Thursday, December 13, 2007

உறவுகள்

பெற்றோரின் அன்பில்
பூரித்தல் இன்பம்!
நண்பர்கள் நட்பில்
நனைதலும் இன்பம்!
என்று எங்கள் இன்பம்
என்றென்றும் இன்பம்?

எண்ணி எண்ணி
மாய்ந்ததில்
எழுந்தன சில
வார்த்தைகள்!

வார்த்தைகளைக் கோர்த்து
வரிகளாக்கி
நிமிர்ந்து பார்த்தால்
எட்டிப்பார்த்து மகிழ்விக்கின்றன
என்னுள் அத்தனை
உறவினமும்!

வெளியூரில் வேலை கிடைத்து
வெற்றிகாணச் செல்லும்
வெறியுள்ள இளைஞனை
சற்று நிறுத்திக் கேளுங்கள்!
தம்பீ ! எங்கு தங்குவாய் !
' மாமன் வீடு இருக்கிறது.
அங்குதான் தங்குவேனென்பான்.

கட்டாய வேலையாக
கல்கத்தா செல்லுங்கள்!
புகைவண்டி நிலையம் வந்து
கூட்டிச்செல்வான்
அக்காள் மகன்!

பொருளாதார இக்கட்டை
புறங்கையால் தள்ளிவிட்டு
புத்துணர்வு கொள்ளும்
ஒற்றை மனிதனின்
மகிழ்ச்சிக்குப்பின்னால்
முகம் தெரியாத சித்தப்பாவின்
பண உதவி மறைந்திருக்கும்!

ஆளே இல்லாத ஊருக்கு
உங்களை அனுப்பிவிட்டு
அடுத்த மணி நேரத்தில்
அங்கொருவன் வந்து சேர்ந்து
இருவரும் பேசத்தொடங்கி
நன்கு பழகி உங்களுக்குள்
விளிக்கும் நாள் வரும்போது
வயதில் மூத்திருந்தால்
'அண்ணே'
வயது குறைந்திருந்தால்
'தம்பீ'
சம வயதிருந்தால்
'மாப்ளே'
என்றழைத்து
நட்பையும் உறவாக
மாற்றித்தான் மகிழ்வீர்கள்!

சில நாட்கள் முன்னர்
சிதறுண்டு கிடந்த நீங்கள்
ஒரே வாழ்க்கையில்
நுழைந்த பின்னர்
பெயர் சொல்லி அழைக்காமல்
உறவு சொல்லி அழைக்க
எந்த சட்டம் சொல்லியது?
அதுதான் இல்லை
உங்கள் 'சந்தோஷம்' சொல்லியது!

பெரியவர் ஒருவர்
உங்களை வழிநடத்த
நல்வழி கண்டு
நயம்பெற வாழும் நீங்கள்
அவரை உலகுக்கு
அறிமுகப்படுத்துவது
'இவர் எனக்கு அப்பா மாதிரி' !

கதை சொல்லும் யாவரும்
கண்ணிய கதைகள்
அன்பாகச் சொன்னபின்னர்
அந்தக்கால கதைகளுக்கு
அவர்கள் இடும் அடையாளம்
' பாட்டி சொன்ன கதை'

அப்பா அம்மா இல்லையென்றால்
அநாதை என்கிறோம்
அத்தனை அநாதைகளும்
விடுதிக்கு வருவதில்லை
வராத அவர்களுக்கு
அன்பான உறவிருக்கும்!

- உறவுகள் தொடரும்....

(கவிதையாவே நினைத்து படிக்கவும். இதன் பின்னணியில் ஒரு  தகவல் இருக்கிறது )

17 comments:

 1. கவிதையின் பிண்ணனியில் டெம்ப்ளேட்தான் வெள்ளையாக தெரிகிறது. ஒரு வேளை வெள்ளெழுத்துல எழுதிருக்கிறதுனால தெரிலயா? :)

  உரைநடையை ஒத்த வரிகள்.

  பிண்ணனி என்னன்னு இங்கவே போடலாம்ல அதுக்கு தனியா இன்னொரு பதிவு போட்டு கயமை செய்யலாம்னு பாக்கறீங்களா?

  ReplyDelete
 2. //பிண்ணனி என்னன்னு இங்கவே போடலாம்ல..//

  வாங்க 'தம்பி'.!

  எல்லாம் ஒரு லந்துதான்..

  மத்தபடி பதிவு வேற பெருசான மாதிரி உணர்வு..!

  ReplyDelete
 3. நல்லா இருக்குங்க.

  சஸ்பென்ஸ் வெச்சு தான் எழுதறதுன்னு சாந்தாரம்மன் கோயில்ல சத்தியம் பண்ணிட்டு தான் பிளாக் ஆரம்பிச்சீங்க போலிருக்கு.

  நடக்கட்டும்.

  ReplyDelete
 4. உறவுகள் ஒரு தொடர்கதைதான் ந்ம் வாழ்க்கையில் இறுதி வரை..கவிதை நன்று..

  ReplyDelete
 5. தேவயாணிDecember 13, 2007 at 12:51 PM

  "எண்ணி எண்ணி"

  இது என் டயலாக் இதை எப்படி நீங்க உபயோக படுத்தலாம்:))

  ReplyDelete
 6. டவுட் கேட்பவன்December 13, 2007 at 12:53 PM

  (கவிதையாவே நினைத்து படிக்கவும். இதன் பின்னணியில் ஒரு தகவல் இருக்கிறது )


  சர்ப் எக்ஸெல் போட்டு துவைச்ச மாதிரி பளீர் என்று தகவல் வெள்ளையா இருக்கு

  ReplyDelete
 7. ஆதங்கபடுபவன்December 13, 2007 at 12:54 PM

  சுரேகா.. said...
  ///மத்தபடி பதிவு வேற பெருசான மாதிரி உணர்வு..!///

  என்னாது உணர்வா? அப்ப இன்னும் பீல் செய்யலையா?

  ReplyDelete
 8. ஜொள்ளன்December 13, 2007 at 12:55 PM

  கல்கத்தா செல்லுங்கள்!
  புகைவண்டி நிலையம் வந்து
  கூட்டிச்செல்வான்
  அக்காள் மகன்!///

  அக்கா மகன் கூட்டி செல்வான் என்பதற்காக யாராவது கல்கத்தா போவங்களா? ஹி ஹி

  அக்கா மகள் என்றால் ஒரு யூஸ் இருக்கும்:))))

  ReplyDelete
 9. அருமையான கவிதை, தம்பீ என்று கவிதையில் வருவதால் தம்பி அவரை பத்தி எழுதி இருக்கீங்க என்று முதல் ஆளாக பின்னூட்டம் போட்டு இருக்காரா?

  ReplyDelete
 10. //சஸ்பென்ஸ் வெச்சு தான் எழுதறதுன்னு சாந்தாரம்மன் கோயில்ல சத்தியம் பண்ணிட்டு தான் பிளாக் ஆரம்பிச்சீங்க போலிருக்கு.//

  என்னவோ போங்க..
  புரிஞ்சுகிட்டா சரி..!

  ReplyDelete
 11. பாச மலர் said...

  //உறவுகள் ஒரு தொடர்கதைதான் ந்ம் வாழ்க்கையில் இறுதி வரை..கவிதை நன்று..//

  ஆமாங்க...நன்றி ! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 12. தேவயாணி said...

  //"எண்ணி எண்ணி"

  இது என் டயலாக் இதை எப்படி நீங்க உபயோக படுத்தலாம்:))//

  எண்ணாமல் எழுதிட்டேன்..
  எண்ண (என்ன) பண்றது?
  இனிமே எண்ணினதை எண்ணி
  எழுதி அனுப்பி
  எண்ணாம பதிஞ்சுடுறேன்ங்க.!

  (இப்ப என்ன செய்வீங்க..?? :-)))))

  ReplyDelete
 13. டவுட் கேட்பவன் said...

  //சர்ப் எக்ஸெல் போட்டு துவைச்ச மாதிரி பளீர் என்று தகவல் வெள்ளையா இருக்கு//

  அதுதான் பின்னணியே..

  (ராசா..தாங்கலை..எம்மேலயும் தப்பு இருக்கு..என்ன பண்றது?
  பின் துணின்னாவது போட்டிருக்கலம்)

  ReplyDelete
 14. ஆதங்கபடுபவன் said...

  //என்னாது உணர்வா? அப்ப இன்னும் பீல் செய்யலையா?//

  ஆமாம்பா..ஆமாம்.
  நல்லவேளை மானிட்டரைவிட்டு வெளில எழுதாம இருந்தோமேன்னு சந்தோஷப்படுங்க..!
  மற்றபடி..வருகைக்கு நன்றி..

  (ஆமா..அதெப்படி 4 பேரு ஒரே மெயில்ல..? சங்ங்கட்டமா இருக்காது?)
  :-)))

  ReplyDelete
 15. குசும்பன் Said..

  //தம்பீ என்று கவிதையில் வருவதால் தம்பி அவரை பத்தி எழுதி இருக்கீங்க என்று முதல் ஆளாக பின்னூட்டம் போட்டு இருக்காரா?//

  -அதெல்லாம் இல்லிங்கண்ணா..!
  அவரா பெரிய மனசு பண்ணி
  பின்னிட்டு போயிருக்காரு.!

  உங்க வருகைக்கு நன்றிங்க..

  அடிக்கடி எதிர்பாக்குறேன்.

  ReplyDelete
 16. அக்கா மகன் கூட்டி செல்வான் என்பதற்காக யாராவது கல்கத்தா போவங்களா? ஹி ஹி

  அக்கா மகள் என்றால் ஒரு யூஸ் இருக்கும்:))))

  - அடப்பாவிகளா..!
  அதுக்குள்ள இப்புடி ஒரு உள்குத்து இருக்குறது தெரியாம போச்சே..!
  ஆனா பெயருக்கு ஏத்த கேள்விதான்.!

  ReplyDelete
 17. எனக்கு கவுஜைன்னா ஒவ்வாமை(அலர்ஜி).இருந்தாலும் படித்தேன்.புரிந்தது

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...