பெட்டி கிடைச்சுப் போச்சு...!

பெட்டி தொலஞ்ச சோகத்தில் இருந்தாலும்...(இங்கதான் தொலச்சேன்

பாருங்க..) அது பஸ்ஸிலயே இருந்தா எப்படி இருந்திருக்கும்?

யாரும் தூக்கிட்டு போகாம இருக்கணுமேன்னு பல சிந்தனைல...
எதுக்கேன் கேட்டுப்பாப்போமின்னு..தொலச்சவனையே  நல்லா திட்டி..(நமக்கு அதுதானே தெரியும்..)திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி.. அதே பஸ் டிரைவர்கிட்ட கேட்டா ஒரு இனிப்பு சேதி.. பெட்டி பஸ்ஸில்தான் இருந்துச்சாம்..ஐயோ அப்புறம்.. இருக்காதா பின்னே?

அதை கோவைல ஒரு டிப்போல வச்சிருக்காங்களாம். அடையாளம் சொல்லி வாங்கிக்கலாமாம்.
அட்ரா சக்கை ! என் பொருள் வீண் போகாது.. அப்படியாக்கும் ..இப்படியாக்கும்னு பல்வேறு உதார்விட்டு... தங்கமணியையும் கூட்டிக்கிட்டு..(உல்லாசப்பயணம் + பெட்டி பேக் பண்ணினது அவுங்கதானே..) கோவை போனோம்ங்க.. அந்த டிப்போல ..நல்லா கவனிச்சாங்க..(அட.! உண்மைதாங்க..) என்னன்ன பொருள் எங்க வச்சீங்கன்னு கேட்டு சரிபாத்து..பெட்டியை கொடுக்கும்போது..சார் அன்னிக்கு ராத்திரி இந்த பெட்டியால நாங்க யாருமே தூங்கலை சார்..பஸ்ஸில் வேணும்னே யாரோ விட்டுட்டு போயிருக்காங்கன்னு..! குண்டு பயத்துல போலீஸெல்லாம் வச்சு மெதுவா திறந்தோம் சார்..! ன்னு அவுங்க பட்ட கஷ்டத்தையும் ஒரு பாட்டம் அழுது தீத்தாங்க.. ( ரொம்ப வெக்கமாத்தான் இருந்துச்சு...)தெரியாம இப்புடி நடந்துபோச்சுங்கன்னு சொல்லி (பெரிய நாட்டாமை...!)
மூக்கு ஒடஞ்ச பெட்டியை ( நெம்பித்தானே தெறந்திருக்காங்க..) எடுத்துக்கிட்டு நல்லபிள்ளையா சந்தோஷமா வூட்டுக்கு வந்தோம்..
அப்பாடி பெட்டி கிடைச்சிருச்சுன்னுதானே நினைக்கிறீங்க..அதுதான் விதி ஓரப்பார்வையால லந்தா பாத்திருக்குன்னு சொல்றது.. சரியா 15 நாள்ல அதுக்கு ஒரு ஆப்பு காத்திருந்த்து....! என்ன...?

Comments

 1. மொதல்ல பொட்டி கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்.

  அதென்னங்க ஒவ்வொரு தடவையும் சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிப்பாட்டி வைக்கிரீங்க.

  சீக்கிரம் அடுத்த பதிவு போட்டு சஸ்பென்ஸ உடைங்க.

  மண்டை வெடிச்சிடும் போல இருக்கு. :)

  ReplyDelete
 2. //சீக்கிரம் அடுத்த பதிவு போட்டு சஸ்பென்ஸ உடைங்க.

  மண்டை வெடிச்சிடும் போல இருக்கு. :)//

  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..!

  இந்தா உடைச்சிருவோமுல்ல...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..