ஒற்றை நொடி வாழ்க்கை..
நமக்கு வேலைகளைப்பற்றின பிரமிப்பு ஏற்படுறதுக்கு காரணமே, அதை அப்பவே செய்யும் மனநிலை இல்லாததுதான் ! மேலும் அதைப்பத்தி ரொம்ப பூதாகரமா நினைச்சுக்கிறதுதான்.!
ஒரு கடிகாரம் இருந்ததாம்.! அதிலுள்ள ஒரு நொடிமுள்ளுக்கு தன் வேலையைப்பத்திய பயம் வந்துடுச்சாம். நாம ஒரு நிமிஷத்துக்கு 60 நொடி டிக், டிக் னு சுத்தணும், அது போல 60 நிமிஷம் ஆனாத்தான் ஒரு மணி நேரம் ஆகும் ! 24 மணி நேரமானாத்தான் ஒரு நாள்! ஆக ஒரு நாளைக்கு 60 x 60 x 24 , 86400 தடவை டிக், டிக்குங்கணுமே, மேலும் இந்த கடிகாரத்தில் எத்தனை நாள் பேட்டரி தீராம இருக்குமோ..? நான் இவ்ளோ வேலை பாக்கணுமா? அப்டின்னுட்டு மயக்கம்போட்டு விழுந்துடுச்சாம்..! அப்ப பக்கத்திலிருந்த நிமிஷ முள் , நொடிமுள்ளை தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுட்டு சொல்லிச்சாம். நீ ஏன் இப்படி கவலைப்படுற ! உன் வேலை ரொம்ப சிம்பிள்! ஒரு தடவை டிக் ன்னு நகரணும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் அடுத்த நொடி வேலையைப்பாரு! ன்னுதாம். அப்பதான் நொடிமுள்ளுக்கு ஒரு தெளிவு பிறந்ததாம்.
அதுபோலத்தான் நாமளும் , காலேஜ் போறதும் , வேலைக்குப்போறதும் வருஷக்கணக்கா பண்ணனுமேன்னு கவலைப்பட்டா ஒரு வேலையும் நடக்காது ! இன்னிக்கு ஒருநாள் நல்ல ஸ்டூடண்டா.. நல்ல ஊழியரா இருந்துடணும் னு நினைச்சுக்கிட்டு போங்க! அதே போல், தினமும் நினைங்க! அவ்வளவுதான்.. நீங்கதான் வாழ்நாள் சாதனையாளர் !
அதே சமயம் ஒரு வேலையை கவனமா செய்யறதுன்னா, அதை செய்யும்போது ,வேற எதையும் நினைச்சுக்கிட்டு செய்யக்கூடாது..! ஆனா நிறைய நேரத்துல அப்படித்தான் நடந்துடுது! உதாரணமா, வீட்டுக்கதவை பூட்டினோமான்னு ரொம்ப தூரம் போனதுக்கப்புறமும், கியாஸை மூடினோமான்னு வீட்டைப் பூட்டினதுக்கப் புறமும் யோசிக்க ஆரம்பிச்சுடுவோம்.. சிலபேர் சந்தேகத்துக்கு போய் பாத்துட்டே வந்துடுவாங்க! மேக்ஸிமம்..பூட்டித்தான் இருப்பாங்க! இல்ல கியாஸை மூடித்தான் இருப்பாங்க.! அப்ப எங்க தப்பு நடந்துச்சு? கதவை பூட்டும்போதும், கியாஸை மூடும்போதும், ' கதவை பூட்டுறோம்,கியாஸை மூடுறோம்னு நினைக்காம வேற எதையாவது நினைச்சுக்கிட்டு செய்யும்போது இந்தமாதிரி தப்பு நடக்கத்தான் செய்யும்.. எதை செய்யுறோமோ அந்த நேரத்தில் அதைச்செய்யும் விழிப்புணர்வோட இருந்தா கவலையே இல்லை! நம்மள விட கான்சன்ட்ரேஷன் உள்ள ஆளு இந்த உலகத்திலேயே இருக்க முடியாது! அதுக்கு , அந்த நொடியை ரசிச்சு வாழணும்!
ஜென் துறவி ஒருத்தர் இறக்குற தருவாயில் இருந்தாராம் ! அந்த ஆசிரமத்தில் அடுத்த தலைவர் யாருன்னு சொல்லாம இறந்துடுவாரோன்னு எல்லாரும் கவலைப்பட்டுக்கிட்டே இருந்தாங்களாம். அவருக்கு பக்கத்தில் மாம்பழம் வச்சிருந்தாங்களாம்.அவருக்கு மாம்பழம்னா ரொம்ப பிடிக்குமாம். அதையே பாத்தாராம். உடனே அவரோட சீடர்கள் மாம்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்தாங்களாம். அதை சாப்பிட ஆரம்பிச்சாராம். அவர் வாயிலேருந்து வரப்போற அந்த கடைசி வார்த்தைக்காக காத்திருந்தாங்களாம். பொறுமை தாங்காம ஒரு சீடர் , ஐயா..உங்களுக்கு அடுத்ததா இங்க யாரை தலைவ்ரா போடுறதுன்னு சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டராம். துறவி மெதுவா எல்லாரையும் சுத்திப்பாத்தாராம். அப்புறம் ' மாம்பழம் நல்ல டேஸ்ட்' அப்படின்னு சொல்லிட்டு இறந்துட்டாராம். அந்த நொடியை இரசிச்சு வாழணும்னு சொல்லாம சொல்லிட்டாராம். அடுத்த நொடியைப்பத்தியோ, அடுத்த நாட்கள் பத்தியோ.. நாம செய்யுற இந்த நொடி வேலைதான் தீர்மானிக்கும்! ஜென் துறவிகள் ஒரு கப் டீயைக்கூட 'அதைவிட்டா இந்த உலகத்தில் வேற வேலையே இல்லை ங்கிற மாதிரிதான் குடிப்பாங்க!
கான்ஸன் ட்ரேஷன், ஞாபக சக்தி இதுக்கெல்லாம் அடிப்படை அந்த நொடி என்ன செய்யுறோம்கிறதை கவனிச்சு செய்யுறதுதான்.! ஆனா அதுவே வேறமாதிரியும் work out ஆகிடும்.
ஒரு ட்ரெயின் டிரைவருக்கான பயிற்சி நடந்தது. அதில் டிரைவருக்குரிய எல்லா வேலைகளையும் கத்துக்கொடுத்தாங்க! அப்ப முக்கியமா, ரயில்வே தண்டவாளத்தில் மனிதரோ விலங்கோ நின்னா இரயிலை நிறுத்தவே வேண்டாம். அடிச்சுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அதுக்கு கேஸெல்லாம் கிடையாதுன்னு சொன்னாங்க..! அந்த பயிற்சியில் மொக்கச்சாமின்னு ஒரு ஆளு கலந்துக்கிட்டாரு.! நல்லா கவனமா கேட்டுக்கிட்டாரு.. யாரும் குறுக்க வந்தா அடிச்சுட்டு போயிடலாமா சார்..! ன்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு உறுதிப்படுத்திக்கிட்டாரு. அந்த அதிகாரிக்கு ஒரே சந்தோஷம் ...பாருங்க ! எப்படி சின்சியரா கவனிச்சு , கேள்வியெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறாரு..! இவர் பெரிய ஆளா வருவாருன்னு புளகாங்கிதமடைஞ்சாரு! ட்ரெயினிங் முடிஞ்சுது.. நம்ம மொக்கச்சாமி டூட்டில ஜாயின் பண்ணினாரு. சேந்து ஒரே வாரத்துல பெரிய விபத்து! பல நூறு பேர் பலியாகிட்டாங்க ! ட்ரெயின் தண்டவாளத்த விட்டு 500 அடி தள்ளி விழுந்து கிடக்கு...! உடனே மொக்கச் சாமியை கூப்பிட்டு, எப்படி விபத்து நடந்துச்சுன்னு கேட்டாங்க!
அவரும் 'நீங்க சொல்லிக்குடுத்ததை செஞ்சேன் இப்ப்டி ஆயிடுச்சு'ன்னார்.
அய்யய்யோ நான் என்னப்பா சொல்லிக்குடுத்தேன்னாரு அதிகாரி.
நீங்கதானே யாராவது தண்டவாளத்தில் நின்னா அடிச்சுட்டு போக சொன்னீங்க!
ஆமாம் சொன்னேன்..அதுக்கு என்ன? ன்னாரு அதிகாரி!
............................... தொடருமுல்ல !

ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழனும்கிறீங்க!!
ReplyDeleteஅனுபவிச்சிடுவோம்.
Good subject.. ellorukkum ithu nadanthirukkum… nalla kaiaandirukeenga…
ReplyDeleteவேற எதையாவது நினைச்சுக்கிட்டு செய்யும்போது இந்தமாதிரி தப்பு நடக்கத்தான் செய்யும்.. எதை செய்யுறோமோ அந்த நேரத்தில் அதைச்செய்யும் விழிப்புணர்வோட இருந்தா கவலையே இல்லை
enakku mattum anti ellorukkum ithu common thaan.. but naa appadithaan enakkul sollikolven..oru work pannumpothu kavanam muluvathum athil irrukkavendum ontai ninaithukondu oru vaelai seiyumpothu ippadithan unnecessary confusion.
ஞாபக சக்தி இதுக்கெல்லாம் அடிப்படை அந்த நொடி என்ன செய்யுறோம்கிறதை கவனிச்சு செய்யுறதுதான்.!
The above is true.. naam vunnumpothu kooda kavana chitharalkal koodathu…
vibin
வேரென்ன இன்னொரு ட்ரெட்யின்தான் =)))
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete//ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழனும்கிறீங்க!!
அனுபவிச்சிடுவோம்.//
வாங்க சிவா!
கண்டிப்பா அப்படி வாழ்ந்தாத்தான். இந்த வாழ்க்கைச்சிக்கல்களை வேடிக்கை பாத்து தீர்க்க முடியும்.
நன்றி!
Anonymous said...
ReplyDelete//Good subject.. ellorukkum ithu nadanthirukkum… nalla kaiaandirukeenga…//
நன்றி அனானி..!
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDelete//வேரென்ன இன்னொரு ட்ரெட்யின்தான் =)))/
வாங்க! அய்யய்யோ..இன்னொரு ட்ரெயினா...??
லிவிங் ஒன் டே அட் அ டைம் னு இருக்கணும்.
ReplyDeleteநாளைக்குக் கதை நாளைக்கு. பொழைச்சுக் கிடந்தாப் பார்க்கலாமுன்னு எங்க பாட்டி சொல்வாங்க.
அது நினைவுக்கு வருது.
நல்லா இருக்கு சுரேகா
ReplyDelete