கறம்பக்குடி
புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்! விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது.
புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்
சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்!
இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.!
புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.
ஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம்! புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.
ஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம்! சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள்! நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள்! பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!
ஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம்! பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.
சின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!
அந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.
அந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.
(தொடரும்)

பள்ளிக்கூட மைதானத்துக்கு ஒரே ஒரு முறை கிரிக்கெட் விளையாட வந்திருக்கேன்.
ReplyDeleteகுடுகுடு, என்னயவிட ரொம்ப வேகமய்யா நீரு...
ReplyDeleteஆஹா! அப்படிப் போட்டுத் தாக்கு. கரம்பக்குடிக்கு இரண்டு பகுதிகளா :-). நன்று - அசத்து!
இங்க கட் பண்ணுறோம், நாளைக்கு அடுத்த எபிசொட்ல மீட் பண்ணுறோம் . என்ன அண்ணே ரெண்டாவது படிக்கும் போதே எதாவது திலலங்காடி வேலை செஞ்சிடிங்களா??
ReplyDeleteஅருமை சுரேகா.
ReplyDeleteதொடருங்கள்.
I know one more from that same place .He is Sundravadivel(blogger)
ReplyDeleteSangamithra
தடியன் சுப்பன் லூசன் சனியன்னு நாங்க டீயீஎல்சி பசங்களைப் பாத்து பாடுவோம். :))
ReplyDeleteஅடுத்த பதிவுக்காக மீ த வெயிட்டிங்.
2 முறை வந்திருக்கேன் கறம்பக்குடி
ReplyDeleteஜன்னல் வழியே பஸ்ல எறி சீட் பிடிச்சதும் கூட
வாங்க குடுகுடுப்பை...
ReplyDeleteரொம்ப மகிழ்ச்சி!
ஆமா...நீங்க எந்த ஊரு?
அண்ணாத்த...நன்றி!
ReplyDeleteநம்ம ஊரை நாமதான் சொல்லணும்..
அதேன்!
:)
வாங்க ரோமியோ! நேர்லயும் அப்படித்தான் இருக்கீங்க!
ReplyDeleteஅடப்பாவி! பதிவு பெரிசா போட்டா படிக்கமாட்டீங்களேன்னு தொடரும் போட்டேன்..அதான்!
:)
வாங்க சங்கமித்ரா..
ReplyDeleteஅதையும் சொல்லியிருக்கேனே! கவனிக்கலையா? :)
//பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!//
மிக்க நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா அண்ணே!
ReplyDeleteநீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தீங்க!
உங்கள் பதிவுகளைப்போலவே!
வாங்க! புதுகைத்தென்றல்!
ReplyDeleteமொத்தத்துல திட்டி முடிச்சாச்சு!
:))
மிக்க நன்றி!
வாங்க ஜோதி!
ReplyDeleteபுண்ணியஸ்தலத்துக்கு வந்திருக்கீங்களா?
அதான்..ஜன்னல்வழியே ஏறினாலும் சீட் கிடைச்சிருக்கு! :))
ஆகா, TELC இத்தனை தூரம் கிழிச்சிருக்கீங்களா..:( நான் எங்க ஊருல அந்த ஸ்கூல்ல தான் படிச்சேன் :))
ReplyDelete”அது” எதுங்க?
ReplyDeleteஅப்புறம் முதல் பதிவில், நட்சத்திர இத்தனை முன்னேபாடுகளோடு தொடங்கியது நீங்களாகத்தான் இருக்குமென ஒரு பின்னூட்டம் போட்டேன். காணவில்லையே
கறம்பக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். எங்க அப்பாவுக்குப் பிடிக்காத ஊர்.இருவருக்கும் காரணம் ஒன்றுதான்...அது எங்க அம்மா ஊர் :))
ReplyDeleteவாங்க முத்துலெட்சுமி!
ReplyDelete//ஆகா, TELC இத்தனை தூரம் கிழிச்சிருக்கீங்களா.//
ஆமா..நாங்க எங்க அங்க படிச்சோம்..கிழிச்சதுதான் ஜாஸ்தி..! :))
வாங்க கார்க்கி!
ReplyDeleteஅந்த 'அது' இன்று மாலையே தெரிந்துவிடும். :))
தெரியலையே!
மெயில் பாத்தீங்களா?
வாங்க அப்துல்லா!
ReplyDeleteஆமாங்க எனக்கும், பிடிச்ச ஊர் அதுதான்..எங்க அம்மாவுக்கு பிடிக்காத ஊர் அதுதான்..
ஏன்னா அது எங்க அப்பா ஊர்!
என்னா ஒரு ஒத்துமை?
:)))
பக்கத்திலதான் தஞ்சாவூர்.
ReplyDeleteசின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!
ReplyDeleteஅந்த பாட்டு எழுதுனது நீங்கதானா..
அந்த அது எது .... நட்சத்திரமே..!
Thekkikattan|தெகா said...
ReplyDeleteFebruary 17, 2010 4:47 AM
குடுகுடு, என்னயவிட ரொம்ப வேகமய்யா நீரு//
நாங்கெல்லாம் யூத்து
அருமை சுரேகா.
ReplyDeleteநான் அந்த பக்கம் வடகாடு வரை வந்து இருக்கேன் ....!
ReplyDeleteபால் பேட்மிண்டன் விளையாட ...!
வாங்க பேரரசன்...
ReplyDeleteஓ..அந்த ராஜராஜ சோழன் நீங்கதானா? :))
அது இன்னிக்கி மாலையில் தெரிஞ்சுடும்!
thanks for tamilmanam for making surekaa to write daily for this week.
ReplyDeletestaragiya yengal anbu surekaavukkum valthukkal.
sau.
என் வாழ்வை... நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் ! ..
ReplyDeletevery great man!
congrats!
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteFebruary 17, 2010 9:35 AM
கறம்பக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். எங்க அப்பாவுக்குப் பிடிக்காத ஊர்.இருவருக்கும் காரணம் ஒன்றுதான்...அது எங்க அம்மா ஊர் :)//
hahaha.... அப்துல்லா, உங்களுக்கும் நம்மூருதானா? அதுவும் அம்மா பொறந்த ஊரா, வாவ்! கலக்கல்ஸ்!!
குடுகுடுப்பை said...
ReplyDeleteFebruary 17, 2010 12:38 PM
Thekkikattan|தெகா said...
February 17, 2010 4:47 AM
குடுகுடு, என்னயவிட ரொம்ப வேகமய்யா நீரு//
நாங்கெல்லாம் யூத்து//
ஹாஹாஹா.... ஒத்துக்கிறோம், ஒத்துக்கிறோம் அப்போ நான் தவழும் குழந்த :D
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க தெகா அண்ணா!
ReplyDeleteஅப்ப அவர் குடுகுடுப்பை இல்லையா!
"குடு குடு'தானா!?
நீங்களே தவழ்ந்தா... நானெல்லாம் இன்னிக்குதான் டெலிவரி போல! :)
ஒரு முக்கியமானவரை விட்டுவிட்டேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததாலென நினைக்கிறேன்.
ReplyDeleteஅவர்..!
தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான திரு. தங்கமணி...அவரும் கறம்பக்குடியார்தான்! :)
மறதிக்கு மன்னிக்கவும்!
ayya nanum thekkikattanthan karambakkudikku palveru sirapellamirukkayya 9942003552
ReplyDeleteகரம்பக்குடிய பத்தி இவ்ளோ அழகா சொல்லிருக்கிங்க ..மிக்க நன்றி.. சுரேகா ..நானும் கறம்பக்குடிதான் ..
ReplyDeleteமூன்றாம் வகுப்பு வரை ரீனா மெர்சி ஸ்கூல்ல படிச்சேன் .4,5, செங்கமலம் ஸ்கூல்ல படிச்சேன், இப்போ BSC.. காட்சி தகவல் தொடர்பியல் முடிச்சிட்டு கரம்பக்குடியில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் பண்ணிட்டு இருக்கேன்.நன்றி.