Posts

மூன்றுவரித் திரைப்படங்கள்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..! தம்பி கிழித்தான் கோட்டை! அண்ணி தாண்டினாள் கோட்டை! அண்ணன் விட்டான் கோட்டை! இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்! படித்து கிராமம் சென்றான்! ஊருக்காக நின்றான்! பங்காளியைக் கொன்றான்! ---- பொய்யாய் வேலை வைத்தியம்! பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்! மருத்துவமனைக்கே வைத்தியம்! ----- பத்துபேரும் பினாமி! கிருமிதான் எனிமி! எனிமி கொல்ல சுனாமி! ----- சேர்த்துவைத்த நட்புக்கு வலி! நட்பினால் காதல் பலி! மீண்டும் பிரிந்தால் பொலி! ------ ஆசையாய் இலவசப் படிப்பு ! ஆதிகேசவனால் இடிப்பு ! கள்ளப்பணத்தால் முடிப்பு! பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்! படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!

எல்லாரும் வாங்க!

Image
நமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எழுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இதோ! (எப்பவும் போல க்ளிக்கி பெரிசா பாருங்க!) சென்னைல இருக்குறவுங்க, அன்னிக்கு சென்னைக்கு வர்றவுங்க,இதுக்காகவே டிக்கெட் போட்டு வர்றவுங்க எல்லாரும் வாங்க! வாழ்த்தி மகிழ்வோம்! 

நியாயம்!

Image
அநியாய நேரக்கணக்கில் அதிகத்தொகை பார்க்கிங்! சில்லறை பாக்கிக்காக பிச்சைக்காரனாக்கும் நடத்துனர்! அசராமல் அடாவடி தொகை கேட்கும் ஆட்டோ! நோட்டீஸில் அன்பாக மிரட்டி வாங்கும் பள்ளி! யாவும் கண்டு பொருமினாலும், யாராவது கேள்வி கேட்பார்களென பாராமல் இருந்ததால் மாறாமலே இருக்கிறது! இனிமேல் நானும் இறப்புச் சான்றுக்குக்கூட வாங்கவேண்டிய லஞ்சத்தை கூட்டித்தான் ஆகணும்.!

நீயெல்லாம் நண்பனாடா?

Image
'நீயெல்லாம் நண்பனாடா?' இப்படிக்கேட்டுவிட்டுத்தான் ஆரம்பித்தான் சங்கர். 'நீதான் எதைப்பாத்தாலும் அப்படியே வரையிவியேன்னு உங்கிட்ட வந்து எங்க அப்பா கையெழுத்தை மார்க் ஷீட்டில் போடச்சொன்னா உடனே தர்மம் நியாயம் எல்லாம் பேசுறியே! உனக்கெல்லாம் நட்பைப்பத்தி என்னடா தெரியும்?' அவனோடு பிரபுவும்,சிவாவும் சேர்ந்துகொள்ள..அவன் அப்பா கையெழுத்தை அப்படியே போட்டேன். ' நண்பன்னா நீதாண்டா நண்பன்! 'என்றான் சங்கர் முகம் முழுக்க பற்களோடு! படித்து முடித்து ,ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது சிவாவும் என்னுடனேயே தங்கியிருக்க, ஒரு நாள் இரவு சினிமாவுக்குப்போனபோது, டிக்கெட் கவுண்ட்டருக்குள்ளிருந்து அந்தக்குரல் கேட்டது, 'நீயெல்லாம் நண்பனாடா? - இந்த ஊர்லதான் இருக்கேன்னு ஒருவார்த்தை சொல்லக்கூடாது.? ' 'அட..சங்கரு எப்படிடா இருக்க?' என்று அளவளாவ, இங்கதான் தியேட்டரில் டிக்கெட் குடுக்குறேன். நீ எங்க இருக்க? என்று விலாசம் வாங்கிக்கொண்டான். சில மாதங்களில்...ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் அறைக்கதவு தட்டப்பட, திறந்தால்..சங்கர்! என்னடா? 'நண்பா..தியேட்டருக்கு அடிக்கடி வரும் ...

விமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்

Image
அடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், அந்த வெற்றி நிலைக்கு வருவதற்காக அடைந்த அவமானங்கள், தலைகுனிவுகள், சிரமங்கள் ஆகியவற்றை அவனால் மறக்கவே முடியாது. அதிலேயே ஊறிப்போன அவன், நல்ல விளையாட்டுவீரனாவது எப்படி என்று ஒரு சிறப்பான பயிற்சியை அளிக்கமுடியும். சினிமா என்பது மற்றவர்களுக்கு பிரம்மாண்டமாய், சுலப வருமானமாய்த் தெரிந்தாலும், உள்ளிருப்பவர்களுக்குத்தான் அதன் சோகங்களும், சூட்சுமங்களும் தெரியும். அந்தவகையில், பல ஆண்டுகளாய் திரைத்துறையிலேயே வாழ்ந்து, வென்று ,தோற்று , மீண்டும் வென்று அதனையே சுவாசித்துக்கொண்டிருக்கும் திரு.சங்கர் நாராயண் (பதிவர் கேபிள் சங்கர் ) அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சினிமா வியாபாரம் படிக்க ஆரம்பித்தது ஒரு விமான நிலைய காத்திருப்பில்..! பின் எப்போது விமானத்தில் ஏறினேன்? அங்கு என்ன உண்ணக்கொடுத்தார்கள்? எப்போது அடுத்த நகரில் வந்திறங்கியது என்று தெளிவாக நினைவில்லாத வகையில் , சினிமா வியாபாரச் சுழலுக்குள் நான் சிக்கிக்கொண்டேன். ...

ராமனைக் கொன்றுவிட்டேன்

Image
அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள்.படித்துறைகளின் பக்கம் மட்டும் கொஞ்சம் வேகத்தைக்குறைத்துக்கொண்டேன். என்னுள் இறங்கி விளையாடும் அத்தனை குழந்தைகளும் சிரமமின்றி கரையேறுமாறு பார்த்துக்கொண்டேன். நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன். மன்னன் ராமன் ஆளும் பகுதியில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெருமை! எவ்வளவு நல்லவன்! காதல் ஒருத்தியைக்கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளையும், அதர்மத்தையும் சேர்த்து வீழ்த்தி..நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறான். என்ன ஒரு வருத்தம்! ..சீதையை சந்தேகப்பட்டு, அவளை விலகச்செய்து, இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்திருக்கவேண்டாம். படித்துறைகளில் பேசும் பேச்சை பல ஆண்டுகளாய்க்கேட்டுவருகிறேன். ராமனின் ஆட்சிபற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! இப்போது ராமனுக்கு வயதாகிவிட்டதா...

ஒதுங்கிய காவல்!

Image
அய்யனாரே! என்று சொல்லி படையல் படைக்கும்போதும், வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு கேட்கும்போதும், என்றாவது ஒருநாள் ஊருக்குள் அழைப்பார்கள் என்றுதான் நானும் நம்பிப்போய் நின்றுவந்தேன். காவல் தெய்வம் என்று கவனமாய்த் தள்ளிவைத்து, ஊர்வலத்தில் வர இயலா உருவத்தைக் கொடுத்துவிட்டு, குதிரையொன்றை நிற்கவைத்து, கூரைகூடக் கட்டாமல் கொண்டாடி நடிக்கிறார்கள். ஒதுக்க வேண்டுமென்று முடிவெடுத்தால் சாமியென்ன? மனிதனென்ன?