இரத்த சொங்கி!


மே 18ம்தேதி மதுரையில் நாம் தமிழர் மாநாடு முடித்து மூன்று பேர் ஒரு பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். திருச்சிக்கருகில் ஏற்பட்ட ஒரு சாலைவிபத்தில், அந்த மூவருக்கு மட்டும் அடிபடுகிறது.அதில் ஒருவர் திரு.பிரகாஷ். அவருக்கு தொடையில் மட்டும் ஒரு சிறு அடிபட்டிருக்கிறது. அதற்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.


சிறிது நேரத்தில் கழிவறைக்குச்சென்று திரும்பியவரின் உடல் சில்லிட ஆரம்பிக்கிறது. அப்போதுதான் மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதிக்கிறார்கள். வயிற்றின் உள்ளே ஏதோ அடிபட்டு, உள்ளேயே இரத்தம் கசிந்து இரத்த இழப்பு வேகமாக ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. மணிக்கு 600 மிலி வீதம் இழப்பு! உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், A-ve இரத்தம் 20 யூனிட்கள் தேவை என்று மருத்துவர்கள் சொல்ல, அவரது நண்பர்கள் அரசு இரத்தவங்கிகளையும், குருதிக்கொடையாளர்களையும் அணுக முயற்சிக்கிறார்கள். திருச்சியில் முடிந்தவரை அவசரமாக இரத்தம் தேற்றுகிறார்கள். சிகிச்சை ஆரம்பமாகிறது. A-ve மிகவும் அரிய வகை என்பதால், பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் செல்கிறது.

அன்று மாலை, எனக்கு உள்ளூர் ரோட்டரி சங்கத்திலிருந்து அழைப்பு வந்தது. ( இரவு நான் சென்னை செல்லும் திட்டத்தில் இருந்தேன்.) இதற்கு முன் குருதி கொடுத்து நான்கு மாதங்கள் ஆகியிருந்ததால், உடனே கிளம்பி புதுக்கோட்டை மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் 24 மணி நேர இரத்தவங்கிக்கு நான் செல்லும்போது மணி இரவு. 7:30.

அங்கு திரு.பிரகாஷின் நண்பர்கள் காத்திருந்தார்கள். இரத்தவங்கி வாசலைப்பார்த்தேன். ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில், நண்பர்கள் , திருச்சியில் பிரகாஷுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரின் நண்பரான கந்தர்வகோட்டை அரசு மருத்துவ அலுவலர் திரு.முத்துக்கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்க, அவர் நான் வருகிறேன். இரத்த வங்கி திறந்துவிடுவார்கள் என்றார். நாங்கள் காத்திருக்கத் தொடங்கினோம். மணி இரவு 8:

அவ்வழியே வந்த இரத்தவங்கி ஊழியரான செவிலியர் ஒருவர் ' என்ன நீங்கபாட்டுக்கும் ரத்தம் குடுக்குறேன்னு வந்து நின்னா ஆயிடுமா? எங்ககிட்ட சொல்லணும்' என்று கத்தத் தொடங்கினார். ' திறந்திருந்தா உள்ள வந்து சொல்லியிருப்போம்' என்று நான் நக்கலாகச் சொல்ல, கொஞ்சம் ஜெர்க்காகி சமாளித்துவிட்டு மீண்டும் இரத்தவங்கியை ஒரு பார்வை பார்த்துவிட்டு 'யாரு பூட்டினா? என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார். அப்போது மணி 8:30.


அந்த நேரத்தில் டாக்டர். முத்துக்கிருஷ்ணன் வந்து சேர்ந்தார். அவர் அரசு மருத்துவராக இருந்தபோதும், அவரது அழைப்புகளுக்கும் 'பெப்பே' காட்டினர் இரத்தவங்கி மருத்துவர் மற்றும் ஊழியர்கள். நீண்ட போராட்டத்துக்குப்பின் சரியாக 9:15க்கு சொர்க்க வாசல் திறந்தது.

உள்ளே நுழைய முயன்றேன். வெளிலயே இருங்க சார்! கூப்பிடுறேன் என்றார் ஊழியர். மீண்டும் காத்திருத்தல் தொடர்ந்தது. மீண்டும் டாக்டர்.முத்துக்கிருஷ்ணனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆஹா.! அப்படியா? என்று கேட்டார். உடனே என்னை அழைத்து, சார்! நீங்க கேஷுவாலிட்டில போய் பிட்னெஸ் வாங்கிட்டுவந்துருங்க என்றார். நான், இதுவரை பிட்னெஸ்ஸெல்லாம் வாங்கினதில்லையே என்றேன். ஆனால் விவாதத்தில் நேரவிரயம் வேண்டாமென்று எண்ணி, கேஷுவாலிட்டிக்கு ஓடினேன். ஒரு ஊழியர் உடனே என் பெயர் , வயது எழுதி ஒரு ஓ.ப்பி சீட்டு வழங்கினார். எடுத்துக்கொண்டு டியூட்டியில் உள்ள டாக்டர் அறைக்குச் சென்றேன். வெற்று அறை என்னை ' வாடா, வெண்ணை ' என்று வரவேற்றது. அப்போது மணி 9:40.

இருபது நிமிட காத்திருத்தலுக்குப்பிறகு டாக்டர் சாவகாசமாக வந்தார். என்னை நாக்கு நீட்டச்சொன்னார்.

'ரத்தம் குடுத்திருக்கீங்களா?' என்றார்.

'குடுத்திருக்கேன்' என்றேன்.

கடைசியா எப்ப குடுத்தீங்க?

நாலு மாசத்துக்கு முன்னாடி!

ஆறு மாசம் ஆகியிருக்கணுமே!! எடுக்க முடியாதே!

இல்ல சார்! மூணு மாசம் ஆகியிருந்தா போதும்!

நீங்க ஆரோக்கியமா இருக்கீங்களா?

இருக்கேன்! (அதை நீங்கல்ல சொல்லணும் என்று நினைத்தேன்)

அப்ப சரி! என்று கூறி, fit to bleed என்று எழுதி சீட்டை கையில் கொடுத்தார். மணி 10.10!

அப்புறம்......

(சொல்றேன்)

Comments

 1. அன்பின் சுரேகா

  என்ன செய்வது - இரவு நேரங்களில் அரசு மருத்துவ மனைகளைச் சார்ந்த இரத்த வங்கிகளில் இதர்கு மேல் எதிர் பார்க்க இயலாது. இயல்பு நிலைதான் இது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தம் தரக்கூடிய நிகழ்வு.

  இயன்றால் இதனை எதிர்காலத்தில் தடுக்க முயலலாம்

  நல்வாழ்த்துகள் சுரேகா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அண்ணே ரத்தம் குடுப்பதில் கூட ஒரு சஸ்பென்ஸ்சா !!!

  ReplyDelete
 3. படிக்கையிலே பதட்டமா இருக்கண்ணே... நண்பருக்கு என்னாச்சி?!

  ReplyDelete
 4. வாங்க சீனா சார்!

  //என்ன செய்வது - இரவு நேரங்களில் அரசு மருத்துவ மனைகளைச் சார்ந்த இரத்த வங்கிகளில் இதர்கு மேல் எதிர் பார்க்க இயலாது.//

  இதுதான் சார் பிரச்னை! நாம ஏன் சார் சும்மா போகணும்? சம்பளம் வாங்கிக்கிட்டு தன் வேலையை செய்யாம போவானுங்க! நாம தலைல தட்டிக்கிட்டு போகணுமா? எல்லாரும் ஒருநாள் எதிர்த்து கேட்க ஆரம்பிச்சாத்தான் சார் உருப்புடுவானுங்க!!

  //இயன்றால் இதனை எதிர்காலத்தில் தடுக்க முயலலாம்
  //

  இது...இதுதான் சார் தீர்வு! :)

  அன்புக்கு நன்றி சார்!

  ReplyDelete
 5. வாங்க ரோமியோ!

  பதிவு ரொம்ப பெரிசா இருந்தா, படிக்க யோசிப்பீங்களேன்னுட்டுதான்... ! :)

  ReplyDelete
 6. வாங்க செல்வா!

  இதோ அடுத்த பாகம் வந்துருச்சு!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !