Tuesday, May 31, 2011

ஓமப்பொடி
ஆச்சர்யம் # 1கோ படத்தில், அஜ்மல் நடத்தும் அமைப்பின் பெயர் சிறகுகள், அது மாணவர்களை ஒருங்கிணைத்து நன்மை செய்வதாகச் சொல்லியிருப்பார்கள்.
உண்மையிலேயே, 2003ஆம் ஆண்டு புதுக்கோட்டையில், சிறகுகள் (WINGS – Winners and Ignitors of New Generation Society) என்ற அமைப்பைத் துவக்கி, மாணவர்களை ஒருங்கிணைத்து, நேர்மைதான் தாரகமந்திரம் என்ற நோக்கத்தில் ஒரு இயக்கமாக மாற்றி கிட்டத்தட்ட 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தேன். அதன் தலைமைப்பொறுப்பில் நாங்கள் 3 இளைஞர்கள் இருந்தோம். பள்ளிகளில் என் எஸ் எஸ், ரெட் ரிப்பன் கிளப் போல, சிறகுகள் அமைப்பையும் உருவாக்கினோம். அதற்கு வலைப்பூ கூட உருவாக்கினேன். இதோ அதன் சுட்டி! 

இரு வாரங்களுக்கு ஒருமுறை கூட்டம் கூடும். அதுவும், மாதிரி பாராளுமன்றமாக இருக்கும்.

மாதம் ஒருமுறை வங்கி, அஞ்சலகம், தாலுகா அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களின் நடைமுறைகள் அந்தந்த அதிகாரிகளின் துணையோடு பயிற்றுவிக்கப்படும்.

நேர்மையான அரசியல் என்றால் என்ன? என்று கற்பிக்கப்படும்.

அரசியல் எவ்வளவு முக்கியம் என்று நாடகம் நடித்துக்காண்பிக்கப்படும்.

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழி வாங்கிக்கொள்ளப்படும்.

சுயநீதிமன்றம் என்ற நடைமுறை பின்பற்றப்படும். அதாவது வகுப்பில் ஒருவன் தவறு செய்துவிட்டால், அது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆசிரியரிடம் போகாமல், சிறகுகளே அவனை விசாரித்து, அவனுக்கான தண்டனையை அவனே நிர்ணயம் செய்துகொள்ளும் நேர்மையை வலியுறுத்தும்.

அரசு போடும் சட்டங்களை முழுமையாகப் பின்பற்ற பயிற்சியளிக்கப்படும்.
சிறகுகள் என்ற மாத இதழ் நடத்தப்படும். அதை சிறகுகள் மாணவர்களே நடத்துவார்கள். சமூகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவார்கள். படைப்பார்கள்.

தட்டிக்கேட்கும் பழக்கம் வலியுறுத்தப்படும்.

தன்னம்பிக்கைக்கு உரம் போடப்படும்.

அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

இப்படி அழகாகச் சென்றுகொண்டிருந்த இயக்கம்…இப்போது இல்லை..! ஏன்? அதற்கான காரணத்துக்கு ஐந்து பதிவுகள் போடவேண்டியிருக்கும். ஆனால் இன்றும் சிறகுகள் இளைஞர்கள் அதிகபட்ச(!) நேர்மையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி கே.வி.ஆனந்த் குழுவிற்கு சிந்தனையில் உதித்தது என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.! அவரை அணுகி கேட்கும் எண்ணமும் இருக்கிறது.

ஆச்சர்யம் # 2

சென்ற பதிவாக நான் எழுதிய நாடா நினைவுகள், கேசட்டுகள் பற்றியது. இதை எழுதவேண்டுமென்று ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து யோசித்து, கொஞ்சம் எழுதிவைத்துவிட்டு, சென்றவாரம் புதன் இரவுதான் முடித்து பதிவேற்றினேன். பதிவின் நீளம் கருதி, இரண்டு பாகங்களாக்கி அடுத்த பாகத்தை வெள்ளியன்று வலையேற்றினேன். அன்று காலை வந்த ஆனந்தவிகடனில்…மூங்கில் மூச்சு என்ற தொடரில்..சுகா அண்ணன் (தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் அவர்களின் புதல்வர்..சுரேஷ் கண்ணன் அவர்கள்) அதே நினைவலைகளை , அவர் கோணத்தில் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார். அட! எப்படி அவர் எழுதிய அதே விஷயத்தை நாமும் எழுதியிருக்கிறோம் என்று ஆச்சர்யப்பட்டேன். அவரிடமும் இதைப்பற்றி விவாதிக்கும் எண்ணம் இருக்கிறது.
                        ------------------------------------------------------

சென்னையில் மிகவும் சிக்கனமான போக்குவரத்து எதுவென்றால், அது..ஷேர் ஆட்டோதான் ! ஆனால், அதில் ‘ கொஞ்சம் உள்ள போங்க சார்! என்று டிரைவர் சாதாரணமாகச்சொல்லும் இடத்துக்கு நாம் சென்றால், ஆட்டோவின் அந்தப்பக்க வாசல் வழியாக வெளியில் விழும் ஆபத்து இருக்கிறது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! என்று சொல்லியே நான்கு பேர் அமரும் இடத்தில் ஏழு பேரை ஏற்றும் சர்க்கஸ் நாள்தோறும் நடந்தேறுகிறது.

அடுத்து..ஆட்டோ..? இல்லை! அவர்களிடம் பேரம் பேசியே ஒழிந்துவிடுவோம். நீண்ட தூரப்பயணத்துக்கு, பாதுகாப்பான சிக்கனமான வழி – கால் டாக்ஸிதான்.!

 
மிகவும் தொழில்நேர்த்தியாக , சிறப்பாகச்செய்கிறார்கள். சமீபத்தில் நான் சென்ற கால்டாக்ஸி காட்டிய கிலோமீட்டருக்கும், அது காட்டிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தது. உடனே அதை புக் செய்த எண்ணுக்கு அழைத்துக்கேட்டேன். உடனே...மீட்டர் தவறாக இருக்கலாம் சார்! உங்க கணக்குப்படி கிலோமீட்டருக்கு என்ன உண்டோ அதைக்கொடுங்க போதும் என்று கூறி, அதையே டிரைவருக்கும் அறிவுறுத்திவிட்டனர். மிகவும் மகிழ்வாக இருந்தது.  ஆட்டோ ஸ்டாண்ட் அண்ணாச்சிகளா? முழிச்சுக்குங்க! ஏதாவது செய்ங்க!! 

9 comments:

 1. // புதல்வர்..சுரேஷ் கண்ணன் அவர்கள் //

  பதிவர், பஸ்சர் சுரேஷ் கண்ணனும் இவரும் ஒருவரா?

  ReplyDelete
 2. வாங்க அப்துல்லா அண்ணே!

  ஆஹா.. இல்லையே!
  அவர் வேறு...இவர் வேறு!


  - ஒருவேளை தெரிஞ்சுதான் கேக்குறீகளோ? :)

  ReplyDelete
 3. வாங்க வாங்க புதுகைத்தென்றல் !

  எப்படி இருக்கீங்க!

  ஆமா.. எனக்கு ஆட்டோ அலர்ஜி!

  ReplyDelete
 4. ஆட்டோ டிரைவரிடம் சில MBA டெக்னிக் உண்டு ., கவனிதிருக்கீன்களா?

  ReplyDelete
 5. போஸ்ட் ஓக்கே? திரட்டிகளில் இணைக்கலையா?

  ReplyDelete
 6. வாங்க ஷர்புதீன்...!

  என்ன டெக்னிக்? தெரியலையே??

  ReplyDelete
 7. வாங்க சி.பி.செந்தில்குமார்!

  திரட்டியில் இணைச்சும்..
  ஏதோ பிரச்னை போல..!

  நன்றிங்க!

  ReplyDelete
 8. டெக்னிக் என்பது வேற ஒன்றும் இல்லை., நாம் அவர்களை சவாரிக்கு கூப்பிடும் பொது அவர்கள் நமது உடை, பாடி லாங்குவேஜ் , சூழல் , போன்ற பலவற்றை கவனித்து "கவனிப்பார்கள்" அதனைத்தான் சொல்கிறேன்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...