உன்னை நாங்கள் கொன்றுவிட்டோம்!

விபரம் தெரிந்து
விளையாடும்போதெல்லாம்
வீரத்துக்கு
உன்னைதான்நினைப்பேன் !

எதிரிகளை
எப்படி கையாள்வது என்று
உன் யுக்தி கண்டு
ஊரெங்கும் சொல்லுவேன்!

தங்க இடமின்றி
தடுமாறியதலைமுறைக்கே
தலைவன் நீயென
தற்பெருமை கொள்ளுவேன்!


உன் எல்லாச்செயலிலும்
நியாயம் கண்டுபிடித்து
உனக்கே சொன்னால்
மகிழ்வாய் என்றெண்ணுவேன்!

நீ செய்தது
தவறாகவே இருந்தாலும்
செய்தது நீ என்பதால்
சரியென்று வாதிடுவேன்.

துன்பியல் சம்பவமென்று
துணிவுடன் கூறியதற்கு
என்ன ஒரு தமிழ் வார்த்தை
என்று எக்காளம் பேசிடுவேன்!

எப்படி ஊடுருவினாய்
அண்ணனே!
எல்லா இதயங்களிலும்
எந்தவிதச் சிரமமுமின்றி!?

நீ இறந்துவிட்டாய்
என்று வரும்
ஏராள வதந்திகளில்
இதுவும் ஒன்றாய் இருக்காதா?

உன்னை
நாங்கள் எங்கள்
இயலாமையால்
கொன்றுவிட்டோம்!

எங்களை
நாங்களே
எதிர்க்காமல்
தின்றுவிட்டோம்.

கையாலாகாத அயோக்கியன்
கவிதை எழுதுகிறேன்.
கண்ணீர் என்னமோ
கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

Comments

  1. //கையாலாகாத அயோக்கியன்
    கவிதை எழுதுகிறேன்.
    கண்ணீர் என்னமோ
    கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

    //

    :((

    ReplyDelete
  2. அவர் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை, இங்குதான் எங்கும் இருக்கிறார்!

    ReplyDelete
  3. Thekkikattan|தெகா said...
    அவர் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை, இங்குதான் எங்கும் இருக்கிறார்!//

    வழி மொழிகிறேன்!

    ReplyDelete
  4. //
    கையாலாகாத அயோக்கியன்
    கவிதை எழுதுகிறேன்.
    //
    நானும் கூட எழுதியிருக்கிறேன் கண்ணீருடன்.

    ஆனால் அதையும் விட செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பணம் அனுப்பி, அங்கே துயரப்படும் தமிழர்களுக்கு உதவி செய்வதே, கவிதை/கதை/பதிவுகள் எழுதுவதை விட முக்கியம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


    கட்டபொம்மன் kattapomman@gmail.com

    ReplyDelete
  6. ;-(//கையாலாகாத அயோக்கியன்
    கவிதை எழுதுகிறேன்.
    கண்ணீர் என்னமோ
    கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

    ;-(

    ReplyDelete
  7. வீட்டுக்கு வந்துட்டு காபி சாப்பிடாம வந்துட்டீங்க. சொகமா இருக்கீங்களா? , உங்கள் பதிவில் உள்ளே வந்ததும் உங்கள் கவிதையை கண்டதும் சுரேகா,,,,,,, என்று உண்மையிலேயே கத்தி விட்டேன். என்னுள் அழுத்தி அழுது கொண்டுருக்கும் நிஜத்தை அப்படியே கவிதையாய் வார்த்தையாய் வடித்து இருக்கிறீர்கள். சத்யமாய் சொல்கிறேன் நானும் உங்கள் கட்சி தான். வதந்தியாய் இருந்து விடக்கூடாதா? இது வரை நக்கீரன் செய்திகள் தப்பே நடந்தது இல்லை. அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அந்த மாவீரன் தினத்தை எதிர்பார்த்துக்கொண்டுருக்கின்றேன். அடிக்கடி மறக்காம வீட்டுக்கு வந்து போயிட்டு இருங்க. அது சரி, உங்களுக்கும் இந்த புண்ணிய பூமியின் அறிமுகம் போல் இருக்கும் போலிருக்கு????


    நட்புடன். ஜோதிஜி http://texlords.wordpress.com

    ReplyDelete
  8. உன்னை
    நாங்கள் எங்கள்
    இயலாமையால்
    கொன்றுவிட்டோம்!
    தமிழனின் சாபமே இது தானே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!