உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது..!

நேற்று ஒரு சம்பவம் தூக்கமிழக்கச்செய்துவிட்டது.

தஞ்சாவூரில் , ஒரு பெண்ணின் திருமணம் மீறிய ஒழுக்கத்துக்கு(?) இரு சிறுவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவளுக்கு காதல் திருமணத்தில் பிறந்த அந்த பிஞ்சுகள் விக்னேஷ், தினேஷ் முறையே 6, 4 வயதுக்கார அழகன்கள். கணவனின் நண்பனுடன் ஏற்பட்ட தொடர்பை விடமுடியாததால், கணவனே அவளைவிட்டுப்போக, நண்பனுடன் குடித்தனம்... பின்னர் அவளது சொந்தக்காரன் இன்னொருவனுடன் அடுத்த........, அதன் தீவிரம் அதிகமாகி, குழந்தைகளையும், இரண்டாமவனையும் கொன்றுவிடுவதென்று முடிவெடுத்து, முதல் கட்டமாக, விளையாட்டுப்போக்கில் காரில் குழந்தைகளை கூட்டிச்சென்று தஞ்சை பெரியகோவில் அருகிலுள்ள பாலத்திலிருந்து இருவரையும் தூக்கிப்போட்டு கொன்றிருக்கிறான் சண்டாளன்.. இதில் சின்னவன் தினேஷ்  தூங்கிக் கொண்டிருக்கிறான். இவள் நல்லவள் போல் போய் போலீஸில் என் 
பிள்ளைகளைக்காணவில்லை என்று புகார் கொடுத்து புலம்ப, துருவியதில் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸ் தடுமாற, மறுநாள் ஆற்றில் , விக்னேஷ் மிதக்க , அதை இவள் சலனமில்லாமல் பார்ப்பதைப்பார்த்த போலீஸின் சந்தேகப்பார்வை திரும்பியபின் இவ்வளவும் வெளிச்சத்துக்கு வந்தது.

என்ன சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை... உடனே இந்த நாய்களை 
சுட்டுத்தள்ளிவிடணும்.
அல்லது அந்த சட்டக்கல்லூரி காட்டுமிராண்டிகள்கிட்ட கட்டையக்குடுத்து இப்ப 
அடிடா கொலைகார நாயேன்னு சொல்லணும்.
அப்புறம் அவனை நாம அடிச்சுக்கொல்லணும்.. பேசாம இந்தியாவை சவுதியோட 
இணைச்சுடலாமான்ன்னு தோணுதுங்க...இதுதான் காரணம்..!

அந்தக்கொலைகாரிக்கு பிள்ளைகள் வேண்டாமுன்னு சொல்லியிருந்தா , நான் எடுத்து வளர்த்திருப்பேன் அந்த அழகன்களை ! அவதான் சொன்னான்னா, அந்தப்பரதேசிக்கு எங்க போச்சு புத்தி?

அய்யா பத்திரிக்கைக்காரங்களே...! கள்ளக்காதல்ன்னு சொல்லி...காதலை கேவலப்படுத்தாதீங்க! இதுக்குப்பேரு தனிக்காமம்.

இனிமே யாரவது பிள்ளையைக்கொல்றதா இருந்தா, ஒரு தடவை எனக்கு போன் பண்ணி பேசுங்கன்னு விளம்பரம் கொடுக்கப்போறேன்.  ! 

Comments

  1. கொடுமைங்க ஐயா, இங்கதான் அந்தமாதிரி செய்திகள் அடிக்கடி வரும். இப்ப, அங்கயுமா? வேதனையாத்தான் இருக்கு!!

    ReplyDelete
  2. கொடுமை சார்,தன்னலம் கொண்ட தாசி அவள்.தரங்கெட்டவள்.தாரமா அவள்?

    ReplyDelete
  3. கொடுமையான விஷயம்.. தண்டனைகள் கடுமையாக வரை இதெல்லாம் தொடரும்...:((

    ReplyDelete
  4. சமுதாயத்தில் பல வித வக்கிரங்கள் பெருகி விட்டன. சட்டக் கல்லூரி மாணவர்கள் மிருகங்களைப் போல நடந்துகொண்டது ஒன்று. Fact is stranger than fiction...நீங்க‌ள் சொன்ன‌ க‌தை த‌னி ம‌னித‌ சுய‌ ந‌ல‌ வ‌ன்முறை வ‌கையில் உச்ச‌ம்.

    ReplyDelete
  5. //அந்தக்கொலைகாரிக்கு பிள்ளைகள் வேண்டாமுன்னு சொல்லியிருந்தா , நான் எடுத்து வளர்த்திருப்பேன் அந்த அழகன்களை ! அவதான் சொன்னான்னா, அந்தப்பரதேசிக்கு எங்க போச்சு புத்தி?
    //

    :((

    ReplyDelete
  6. இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க அங்கு சென்று ஏன் பிறந்தாய் செல்ல மகனே?

    ReplyDelete
  7. OMG!! என்ன சொல்றதுன்னேத் தெரியலை.!!

    ReplyDelete
  8. //பழமைபேசி said...
    கொடுமைங்க ஐயா, இங்கதான் அந்தமாதிரி செய்திகள் அடிக்கடி வரும். இப்ப, அங்கயுமா? வேதனையாத்தான் இருக்கு!!//

    வாங்க பழமை பேசி!

    ஆமாங்க !
    எந்த ஊரா இருந்தா என்ன?
    எல்லா எடத்துலயும் மனுசப்பயதானே இருக்கான்...!

    ReplyDelete
  9. // arnold edwin said...
    கொடுமை சார்,தன்னலம் கொண்ட தாசி அவள்.தரங்கெட்டவள்.தாரமா அவள்?//

    வாங்க அர்னால்ட் ...
    முதல் வருகைக்கு நன்றி!

    ஆமாங்க!

    தாசிகள் பாவம்ங்க! பிள்ளைகள் மேல் பாசமா இருப்பாங்க!

    இவளெல்லாம் ரத்தக்காட்டேரி..!

    ReplyDelete
  10. //தமிழ் பிரியன் said...
    கொடுமையான விஷயம்.. தண்டனைகள் கடுமையாக வரை இதெல்லாம் தொடரும்...:((//

    வாங்க தமிழ்ப்பிரியன்..!
    நலமா?

    ஆமாங்க..சரிதான்..! அதான் சவுதியோட இணைக்கச்சொல்றேன்.

    :)

    ReplyDelete
  11. வாங்க சரவணகுமரன்...
    வாங்க நர்ஸிம்..
    ஆமாங்க மிகக்கொடுமையான விஷயம்.

    ஏதாவது செய்யணும் பாஸு !

    ReplyDelete
  12. //நாமக்கல் சிபி said...
    இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க அங்கு சென்று ஏன் பிறந்தாய் செல்ல மகனே?//

    வாங்க சிபி...!

    அட..என்ன ஆச்சர்யம்..!
    நானும் இதே பாடலை நினைத்தேன்..!

    ReplyDelete
  13. //uma kumar said...
    சமுதாயத்தில் பல வித வக்கிரங்கள் பெருகி விட்டன. சட்டக் கல்லூரி மாணவர்கள் மிருகங்களைப் போல நடந்துகொண்டது ஒன்று. Fact is stranger than fiction...நீங்க‌ள் சொன்ன‌ க‌தை த‌னி ம‌னித‌ சுய‌ ந‌ல‌ வ‌ன்முறை வ‌கையில் உச்ச‌ம்.//

    வாங்க உமா!

    கண்டிப்பாங்க !
    இதுக்கு என்னங்க பண்ணலாம்?
    ஒரு தீர்வு யோசிப்போமா?

    ReplyDelete
  14. // சந்தனமுல்லை said...
    OMG!! என்ன சொல்றதுன்னேத் தெரியலை.!!//

    வாங்க சந்தனமுல்லை!



    எனக்கு என்ன செய்யறதுன்னுதான் தெரியலை!
    :(

    ReplyDelete
  15. அவளுக்கு சரியான தண்டனை
    நூறு சிறுவர்களை உண்மையா பராமரிக்க வைக்கிறதுதான்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. கண்ணில் ரத்த கண்ணீர் வந்துவிட்டது. ஒரு பாவமும் அறியாத அந்த பிஞ்சு குழைந்தைகளை எதற்காக கொல்ல வேண்டும். இவர்களை எல்லாம்... சொல்லத்தெரியவில்லை...கோபம் தான் வருகின்றது... அவள் தான் அந்த பிள்ளைகளை பெற்றாளா என்பதே சந்தேகமாக இருக்கின்றது...ஐந்தறிவு பெற்ற மிருகங்கள் கூட இதை செய்யாது. இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  17. வாங்க ராகவன்...

    அதாங்க ரொம்ப வலிக்குது!
    அதுவும் அந்தப்பிஞ்சுகள் மரணிக்கும்போது
    என்னவெல்லாம் எண்ணியிருக்கும்?

    ReplyDelete
  18. குறிப்பிட்ட சம்பவம் குறித்த கோபம் நியாயம். ஆனால்,

    //அல்லது அந்த சட்டக்கல்லூரி காட்டுமிராண்டிகள்கிட்ட கட்டையக்குடுத்து இப்ப
    அடிடா கொலைகார நாயேன்னு சொல்லணும்.//

    என்று குறிப்பிட்டிருக்க வேண்டாம். சட்டக்கல்லூரி நிகழ்வுகளின் முழுப் பின்னணி அறிய http://vinavu.wordpress.com படியுங்கள்

    ReplyDelete
  19. \\மறுநாள் ஆற்றில் , விக்னேஷ் மிதக்க , அதை இவள் சலனமில்லாமல் பார்ப்பதை\\

    இதத்தாங்க தாங்க முடியலை.

    மனுஷியே அல்ல இது

    ReplyDelete
  20. \\ சுரேகா.. said...
    அவளுக்கு சரியான தண்டனை
    நூறு சிறுவர்களை உண்மையா பராமரிக்க வைக்கிறதுதான்னு நினைக்கிறேன்.\\

    அதுக்கு தண்டனை கொடுக்குறேன்னு ஏங்க பிஞ்சுகளை கொடுமைப்படுத்தனும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !