நேர்மைன்னா என்னங்க?

நேர்மை என்றால் என்ன?

-அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.

ஏன் ஒவ்வாது..?

-ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும்.
கொஞ்சம் அடிப்படையாக சிந்திப்போம்.

ஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..!

நம் அனைவருக்கும் (பெரும்பான்மையாக) 18 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களாக இருப்போம். நகர வீதிகளில் சிறப்பாக ஓட்டிச்சென்றிருப்போம்.நம்மில் எத்தனைபேரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறது?நம்மை யாரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியதில்லை என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் நாம்
வாங்குவதில்லை. ஏன்..? நேரமில்லை.. என்போம். ஆனால் எத்தனையோ நேரங்களை வீணாக செலவழித்திருப்போம்.
இந்நிலையில் ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் , நல்ல வேகத்தில் செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்தால், அவரிடம் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதும் , அவரிடத்தில் கையூட்டு கொடுத்து நகர நினைப்பதும்தான் நடக்கும். இதுதான் லஞ்சத்தை ஊக்குவிக்கும் நேர்மையை மீறிய கயமைத்தனம்.!இங்குதான் பிறக்கிறது நேர்மையின்மை! நம்மால் ஒருவர் லஞ்சம் வாங்குவதை தட்டிக்கேட்க முடியாது. ஏனெனில் நாமும் தவறு செய்தவர்தான்..!நாம் யாருக்குமே பயப்படாமல் தவறுகளை தட்டிக் கேட்க துணிந்துவிட்டோமென்றால் நேர்மையானவர் ஆகிவிட்டோம் என்று அர்த்தம்.! ஏனெனில் எதிராளி குறைகூற நம்மிடம் ஒரு
தவறும் இருக்காது.!ஆகவே நேர்மையை உண்மைகொண்டே ஆரம்பிக்கமுடியும்..தைரியமாக உண்மை கூறப்பழகவேண்டும். நாம் கண்டிப்பாக பொய்கூறமாட்டோம் என்று எதிராளி எண்ணவேண்டும். மேலும் நம் சமூகம், அரசு ஆகியவை கூறும் நியாயமான செயல்களை அதே முறைப்படி பின்பற்றவேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டியிருக்காது. அதையும் மீறி தவறு நடந்தால்...

ரவுத்திரம் பழகவேண்டியதுதான்...!

"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,

தெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும். அப்போது பார்த்தால் அனைத்தும் மாற ஆரம்பிக்கும்.!  அனைவரும் நேர்மையாகிவிட்டோம் என்ற முடிவுக்கு விரைவில் நாம் வந்துவிடுவோம்.பயத்தின் அடிப்படையே நேர்மையின்மைதான்.! நேர்மை பழகிப்போனபின் பார்த்தால் நம் பலம் நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.!

முதலில் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதி பூணுவோம்..!

ஏனெனில் நாமெல்லாம் பூனைத்தோல் போர்த்திய புலிகள்!
பூனைத்தோலை உதறி புலியென்று உணருவோம். !  


Comments

  1. //
    ரவுத்திரம் பழகவேண்டியதுதான்...!
    //
    மொதல்ல ப்ளாகர்ல அத ஆரம்பிப்போமா!!!!!!!!!!!

    நல்ல பதிவு!!

    ReplyDelete
  2. //"என் ஒருவனால் இந்த உலகை, நாட்டை , ஊரை , கிராமத்தை,
    தெருவை, ஏன் என் குடும்பத்தைக்கூட மாற்றமுடியாது என்ற அவநம்பிக்க்கு அடிமையாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம். நேர்மை பழகிப்போய் அதன் ருசி கண்டுவிட்டால் அப்புறம் ஒரு கூட்டமே அதனை பயிற்சிசெய்யும்.//

    நல்லா சொல்லியிருக்கீங்க..

    எந்த அளவுக்கு நாம இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கோம்னு நினச்சுக்கூட பார்க்க முடியலை... லஞ்சம் கொடுக்கிறது பெரிய தப்பில்லைன்னு நினைக்குற அளவுல தான் இன்றைய தலைமுறை இருக்கு..ஹ்ம்ம்ம்

    இது என்ன லஞ்ச ஒழிப்பு மாதமா...

    எல்லாரும் போட்டி போட்டுட்டு எழுதறீங்க

    ReplyDelete
  3. மங்களூர் சிவா சொன்னது..

    //மொதல்ல ப்ளாகர்ல அத ஆரம்பிப்போமா!!!!!!!!!!!//

    அய்யய்யோ..இங்கல்லாம் அமைதியாத்தான் டீல் பண்ணணும்...!

    ReplyDelete
  4. மங்கை சொன்னது..

    //எந்த அளவுக்கு நாம இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கோம்னு நினச்சுக்கூட பார்க்க முடியலை... லஞ்சம் கொடுக்கிறது பெரிய தப்பில்லைன்னு நினைக்குற அளவுல தான் இன்றைய தலைமுறை இருக்கு..ஹ்ம்ம்ம்//

    ஆமாங்க..அதுதான் இன்னிக்கு விஸ்வரூபமெடுத்து நிக்கிது..! நாம நினைச்சா கண்டிப்பா விலக்கிடலாம்.

    ReplyDelete
  5. Hats Off!!!

    Being honest in ur life time, do u think it is possible?
    We can Better PRACTICE before we TEACH. I request every one who reads it & also the SUREKA, try to be honest in everything, completely for 24 active hours. U can understand how the world is, how much u r lying, how much u r fooling ur SELF.

    Don't think I'm pesimistic, I'm trying to continue this practice, not because for society but to make me happy. And when u r really HAPPY, Ur EGO will be PURE...
    This is the happiness which can't be hinderd or struked by any damned Creature in this world.

    They will fear even to oppose U infront of U... They can't even talk anything Insane. They will fear to LOOK at ur EYES...
    CAUSE, U R HONEST...

    ReplyDelete
  6. THE EAGLE said...

    //This is the happiness which can't be hinderd or struked by any damned Creature in this world.//

    வாங்க (டாக்டர். புருனோ..?) சார்..!
    வருகைக்கு நன்றி..!
    நீங்கள் சொல்வது உண்மைதான்.

    கண்டிப்பா.. நான் முடிஞ்சவரை நேர்மையைக் கடைபிடிச்சு சந்தோஷமா இருக்கேன். தட்டிக்கேட்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்.


    //They will fear even to oppose U infront of U... They can't even talk anything Insane. They will fear to LOOK at ur EYES...
    CAUSE, U R HONEST...//

    நூற்றுக்கு நூறு உண்மை.!
    அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  7. //நேர்மைன்னா என்னங்க?//


    இதுகூடவா தெரியாது....? ஹமாம் சோப்.. :)

    ReplyDelete
  8. சுரேகா,

    நல்லா சொன்னிங்க, பணம் கொடுத்து சாதிப்பதால் மட்டும் தவறில் இருந்து தப்பிப்பது நடக்கிறது என சொல்ல முடியாது.

    சில, பல விருப்ப தேர்வுகள் , பாரபட்சம் காட்டுவதும் தவறுகளை ஊக்குவிப்பது. என் ஊர்க்காரன்/ஜாதிக்காரன்/உறவினன் என்று ஒருவருக்கு சாதகம் செய்யும் போது அப்படிப்பட்ட வாய்ப்பு அல்லாதவனுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவன் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு போராடாமல் அவன் பணம் கொடுத்தாவது காரியம் சாதிக்க முயல்கிறான்.

    இங்கு தான் எல்லா சமூக சிக்கல்களும் ஊழல்களும் சாஸ்வதம் பெறுகின்றன.

    //ரவுத்திரம் பழகவேண்டியதுதான்...!//

    இதைத்தானே இங்கே வந்த நாள் முதலா செய்துக்கிட்டு இருக்கேன்... கொலை வாளினை எடடா கொடியோர் மிகு பூமியிலே.... எடுத்துட்டோம்ல வலைப்பூ வாளினை!

    நேர்மை என்பது வெளியில் பிறப்பதில்லை, நமக்குள் தான் பிறக்க வேண்டும் , ஊரும், நாடும் திருந்த நாம் திருந்த வேண்டும்.

    திருப்பதிக்கு சாமி கும்பிட போனாக்கூட வி.ஐ.பி லெட்டருக்கு ஏன் தனி மரியாதை. அந்த வி.ஐ.பி வந்த மரியாதைக்குடுக்கட்டும், அவன் தர காகிதத்துக்கு எதுக்கு தனிச்சிறப்பு. அந்த வி.ஐ.பி காகிதம் இல்லாதவன் ரிசர்வ் பேங் காகிதம் தருகிறான். எதுவுமே இல்லாம பெருமாள பார்க்கணும்னா ... அவதி தான்!

    ஏன் இப்படி?

    எல்லாரையும் ஒரே தட்டுல வைங்க, முன்னால வரவன் முன்ன போய்ப்பார்க்கட்டும். சர்வமும் அவனே ஆனா கடவுளைப்பார்க்கவே பல தராதரம் நிர்ணயித்தா எப்படி.

    ReplyDelete
  9. இராம்/Raam said...

    //இதுகூடவா தெரியாது....? ஹமாம் சோப்.. :)//

    இப்படி சொல்லித்தான் ஆரம்பிக்கறதா இருந்தேங்க..! ஆனா மொக்கையாப்போயிடுமோன்னு தவிர்த்தேன்.. நல்லவேளை முடிச்சுவச்சுட்டீங்க..!

    ReplyDelete
  10. வவ்வால் சொன்னது...

    //சில, பல விருப்ப தேர்வுகள் , பாரபட்சம் காட்டுவதும் தவறுகளை ஊக்குவிப்பது. என் ஊர்க்காரன்/ஜாதிக்காரன்/உறவினன் என்று ஒருவருக்கு சாதகம் செய்யும் போது அப்படிப்பட்ட வாய்ப்பு அல்லாதவனுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவன் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு போராடாமல் அவன் பணம் கொடுத்தாவது காரியம் சாதிக்க முயல்கிறான்.

    இங்கு தான் எல்லா சமூக சிக்கல்களும் ஊழல்களும் சாஸ்வதம் பெறுகின்றன.//

    ஆமாமா...ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் சொன்னேன். இதுக்கு பல முகங்கள் இருக்கு.

    நம்பள எங்க கொண்டு போய் விடும்னே தெரியாம பல விஷயங்கள் ஊறிப்போயிருக்கு!

    //இதைத்தானே இங்கே வந்த நாள் முதலா செய்துக்கிட்டு இருக்கேன்... கொலை வாளினை எடடா கொடியோர் மிகு பூமியிலே.... எடுத்துட்டோம்ல வலைப்பூ வாளினை!//

    ஆமாமா.. ஏதாவது ஒரு முறையில் நம்மால் தட்டிக்கேட்க முடிந்தாலே ஒரு வடிகால் கிடைக்கும். அதற்கும்மேல் கண்டிப்பா 2 பேராவது யோசிப்பாங்கல்ல.!

    //திருப்பதிக்கு சாமி கும்பிட போனாக்கூட வி.ஐ.பி லெட்டருக்கு ஏன் தனி மரியாதை. அந்த வி.ஐ.பி வந்த மரியாதைக்குடுக்கட்டும், அவன் தர காகிதத்துக்கு எதுக்கு தனிச்சிறப்பு. அந்த வி.ஐ.பி காகிதம் இல்லாதவன் ரிசர்வ் பேங் காகிதம் தருகிறான். எதுவுமே இல்லாம பெருமாள பார்க்கணும்னா ... அவதி தான்!//

    அய்யய்ய... அந்தக்கொடுமைக்காகவே நான் திருப்பதி போறதில்லை.
    மேலும் இப்படி அநியாயம் பண்ணுறவன் கொடுக்கும் காசை வாங்கிக்கிட்டு, அவனுக்கும் அருள்பாலிக்கும் சாமி...! என்னத்த சொல்ல..!

    ReplyDelete
  11. nermaiyana surekavidam thondanaha virupam. yetrukolveerhala?

    ReplyDelete
  12. Ilaignar ani thalaiva
    veerukondu ezhu.

    naangal irukirom un aniyil.

    Samudhaya nokkodu purappadum un pondra ilaignanalthan aniyayangal thavirkapadum.
    VAZHGA VAZHAMUDAN.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!