ஓமப்பொடி- 2




          சென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.

    அதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                         ++++++++++++++++++++++

     நேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா தியேட்டர் வாசல் வரை சென்ற என்னை – திடீர் ரவா உப்புமாவைப்போல்,- நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கிவிட்டார்கள். நானும் முடிந்ததைச் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், படத்தின் நாயகன் கரண், இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சிவாஜி, பழனி,  இன்னும் சில நண்பர்கள் பாராட்டினார்கள். நன்றி சொல்லி எஸ்கேப்பானேன்.  

என் நேற்றைய அறிவிப்புகளில் சில :

# திறமைசாலிகளை OUTSTANDING என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஆகவே இங்கிருக்கும் திறமைசாலிகள் அனைவரும் உள்ளே வரவும்.

-    இயக்குநர் பொன்வண்ணன், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதால், தானும் ஒரு தயாரிப்பாளர்தான் என்று சொல்லிக்கொண்டார். அப்போது மேடையிலிருந்த இயக்குநர் சந்தானபாரதி தானும்தான் என்று கை தூக்கினார். ஆகவே அவரைப் பேச அழைத்தபோது…
#  சம்பளத்தைக்குறைத்துக்கொண்டதன் மூலம், இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான திரு.சந்தானபாரதி இப்போது பேசுவார்.

#  இப்போது இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது இரண்டு நிமிட உரையை வழங்குவார். (நேரமில்லாத காரணத்தால்)

#  அரை நிமிடம் சேமித்த அற்புத மனிதருக்கு நன்றி! (ஒன்றரை நிமிடம் பேசியதற்காக)

# இது அரோவணா பிக்சர்ஸ் அல்ல! எல்லோரையும் அரவணை பிக்சர்ஸ்!

# படத்தில் ஒரு செகண்ட் வந்து சென்றதால் செகண்ட் ஹீரோவான பழனி அவர்களை அழைக்கிறோம்.

# எல்லோரையும் வாரிய ஜெகன் அவர்களே வாருங்கள் ! நாங்களும் வாருகிறோம்!

# இது இசை மீட்டும் விழா ! திறமைசாலிகளை திசை காட்டும் விழா! உங்கள் ஒலி ரசனைக்கு விசை கூட்டும் விழா!

இப்படிப் போயிற்று!  முழு நிகழ்விலும் அரங்கத்தில் ஒருவித புன்னகை மனநிலை நிலவியது.
இசையமைப்பாளர் P.B. பாலாஜிக்கு நன்றி!  
அந்த நேரத்தில், எனக்காக சட்டை வாங்க அதீதமாக முயற்சித்த அன்பு நண்பர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு நன்றி!


வெங்காயம் திரைப்படம் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பாராட்டினார். நண்பர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இந்தவாரத்தில் பார்க்கவேண்டும். நல்லபடம் வேறு! தியேட்டரிலிருந்து தூக்காமல் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தேமுதிக வில் நிறவெறி அதிகம் போலிருக்கிறது. அவர்கள் தலைவரின் நிறத்தையே மையப்படுத்தி போஸ்டரடித்து , கருப்பு எம் ஜி ஆர் என்று வர்ணித்திருக்கிறார்கள். தோல் நிறம் பார்த்து வாழும் கூட்டம் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்கள்! வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற! செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ? கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க!! (’கா’னாவுக்கு ’கா’னா)


இந்தப்பாடலைக் கேட்டாலும் , பார்த்தாலும், இதயத்தை ஏதோ செய்கிறது. உற்சாகம் தெரிக்கும் வார்த்தைகளுடன் 2008ம் ஆண்டு வலம் வந்த பாடல் இது.! இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? இருக்கிறார்களா? – பயமாக இருக்கிறது!


----------------------------------------------------------------------------------------------------------------

Comments

  1. பேசுவதுபோலே எழுத்து :)
    அருமை

    ReplyDelete
  2. வாங்க புதுகைத்தென்றல்...

    நன்றிங்க!

    ReplyDelete
  3. வாங்க ஸ்வாமி!

    இடையில் இருக்கும் சிரிப்பில்தான் உள்குத்து இருக்கா? :)

    ஸ்வாமி ஓம்காரின் கிண்டல்களை ரசிப்போர் சங்கம். கிண்டாமுத்தூர் கிளை!

    ReplyDelete
  4. நல்ல டைமிங் சென்ஸ் உங்களுக்கு. பகுதி நேரமாக டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கலாம் சுரேகா (அது எதுக்கு diversion என நினைப்பீர்களோ என்னவோ )

    ReplyDelete
  5. மிக்க நன்றி மோகன்குமார் அண்ணே!

    நல்ல நிகழ்ச்சி வாய்த்தால் செய்யலாம்.

    இதில் வழிமாற என்ன இருக்கிறது?

    இயக்குநர் வேலைகள் அப்படியே சென்றுகொண்டிருக்கும்!

    ReplyDelete
  6. அன்பின் சுரேகா - அருமை அருமை - காம்பியரிங்க் அருமை - இப்படித்தான் இருக்க வேண்டும் - இல்லை எனில் பார்வையாளர்கள் தூங்கி விடுவார்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. வணக்கம் சீனா சார்..!

    உங்கள் வாழ்த்துக்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறை?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !