஹோட்டல் ஜார்ஜ் கேட்டு பின்னூட்டங்கள் கூடிய விரைவில் வரும்//
    அட அட.. சாப்பாடு பத்தி யார்னா எதுனா சொன்னா போதும் .. மொத ஆளா வந்துடறாங்க இந்த சாபாட்டு ராணி. :P

    ReplyDelete
  15. அருமையான பதிவு சுரேகா. அந்த கடைகளிச் நுழைந்து சாப்பிட்டதைப்போல் இருக்கிறது. பஸ் ஸ்டான்ட் எதிரில் பிருந்தாவன் உணவகம், வ.உ.சி பார்க் போகும் வழியில் ஆக்ஸ்போர்ட் மற்றும் லீ-ஜார்டின் மற்றும் பிரப் ரோட்டில் சிவரஞ்சனி அனைத்தும் அருமையான சைவ உணவகங்களே. இவைகளை முயற்சித்துப்பார்க்கவும். கண்ணன் தன் பெயரை இழந்து பல வருடங்களகிவிட்டது.

    ReplyDelete
  16. Thekkikattan|தெகா said...

    அடப் பாவிங்களா,

    //அப்ப ஈரோட்டுக்கு உணவு விடுதிகளின் தரக் கட்டுப்பாடு செய்ய போனீங்களா, இல்லை வேலை பார்க்கப் போனீங்களா...//

    பாக்குறதே சாப்பிடத்தானே..!
    அதுவும் 3 வேளை சாப்பிடறதால..3 ஹோட்டல்.!
    அப்புறம் டேஸ்ட் பாக்கன்னு..அது ஒரு சுகம்தான் போங்க!

    //ஒரு இடத்தையும் விட்டுவைக்கலயா? புதுசா ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போடுற மாதிரி ஏதும் திட்டமிருக்கா?? :))//
    ஈரோடு போய் என்னத்த கிழிச்சன்னு இனிமே யாரும் கேக்க முடியாதுல்ல!..ஹி.ஹி..
    அய்யய்யோ...ரெஸ்ட்டாரண்ட்டா..'நம்ம' - நண்பர் ஒருத்தர் வச்சிருக்காரே பத்தாதா?

    ReplyDelete
  17. இன்னும் கொஞ்ச நாளில் ஏரோடு வருவேன். கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருக்கும் உணவகங்களில் சாப்பிடுகிறேன். :)

    ReplyDelete
  18. தாமோதர் சந்துரு said...

    //நளன் உணவகத்துல வாழைப்பூ வடை போடுவாங்க. அதைசாப்புட்டுப்பாருங்க சூப்பரா இருக்கும்.//

    வாங்க..!

    பின்னூட்டத்துல போட்டுட்டேன். இதுக்குமுன்னாடி
    துளசி கோபால் கேட்டதுக்கு , பதிலா!

    ReplyDelete
  19. அக்கா மெஸ், அம்மா மெஸ், குப்பண்ணா ஸ், ஜுனியர் குப்பண்ணா
    இதெல்லாம் இப்ப இல்லியா!!

    ReplyDelete
  20. SanJai said...


    //அடுத்து கொங்கு புரோட்டா ஹோட்டல். அட அட அட.. எப்டி தான் செய்வாங்களோ? செம டேஸ்ட். மாலை நேரத்தில் பார்சல் வங்குபவர்களை பார்த்தால் ரயில் டிக்கட் வாங்க இருக்கும் க்யூ போல இருக்கும். அதுக்கு பக்கத்துல பத்மம் என்ற உயர் தர ( அதாங்க அதிகம் காசு வாங்கும்) ஹோட்டல் இருக்கு. ஃபிகருங்க கூட போய் சாப்ட சரியான இடம்( டபுள் எக்ஸ்பென்ஸிவ் :P ). மணிரத்ணம் படம் மாதிரி ஒரு மாதிரி இருட்டா தான் எப்போவும் இருக்கும்.சுவையும் நல்ல்ல இருக்கும்.//

    வாங்க வாங்க!
    எனக்கும் மேல இருக்கீங்களே! :-)

    //பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மேட்டூர் ரோடு திரும்பினதும் ராயல் தியேட்டர்க்கு அடுத்து கிருஷ்ணன் ஒரு கையேந்திபவன் இருக்கும். அங்க புரோட்டா குருமா சூப்பரா இருக்கும். வீட்டில் சமைப்பதற்கு ஒரு பாட்டி இருந்தும் நான் அடிக்கடி அங்க போய் சாப்டுவேன். :)//

    புரோட்டாவே ஒரு கலக்கலான வாய்க்கு ருசியான உணவுங்க! ..கையேந்திபவன் ட்ரை பண்றேன்.!

    ReplyDelete
  21. பெருசு said..

    //அக்கா மெஸ், அம்மா மெஸ், குப்பண்ணா ஸ், ஜுனியர் குப்பண்ணா
    இதெல்லாம் இப்ப இல்லியா!!//

    வாங்க பெருசு! ..நானே தட்டுத்தடுமாறி ஈரோட்டில் சாப்பிட்டுட்டு அலையுறேன்..எனக்குத் தெரியலயே! நான் ஈரோட்டுக்கு புதுசு!

    ReplyDelete
  22. //ஆக்ஸ்போர்ட் மற்றும் லீ-ஜார்டின் மற்றும் பிரப் ரோட்டில் சிவரஞ்சனி அனைத்தும் அருமையான சைவ உணவகங்களே//

    பக்கத்துல குப்பண்ணாவ விட்டுட்டுங்களே. எப்போவும் கூட்டம் அலை மோதுமே. :P

    ReplyDelete
  23. சாரு!! துட்டில்லாம சாப்பிட்டு வெளியே வரக்கூடிய வசதி பற்றி எழுதவே இல்லையே!!
    வருத்தமா இருக்கு!!

    புள்ளிராஜா

    ReplyDelete
  24. //
    அக்கா மெஸ், அம்மா மெஸ், குப்பண்ணா ஸ், ஜுனியர் குப்பண்ணா
    இதெல்லாம் இப்ப இல்லியா!!//

    அது சீனியர் குப்பண்ணா, மிடில் குப்பண்ணா என்று நெறய வளந்திருச்சிங்ணா.. :)

    ReplyDelete
  25. பொன்வண்டு said...

    //இன்னும் கொஞ்ச நாளில் ஏரோடு வருவேன். கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருக்கும் உணவகங்களில் சாப்பிடுகிறேன். :)//

    வாங்க..! வருகைக்கு நன்றி!
    நல்லா சாப்பிடுங்க..! எனக்கு கமிஷன் அனுப்பி வைக்க சொல்லிடுங்க!:-)

    ReplyDelete
  26. pulliraja said...

    //சாரு!! துட்டில்லாம சாப்பிட்டு வெளியே வரக்கூடிய வசதி பற்றி எழுதவே இல்லையே!!
    வருத்தமா இருக்கு!!//

    வெளிய வர்றதுக்குத்தான் எழுதியிருக்கேன். வெளிய வராம இருக்கணும்னா..துட்டில்லாம சாப்பிட்டா போதும்! :-)

    ReplyDelete
  27. அதிக பின்னூட்டங்களை
    அன்புடன்
    அளித்த
    அழகு சஞ்சய்க்கு
    அளவில்லா நன்றிகள்!

    (எப்புடி?) :-)

    ReplyDelete
  28. அமர பாரதி said...

    //அருமையான பதிவு சுரேகா. அந்த கடைகளிச் நுழைந்து சாப்பிட்டதைப்போல் இருக்கிறது. பஸ் ஸ்டான்ட் எதிரில் பிருந்தாவன் உணவகம், வ.உ.சி பார்க் போகும் வழியில் ஆக்ஸ்போர்ட் மற்றும் லீ-ஜார்டின் மற்றும் பிரப் ரோட்டில் சிவரஞ்சனி அனைத்தும் அருமையான சைவ உணவகங்களே. இவைகளை முயற்சித்துப்பார்க்கவும். கண்ணன் தன் பெயரை இழந்து பல வருடங்களகிவிட்டது.//

    நன்றி அமரபாரதி..வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ஆக்ஸ்போர்ட் மட்டும் தங்கி சாப்பிட்டிருக்கிறேன்.சிவரஞ்சனி ரொம்ப சுமார். அங்குதான் வாசம்! (இப்ப ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில்...அந்த ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமானது)

    ReplyDelete
  29. சரி சரி.. புரியுது.. கெலம்பிட்டேனுங்க. :)

    ReplyDelete
  30. சுரேகா, திருச்சி கபேல வடகறி நல்லா இருக்குமே. நான் சொல்லறது 94-95ல. இப்ப எப்படி இருக்குன்னு தெரியல. வடகறி சாப்புட்டுட்டு, எதிர்ல பீடா கடையில எங்க ஹாஸ்டல் பொண்ணுங்கல்லாம் பீடா வாங்கி சாப்ப்டுட்டு வருவோம்

    ReplyDelete
  31. சுரேகா.. உங்களுக்கு ஈரோட்டு மேல இம்புட்டு பாசமா? எங்களுக்கு கூட இப்படியெல்லாம் எழுத தோணல.. நீங்க எழுதியிருக்கறது எல்லாமே ரொம்ப சரி!!

    ReplyDelete
  32. SanJai said...

    //சரி சரி.. புரியுது.. கெலம்பிட்டேனுங்க. :)///

    ஆஹா..உங்களை புகழ்ந்தேங்க!

    தப்பா நினைச்சுக்காதீங்க!

    கண்டிப்பா நிறைய பின்னூட்டமிடுங்க!

    ReplyDelete
  33. சின்ன அம்மிணி said...

    //சுரேகா, திருச்சி கபேல வடகறி நல்லா இருக்குமே. நான் சொல்லறது 94-95ல. இப்ப எப்படி இருக்குன்னு தெரியல. வடகறி சாப்புட்டுட்டு, எதிர்ல பீடா கடையில எங்க ஹாஸ்டல் பொண்ணுங்கல்லாம் பீடா வாங்கி சாப்ப்டுட்டு வருவோம்//

    வாங்க வாங்க!

    அடடே..வடகறி முயற்சி பண்ணலயே!

    ReplyDelete
  34. காயத்ரி said...

    //சுரேகா.. உங்களுக்கு ஈரோட்டு மேல இம்புட்டு பாசமா? எங்களுக்கு கூட இப்படியெல்லாம் எழுத தோணல.. நீங்க எழுதியிருக்கறது எல்லாமே ரொம்ப சரி!!//

    வாங்க...!

    வருகைக்கு நன்றிங்க!

    பிஸியானவுங்களால எழுதமுடியாதப்ப.:)

    நம்மதான் நமக்குள்ள பாராட்டிக்கணும்..!
    பதிலுக்கு நீங்கவேணும்னா எங்க ஊருக்கு வந்து நல்லா நாலு வார்த்தை கவிதையா எழுதுங்க!

    அடிக்கடி வாங்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!