என் இனிய அந்தோணி முத்து..!

நீங்கள் சாதாரணமாகச் சொல்லிப்போன
இந்தப்பதிவை என்னால் 
இவ்வளவு நேரமாகியும்
மறக்கமுடியவில்லை..!

உங்கள் வலிகள் வாங்கவில்லை நான்!
உங்கள் வரிகளை வாங்கி 
அமர்ந்திருக்கிறேன்.!

இந்தச்சிந்தனைக்கு எத்தனை மனிதம் 
வேண்டுமென்று.. எண்ணி எண்ணி 
மாய்ந்திருக்கிறேன்.
இவ்வளவு ஆழமாக வாழ்க்கை பார்த்த 
உங்களுக்கு வாழ்வியல் 
உதவிகளைச்செய்யவைத்து 
மனிதம் வளர்க்கும் பெரியவர்களை 
மனதில் வாங்கிக் கசிந்திருக்கிறேன்.

எறும்புகள் இப்படி ஒரு மனிதரை
எப்போதும் சந்திக்கப்போவதில்லை!
இனிமேலும் அவை கடிக்கும் இடம்
அதற்கு கோவிலென்றுதான் வந்துபோகும்!
வலிக்காக வலிகொடுக்கும் வாழ்க்கையை
வலியற்ற வலியாக மாற்றிவிட்டீர்கள் அய்யா!


யார் சொன்னார்கள் நீங்கள் 
வாங்கப்பிறந்தவர் என்று...!
நிறைய அள்ளிக் 
கொடுக்கப்பிறந்தவர் நீங்கள் !

எறும்புகளுக்கு உணவையும்...

எங்களுக்கு  தன்னம்பிக்கையையும்!

நாங்கள்தான் வாங்கப்பிறந்திருக்கிறோம்..!
வாழ்வின் நிதர்சனத்தையும்
வலிகளின் ஏற்றலையும்,
எதிர்காலப்பிரகாசத்தையும்
இதயமெல்லாம் உறுதியையும்
அள்ளி அள்ளிக்கொடுங்கள் !
அசராமல் கொடுங்கள் !

வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று
மார்தட்டிச்சொல்லுகிறோம்
கொடுப்பது அந்தோணிமுத்து என்பதால்!

Comments

  1. //வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று
    மார்தட்டிச்சொல்லுகிறோம்
    கொடுப்பது அந்தோணிமுத்து என்பதால்!///
    வார்த்தைகளால் அப்பிடியே அள்ளிக் கொள்கிறீர்கள் மனதை....அருமை.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. வாங்க அருணா....

    நன்றிங்க!
    மனதில் தோன்றியது அப்படியே வரிகளாய் வந்தது..!

    ReplyDelete
  3. நன்றி சுரேகா!

    என் அந்தோணி மீது அன்பைப் பொழியும் உங்களுக்கு என் நன்றிகள்!

    நெஞ்சத்தின் அடி ஆழத்திலிருந்து கோடி கோடி நன்றிகள்.

    அன்புடன்
    விஸ்வநாதன் (azhagi.com)

    ReplyDelete
  4. வாங்க விஸ்வநாதன்...!

    நாம எல்லாரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாழ்க்கைக்கு என் அன்பு சாதாரணம்..!

    உங்கள் அன்புக்கு நன்றிங்க!

    அழகி உண்மையிலேயே நன்றாக இருக்கிறாள்..! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை கற்றேன் சுரேகா.

    அவரைப்பற்றி அறிந்த நாள் முதல் அவரது வலைப்பூவை வாசித்தாலும், மிகவும் உணர்ச்சிகள் நிரம்பிய எனது கருத்துக்களை அங்கு நான் பின்னூட்டமிட்டதில்லை. இன்றுதான் அந்த பதிவை பார்த்தவுடன் முதல் முறையாக பின்னூட்டமிட்டேன்.
    இப்படியும் ஒரு மனிதரா? சிந்திக்கும் போது நான் எல்லாம் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வருவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

    ReplyDelete
  6. உண்மையிலேயே அந்தோணியிடமிருந்து நான் தன்னம்பிக்கையை கற்றேன் சுரேகா.

    அவரைப்பற்றி அறிந்த நாள் முதல் அவரது வலைப்பூவை வாசித்தாலும், மிகவும் உணர்ச்சிகள் நிரம்பிய எனது கருத்துக்களை அங்கு நான் பின்னூட்டமிட்டதில்லை. இன்றுதான் அந்த பதிவை பார்த்தவுடன் முதல் முறையாக பின்னூட்டமிட்டேன்.
    இப்படியும் ஒரு மனிதரா? சிந்திக்கும் போது நான் எல்லாம் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வருவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

    ReplyDelete
  7. சுரேகா,

    அவருக்கு ஏராளமான தன்னம்பிக்கை இருக்குது. உங்களைப் போல் எங்களைப் போல நிறை நண்பர்கள் இருக்கு. நிச்சயம் அவர் வாழ்க்கையை ஜெயிச்சுக்கொண்டே இருப்பார்.

    (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேகா)

    மதுவதனன் மௌ.

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துகள் சுரேகா. நல்ல நண்பரை இழந்த இந்த தருணத்தில் பிறந்த நாள் மனநிலை உங்களூக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது...கடவுள் போல

    ReplyDelete
  9. அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.

    புதுகைச் சாரல்

    ReplyDelete
  10. அந்தோணியின் படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவரது தன்னம்பிக்கையினைப் புகழ்கின்றனர். வாங்குவதில் உள்ள வலியினைத் தாங்க முடிய வில்லை அவரால். அள்ளிக் கொடுக்கும் காலம் விரைவினில் வர நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !