நரி



கோரைப்பல்லை வச்சு ஒரு இழுப்பு இழுத்துப்பாத்தேன்...
அந்தக்காஞ்சு போன மாமிசம் ஜவ்வு மாதிரி வந்ததே தவிர சாப்புட முடியும்னு தோணலை!

என்னடா இது இப்படி ரெண்டு நாளா எங்க தேடியும் சரியான ஆகாரமே கிடைக்கலையேன்னு கவலையா இருந்தது.

அப்படியே பொடி நடையா நடந்தேன். காட்டுக்குள்ள இருக்குற ஒத்தையடிப்பாதைல அந்தக்கிளவி கூடையத்தூக்கிக்கிட்டு போச்சு...கையில ஒரு பெரிய கம்பு இருந்தது.

கூடையில ஏதாவது திங்கிற சாமானாத்தான் இருக்கும். ஆனா எப்படி எடுக்குறது.. கிளவியை அடிச்சுச்சாப்பிடும் அளவுக்கு நமக்கு பலமில்ல!
கிளவிக்குத்தெரியாம அதை பின் தொடர்ந்தா ஏதாவது சிக்குதான்னு பாக்கலாம்.

அந்தக்கிளவி ஏதோ மொணகிக்கிட்டே போயிட்டிருந்தது.

மரங்கள் அடர்த்தி கொறஞ்சு..ஒரு மண்ரோடு தென்பட்டுச்சு! ஆஹா ...கிளவி அதுல இல்ல ஏறிப்போகப்போகுது...நமக்கு வேற ஏதாவது கிடைக்குதா பாப்போம்னு நினைச்சுக்கிட்டே திரும்பறதுக்குள்ள கிளவி என்னைப்பாத்துருச்சு....வீச்சுன்னு கத்திக்கிட்டே கம்பைத்தூக்கி என்மேல வீச, எகிறி ஓடினேன் ஒரு ஓட்டம்...பொசுக்குன்னு ஒரு பெரிய மரத்துக்குப்பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டேன்.

அய்யய்யோ....யாராவது இருக்கீகளா...நரி...நரின்னு கிளவி கத்த...ஒரு ஆள் ஒடியாந்தான்.

என்ன கெளவி?

எம்பின்னாடி ஒரு நரி வந்துச்சு! -கூடைய புடுங்கிடுமோன்னுதான்..!

சரி..அதான் காட்டுக்குள்ள நெறயா திரியுதே..ஒண்ணும் செய்யாது போ! இந்தா கம்பு...! கெளம்பு..!

கிளவி கொஞ்ச தூரம் போனாள்..நான் ஒரு மேட்டுப்பகுதி மரத்தடியில் நின்னுக்கிட்டேன். அவ கூடைல அப்புடி என்னதான் இருக்குன்னு பாத்துடணும்!

போனவள் கொஞ்சம் நடமாட்டம் நிறஞ்ச எடமாப்பாத்து..ஒரு மரத்தடில உக்காந்தாள். கூடையை இறக்கினாள். அதுக்குள்ளேயிருந்து ஒரு சாக்கை எடுத்து விரிச்சா ! மறுபடியும் கூடைக்குள்ளேருந்து வட்ட வட்டமா ஒரு திண்பண்டத்தை எடுத்தா...நடுவுல ஒரு ஓட்டை இருந்தது. அதை எடுத்து அடுக்கினா...நான் மெதுவா இன்னும் கொஞ்சம் கிட்டக்க போனேன்.. எதிர் வரிசைல மரமா இருந்ததால, நான் இருக்குறது தெரியாது...! கிளவி கத்த ஆரம்பிச்சா...

வடை..வடை..!


அட.. அதுதான் வடயா? ரெண்டு மூணுபேர் வாங்க ஆரம்பிச்சாங்க...! வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க..எனக்கு எச்சி ஊற ஆரம்பிச்சுருச்சு! என்னய கம்பை வீசி துரத்தின இல்லை? இரு...உங்கிட்டேயிருந்து வடைய லாவுறேன். ம்ம்...எப்புடி எடுக்குறது ?

யோசிச்சுக்கிட்டே கிளவியைப்பாத்துக்கிட்டிருக்கும்போதே... அவ உக்காந்திருந்த மரத்து மேலேருந்து ஒரு காக்கா 'சொர்ர்' றுன்னு பறந்து வந்து ஒரு வடைய லாவிக்கிட்டு பறந்தது. கிளவி கத்தி களேபரம் பண்ணி...கம்பை மறுபடியும் வீச...திருட்டுப்பய காக்கா..நிமிசமா தப்பிச்சுருச்சு..

ஆஹா..இந்தக்காக்காயால நம்ப பொழப்பு போச்சே...இனும கெளவி இன்னும் உஷாராயிருமே..ன்னு நினைச்சுக்கிட்டுருக்கும்போதே...காக்கா கிளவிக்கு எதிர்த்திசையில் பறந்துவந்து காட்டுக்குள்ள பூந்துடுச்சு...சரியா நான் ஒளிஞ்சிருந்த மரத்து மேல வந்து உக்கார, அடிச்சுதுரா யோகம்..!

நம்பளைத்தான் தந்திரத்துக்கு அடையாளமா சொல்வாய்ங்களேன்னு ,பட்டுன்னு...ஒரு யோசனை தோண..

ஏ...காக்காவ்!

திடுக்குன்னு முழிச்ச அது...யாது..யாது? ன்னுது. வாய்ல வடை வச்சிருந்ததுல சரியா பேச்சு வரலை!

அட..கீழ பாரு..!

ஓ நதியா..!

வேற எதுவுமே பேசாம நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.
ஆமா..நீ..நல்லா பாடுவியாமே..ஒரு பாட்டுப்பாடேன்.. ரொம்ப சந்தோசப்படுவேன்.

கொஞ்சம்கூட யோசிக்காம...வாயை அகலமாத்திறந்தது. அது வாயிலேருந்து சத்தம்வந்ததையே நான் பாக்கலை..வடை என்னை நோக்கி கீழ வந்துக்கிட்டிருந்தது.

'சொத்' ன்னு வடை விழ..அப்பதான் அதை கிட்டக்க பாத்தேன். நல்ல அழகா வட்டமா , மொத்தமா இருந்தது ! கிட்டக்க போய் மோந்து பாத்துட்டு வாசனையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே..காக்கா...

அய்யய்யோ.. நரி! அது என் வடை! தயவு செஞ்சு சாப்டுறாத...குடுத்துரு..!

சரி..சரி..நான் சாப்பிடலை...வா..வந்து எடுத்துக்கிட்டு போ !

நான் சொன்ன மறுவிநாடி கீழ பறந்து வந்தது.

நானும் ஒரு வினாடி கூட தாமதிக்கலை! கீழ என் உயரத்துக்கு வந்தபோதே ஒரே அடி...
அது தடுமாறுறதுக்குள்ள...அடுத்த அடி...காக்க சொத்துன்னு காலடில விழுந்தது. என்னமோ சொல்ல வந்தது. ரெண்டு ரெக்கயையும் பிச்சு, சாவகாசமா தின்னேன்.

என்ன பண்றது...ஒண்ணுமில்லாததுக்கு காக்காவாவது கிடைச்சதே...வடைய எவன் திம்பான் ? ! அதுவும் காக்கா எச்சியை !

Comments

  1. /
    என்ன பண்றது...ஒண்ணுமில்லாததுக்கு காக்காவாவது கிடைச்சதே...வடைய எவன் திம்பான் ? ! அதுவும் காக்கா எச்சியை !
    /

    :)))))))))))))

    ReplyDelete
  2. பதிவோட உள்குத்து என்னன்னு இப்ப புரியலை. அப்புறமா திரும்பி வருவேன்

    :))))))))))))

    ReplyDelete
  3. வாங்க சிவா..!

    உள்குத்தெல்லாம் ஒண்ணுமில்லைப்பா!

    ReplyDelete
  4. கிகிகி..
    :))

    எதும் உள்குத்து இருக்குமோ?

    ReplyDelete
  5. காக்கா என்று ஒரு பதிவரையும் நரி என்று இன்னொரு பதிவரையும் சொல்லுகிறார் மங்களூரார்.

    நரி என்று சொல்வது யாரை தெரியுமா? :))))

    ReplyDelete
  6. //காக்கா என்று ஒரு பதிவரையும் நரி என்று இன்னொரு பதிவரையும் சொல்லுகிறார் மங்களூரார்.

    நரி என்று சொல்வது யாரை தெரியுமா? :))))

    //


    எனக்குத் தெரியுமே :)))

    ReplyDelete
  7. எப்பா - கத சரி - புரியுது - இந்தக் காலத்து நரி காக்கா கத -

    ஆமா அது என்னாப்பா உட்குத்து ? யார் நரி யார் காக்கா ?

    கொழுத்திப் போட்ட குசும்பனுக்குத் தான் தெரியுமாக்கும்

    ReplyDelete
  8. நெல்லைத்தமிழ்...

    சும்மா ஒரு மாற்றுக்கோணத்துக்காக எழுதினது..அதைப்போய்..உள்குத்து..வெளிக்குத்துன்னு..
    டகால்ட்டி பண்றீங்களே.!

    ReplyDelete
  9. சஞ்சய்..வாங்கப்பு!

    அது என்ன உள்குத்துன்னு நீங்களாவது சொல்லிடுங்க!

    ReplyDelete
  10. குசும்பரே வாங்க!

    நீங்க வந்துட்டீங்கள்ல..!
    இனிமே எல்லாம் சுபமா நடந்துரும்..
    சிவா..ஒரு உள்குத்து பார்சல்..!

    :)

    ReplyDelete
  11. ப்ளீஸ் அப்துல்லா..

    நீங்களாவது சொல்லுங்க..!

    யாரு? யாரு?

    (கதை மட்டும்தான் என்னுது...அதுக்குள்ள உள்குத்த கண்டுபிடிக்கிறது நீங்க எல்லாரும்தான்..!)
    அவ்வ்வ்வ்வ்வ்வ்! :))

    ReplyDelete
  12. :))

    என்னோட கெஸ் வந்து, நடைபெற்ற தேர்தல் வெற்றியை அடிப்படையா வைச்சு உள்குத்து வைச்சிருப்பியோன்னு, தோணுது அப்படியா ? :-D

    ReplyDelete
  13. மாற்றுக்கோணம் + உள்குத்து = சுரேகா


    :)))

    ReplyDelete
  14. / மங்களூர் சிவா said...

    பதிவோட உள்குத்து என்னன்னு இப்ப புரியலை. அப்புறமா திரும்பி வருவேன்

    :))))))))))))/

    உள்குத்து என்னன்னு இன்னும் புரியலைன்னா வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு மிஸ்டு கால் கொடு சிவா...நான் சொல்லுறேன்...:))

    ReplyDelete
  15. /சுரேகா.. said...

    நெல்லைத்தமிழ்...

    சும்மா ஒரு மாற்றுக்கோணத்துக்காக எழுதினது..அதைப்போய்..உள்குத்து..வெளிக்குத்துன்னு..
    டகால்ட்டி பண்றீங்களே.!/


    அண்ணாச்சி...இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவோமா....உள்குத்து உள்குத்து தான்....:))

    ReplyDelete
  16. என்னென்னமோ பண்றாங்கப்பா!!!

    சிறுவர்களுக்கான நீதிக் கதையை எடுத்து, முடிவிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து ... பின்நவீனத்துவ பாணியில் மாற்றி எழுதும் முயற்சியோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!