ட்விட்டுரை
பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு
தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது. ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது
காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார். சுரேகாத்துவம்!
சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல? - தங்கமணி! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது? - #அடி தாங்கலை!
என்னது? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு!! இது வேறயா? #கலைஞனுக்கும் ஜாதி உண்டு!
அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும். புதல்வனின் புரோட்டா வெறிக்கு........முடியலை!
பெரிய கடைகள் புறக்கணித்து...சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம். உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது.
காசும், கண்ணியமும் கொடுத்தால், கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்.. பிரம்மாண்டமாய்களில்...!
இளைய தலைமுறை படிக்கட்டும்னு அய்யா நினைச்சார்..இல்லை.. மொதல்ல படுக்கட்டும்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க! #இனிமே ஓட்டுப் போடுவ?
நல்லவேளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலெல்லாம் லிட்டர் கணக்கில் விக்கலை! இல்லைன்னா திருக்குறள் இன்னிக்கு என்னா விலை விக்கும்?
நம்மை ஏதோ காமக்கொடூரன்போல் பாவித்து ஒரு பாதுகாப்புக்காக என்றெண்ணி ‘அண்ணா’ என்று அழைப்பவர்களை எப்படிக் கொன்றால் தகும்?
கடினமாக உழையுங்கள். ஆனால், குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். செத்தால் எவனும் நமது PPTஐ நினைவு கொள்வதில்லை.
பிச்சை: ஒருரூவா குடுங்க சாமி! ஆசாமி: நாளைக்குத் தரேன்! பிச்சை: இப்புடீ சொல்லி சொல்லியே இந்த ஏரியாவில் எனக்கு லட்சரூபாய்க்கிட்ட வரணும்!
மாயாவதி, மம்தா, ஜெயலலிதா, சோனியா! இவ்வளவு பேரும் பண்றதைப் பாத்துட்டும்... இன்னும் தாய் நாடுன்னு சொல்லி கன்னத்துல வேற போட்டுக்குறோம்.
நாலாய்ப் பிரித்த மாநிலத்தில், மற்ற மூன்றிலும் என் சிலை ஆளும் - யாரு? யாரோ!!
இலவசமா கிடைக்கிற மிக்ஸி, கிரைண்டரை அம்மா வூட்டுல குடுத்து அஞ்சு வருஷ பஸ் பாஸ் தரச்சொல்லி கேக்கலாமா?
எங்க அப்பா இப்புடி அடிச்சு வளத்திருந்தாருன்னா, இப்புடி இந்த சர்தார்ஜி ‘சளுப்’ புன்னு இழுத்திருப்பானா? - #யாரு? யாரோ!
திரையுலக வெற்றியை நினைத்தால் பெருமையில் நெஞ்சம் விம்முகிறது # லத்திகா 175வது நாள்!
இனிமே பவர் கட் பத்தி பேசுவ? இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு! அடுத்தவாரம் இருக்குடீ ஆப்பு! #யாரு?
யாரோ!
’அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்’ வாழ்க! அப்ப அண்ணா!? போடா வெண்ணை! சமச்சீரை நசுக்கினப்பவே மாத்தியாச்சே ! தெரியாதா? #யாரு? யாரோ!
இனி தமிழில் புது வார்த்தைகள் உருவாகும். ட்விதை, ட்விறுகதை, ட்விச்சுவை, ட்விட்டூழியம், ட்விட்டுரை,..இன்னபிற..!
அப்பா! இன்னிக்கு கிருஷ்ணர் பாப்பா வருவராமே? எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார்? என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே? - சின்ன தேவதை!!
மரியாதையா சீக்கிரம் ரெடியாகுறீங்களா இல்லையா? - வரலட்சுமி நோம்பு மரியாதை!
ஆட்டாம்புழுக்கை போல் ஒரு நாடு ஆட்டம்போடுகிறது. கூட்டணி கொள்ளை காக்க தமிழன் வெட்டுப்பட்ட ஆடாகிறான்! #tnfisherman
திருப்பதியில் எங்களுடன் வரிசையில் வந்த ஆள்..பாவம்! பரம ஏழையாம். 2000 கோடி ரூபாய்தான் வருட வியாபாரம் என்று 8000 டாலர் உண்டியலில் போட்டார்.
வானத்துக்கூரையில பொத்தல் யாரு போட்டுவச்சா? வெளிச்சமெல்லாம் வழியுதுங்க! விண்மீனாப் பொழியுதுங்க!
ட்விட்டுதல் ட்வீட்டர்க்கு அழகு அன்றில் ஃபாலோயர் பத்துக்கும் கீழ்வரும்.
நின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு! அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத! படுத்திருக்கேன்! #கொய்யால
அலைவரிசைத்தொழில் - கலைஞர் ராசா, கொலைவரிசைத்தொழில்- இலைங்கை ராசா! - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா!#tnfisherman
மாட்டுப்பொங்கலும்...மாடில்லாமல் கழிந்தது...! இனிவரும் காலத்தில் தைப்பொங்கல், பொங்கலில்லாமலும் கழியும்!
சட்டைப்பையில் கனமில்லாமல், புத்தகக்காட்சி போகும்போது, மற்றவர்களை கையில் புத்தகக்கனம் பார்த்து....மனம் கனக்கிறது!
கட்டெறும்பை நசுக்கினா, அது அடுத்த ஜென்மத்தில் நம்பளை நசுக்குமாம்! டேய்! போன ஜென்மத்தில் நான் எறும்பு! அது என்னை நசுக்கினுச்சு தெரியுமில்ல?
நான் சோகமாக இருக்கும்போது பாடத்தொடங்குவேன். சுற்றியிருப்பவர்கள் சோகமாகிவிடுவார்கள் #புலம்பல்
எப்போதும் கையில் ஒரு சுத்தியோடே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்! அப்ப கையில் ஆணிகளோட திரிந்தால்?
சீக்கிரமாக எழுந்திருக்கும் பறவைக்குதான் புழு கிடைக்கும். அப்ப சீக்கிரமா எழுந்திருக்கும் புழு? கோவிந்தாவா? #தத்துவ சந்தேகம்!
புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் # புலம்பல்
சென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..!!!
இன்ஸ்பெக்டர் அய்யா! வீட்டுல பூட்டை ஒடைச்சு எடுத்துட்டுப்போயிட்டாங்க! ஒடஞ்ச பூட்டை எடுத்துட்டுப்போய் என்னய்யா பண்ணுவான்?
ம்
ReplyDeleteஅன்பின் சுரேகா - அனைத்துமே அருமை - எனக்குப் பிடித்தது : // நின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு! அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத! படுத்திருக்கேன்! #கொய்யால //
ReplyDeleteநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteஉங்க ட்வீட் தான் ஒரே எழுத்தில் நச்சுன்னு இருக்கு!
‘ம்’ ! நல்லா இருக்கு! :)
வாங்க சீனா சார்!
ReplyDeleteஉங்க அன்புக்கு நன்றி!
nach...nach...
ReplyDeleteட்விட்டுரைகள் எல்லாம் நல்லா இருக்கு.
ReplyDeleteசெம கீச்சுக்கள்!
ReplyDelete//
சென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..!!!
//
இதுதான் மனிதனது மனம் விரிவதோ?
வாங்க வெண்புரவி!
ReplyDeleteநன்றிங்க!
வாங்க KSGOA!
ReplyDeleteமிக்க நன்றி!
வாங்க கோகுல்..
ReplyDeleteஇதுவாவது பரவாயில்லை..!
சில மனைப்பிரிவுகள், விழுப்புரம் தாண்டி இருக்கு! அதுகூட சென்னைக்கு மிக அருகில்ன்னு வாய் கூசாம இந்த டிவி சீரியல் புள்ளைங்க சொல்லும்போது....
லத்திகா 175 நாளுக்கே அவசரப்பட்டு
ReplyDeleteஎழுதிவிட்டீர்கள்.ஒரு வருட சாதனைக்கு எழுதவும் ஏதாவது ரெடி
பண்ணி வையுங்கள்.
நட்புடன்
இளங்கோ
வாங்க இளங்கோ!
ReplyDeleteஆமா..! இது முன்னாடி போட்ட ட்வீட்!
some tweets are NACH!
ReplyDeleteஅருமை சுரேகா. ..
ReplyDeleteThank you Sharbudhin !
ReplyDeleteThank you T.T.P!! :)
ReplyDeleteநின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு!
ReplyDeletenice to read.. hahahahahahah...
thanks for sharing.. please read my tamil kavithaigal in www.rishvan.com
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்
வலைச்சர தள இணைப்பு : வாசிப்பும் சுவாசிப்பது போல!!