நான் என்ன தப்பு செஞ்சேன்..?

சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.

அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா?

அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு!

சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.

நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ?

அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு!

அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது!

சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத!

ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா?

கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா!

இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ!

அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல!

ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற?

இல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு!

அதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.!

சரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா! என்னிக்கு சண்டைன்னு சொல்லு! நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.

கவலப்படாதடீ..எல்லாம் நல்லபடியா நடக்கும்.

வூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு.! ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ?

ராத்திரி வூட்டுக்கு வந்தேன்.


மத்தாயி ! ஒரு விசயம் தெரியுமா?

என்னய்யா!

இன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக!

சரி..அதுக்கென்ன?

அவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.

ம்

இன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.

சரி.

அவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது!

என்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா?

இல்லடீ! அத வுட நல்ல விசயம்!
அந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். !

தனியாவா?

ஆமாங்குறேன்.

மவராசன்.நல்லா இருக்கணும்.! எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.

களுத..நீ ஏன் கவலப்படுற? அதான் நல்லது நடக்கப்போவுதுல்ல!

ஆமா..எப்புடி கொல்லப்போறாராம்.?

அதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்!  எனக்கு எப்புடி தெரியும்?

சிப்பாயா? யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த! மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க? பெருசா பீத்திக்கிற?

அது கெடக்கு! நீ ஏன் ரொம்ப கவலைப்படுற!

சொல்லுவய்யா சொல்லுவ..! உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.

சரிடா கண்ணு! நான் என்ன பண்றது சொல்லு! இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.!

அடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு! ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு! அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.


வூட்டுக்கு சந்தோசமா வந்தேன்.


அடியே..! இப்ப பாத்தியா? உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு!

எல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை! உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு.! நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல!

ஆமாங்குறேன்.

அடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு.! என்னடா இது ! இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா?

அவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா!

கவலப்படாதடீ ! சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா  ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.

அது எப்புடி பேசுவாக! எனக்கு ராமரோட நாயமே புரியல! அவரு மனுசருதானே.! ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா? என்ன கெரகம் இது?
அவுங்கள்லாம் அரக்கருங்களாமுல்ல! அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக? யோவ்! ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா!

ஏண்டி இப்புடி பொலம்புற? நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற?

அதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல! அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க!

கவலப்படாதடீ செல்லம்.! எனக்கும் ஓன் நியாயம் புரியுது! இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.

எனக்கென்னமோ பயமா இருக்குய்யா!

அன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ! எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க! கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு! போனவுடனேயே சண்டையப்போடுங்கன்னுட்டாங்க!

எதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு! நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல! என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா  இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு ! எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது! தூரத்துல ராமரு
ராவணனைப்பாத்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரு..! உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' ! கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ..! என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி?

என்ன ராமரே.! நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக.! நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,

நான் என்ன தப்பு செஞ்சேன்?  

Comments

 1. கம்பராமாயணம்
  வால்மீகிராமாயணம்

  வரிசையில்

  சுரே'காம'யாயணம்

  நன்று.

  ReplyDelete
 2. அதாவது, ஒரு வானரத்தின் மனநிலையில் இன்றைய ஈராக் போரை புஷ் ஒரு படைவீரனுள் வைச்சி திணிச்ச மாதிரிங்கிற மாதிரி இருக்கு... இந்தக் கதை.

  :))) சும்மா லூசுல விடுங்கப்பா...

  ReplyDelete
 3. அருமை.. அருமை.. இப்படிப்பட்ட எழுத்துக்கள் இப்போ தமிழ்ப் பதிவுகள்ல வரது கம்மியாகிருச்சு. :(

  ReplyDelete
 4. //அதாவது, ஒரு வானரத்தின் மனநிலையில் இன்றைய ஈராக் போரை புஷ் ஒரு படைவீரனுள் வைச்சி திணிச்ச மாதிரிங்கிற மாதிரி இருக்கு... இந்தக் கதை.//

  தெ.கா , பெரிய அரசியல் சாணக்கியரா இருப்பார் போல இருக்கே :-))

  சுரேகா நீங்க செஞ்ச தப்பே இதை எழுதினது தான்னு இன்னொரு வானரம் சொல்லுதுதாம் :-))

  இப்போலாம் இப்படி நல்லா எழுதினா அது தப்புனு சொல்லுறாங்க அதை சொன்னேன்!

  ReplyDelete
 5. வாவ்... சூப்பர்ப்.. கொஞ்சமும் நினைத்துப்பாக்காத பார்வை... கலக்கிட்டீங்க.. வாலை.. ஐ மீன்... கையை கொடுங்க... :-)

  ReplyDelete
 6. மங்களூர் சிவா said...

  //கம்பராமாயணம்
  வால்மீகிராமாயணம்

  வரிசையில்

  சுரே'காம'யாயணம்

  நன்று.//


  நன்றிங்க...சிவா


  அய்யய்யோ..
  இது வாழ்த்தா வசவா?

  ReplyDelete
 7. Thekkikattan|தெகா said...

  //அதாவது, ஒரு வானரத்தின் மனநிலையில் இன்றைய ஈராக் போரை புஷ் ஒரு படைவீரனுள் வைச்சி திணிச்ச மாதிரிங்கிற மாதிரி இருக்கு... இந்தக் கதை.

  :))) சும்மா லூசுல விடுங்கப்பா...//

  வாங்கண்ணா..!

  ஆக்ஹா...!

  ஈரை டைனோசராக்குற விஞ்ஞானி நீங்கதானா...!??

  அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 8. வவ்வால் said...


  //தெ.கா , பெரிய அரசியல் சாணக்கியரா இருப்பார் போல இருக்கே :-))//

  ஆமாங்குறேன்...:-)  //இப்போலாம் இப்படி நல்லா எழுதினா அது தப்புனு சொல்லுறாங்க அதை சொன்னேன்!//

  வாங்க..
  நீங்க வாழ்த்துறீங்கன்னே எடுத்துக்கவா?
  பின்னூட்டத்திலேயே பின்றீங்க!

  ReplyDelete
 9. ILA(a)இளா said...

  ///அருமை.. அருமை.. இப்படிப்பட்ட எழுத்துக்கள் இப்போ தமிழ்ப் பதிவுகள்ல வரது கம்மியாகிருச்சு. :(//

  உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றிங்ண்ணா!

  ReplyDelete
 10. ச்சின்னப் பையன் said...

  //வாவ்... சூப்பர்ப்.. கொஞ்சமும் நினைத்துப்பாக்காத பார்வை... கலக்கிட்டீங்க.. வாலை.. ஐ மீன்... கையை கொடுங்க... :-)//

  நன்றிங்க! ..ஆமா..உண்மையிலேயே
  நீங்க சின்னப்பையனா?

  அப்பாடி பழிக்குப்பழி வாங்கியாச்சு! :-)
  :-)
  :-)

  ReplyDelete
 11. வித்தியாசமான பார்வையில் கலக்கலாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் சுரேகா.

  ReplyDelete
 12. அட .. வாஸ்தவமான கேள்விகள் .. வித்தியாசமான கோணம் .. :-)

  ReplyDelete
 13. என்னய்யா கலக்கிப்புட்டீர்!!!!

  ரொம்ப நல்லா இருக்கு.

  பாவம் அதுங்க. அதுக்கும் குடும்பம் குழந்தைகுட்டின்னு இருக்கே....

  ReplyDelete
 14. நிஜமா நல்லவன் said...

  //வித்தியாசமான பார்வையில் கலக்கலாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் சுரேகா.//

  வாங்க நிஜமா நல்லவன் .
  நன்றிங்க!

  ReplyDelete
 15. யாத்திரீகன் said...

  //அட .. வாஸ்தவமான கேள்விகள் .. வித்தியாசமான கோணம் .. :-)//

  வாங்க யாத்திரீகன்..

  முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க!

  ReplyDelete
 16. துளசி கோபால் said...

  //என்னய்யா கலக்கிப்புட்டீர்!!!!
  ரொம்ப நல்லா இருக்கு.//


  வாங்க...நன்றிங்கம்மா!


  //பாவம் அதுங்க. அதுக்கும் குடும்பம் குழந்தைகுட்டின்னு இருக்கே...//

  ஆமாம். ஒரு குரங்குக்குடும்பத்தை சமீபத்தில் ஒரு அரைமணிநேரம் கவனித்ததன் விளைவுதான்...!

  ReplyDelete
 17. சுரேகா அண்ணாச்சி,

  //நீங்க வாழ்த்துறீங்கன்னே எடுத்துக்கவா?
  பின்னூட்டத்திலேயே பின்றீங்க!//

  வாழ்த்தே தாங்க , அதில என்ன சந்தேகம், கொஞ்சம் தலை கீழா சொல்லிட்டேன் :-))

  இந்த காலத்தில ரொம்ப்ப நல்லவானா இருந்தாலே தப்புனு சொல்லும் போது , தமிழ்மணத்தில நல்லா எழுதினாலும் தப்புனு சொல்லிடுவாங்களே , நீங்க ரொம்ப நல்லா வேற எழுதி இருக்கிங்களே!

  ஆனாலும் நீங்க இப்படி அடிக்கடி தப்பு செய்யனும் :-))

  //ஒரு குரங்குக்குடும்பத்தை சமீபத்தில் ஒரு அரைமணிநேரம் கவனித்ததன் விளைவுதான்...!//

  உங்க பக்கத்து வீட்டுக்காரங்களை பத்தி இப்படிலாம் சொல்லக்கூடாது :-))

  ReplyDelete
 18. சுரேகா

  அருமையான புனைவு, ஒரு மூலத்திலிருந்து இப்படி இன்னொன்றை உருவாக்கும் வித்தைக்கு நிறைந்த திறமை வேணும், நல்லாவே செஞ்சிருக்கீங்க. இதுபோல் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வித்தியாசமான பார்வை...அருமையான நடை!

  வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 20. வவ்வால் said...

  //சுரேகா அண்ணாச்சி,

  வாழ்த்தே தாங்க , அதில என்ன சந்தேகம், கொஞ்சம் தலை கீழா சொல்லிட்டேன் :-))//

  அப்பாடி..இப்பதான் நிம்மதி..!

  //இந்த காலத்தில ரொம்ப்ப நல்லவானா இருந்தாலே தப்புனு சொல்லும் போது , தமிழ்மணத்தில நல்லா எழுதினாலும் தப்புனு சொல்லிடுவாங்களே , நீங்க ரொம்ப நல்லா வேற எழுதி இருக்கிங்களே!

  ஆனாலும் நீங்க இப்படி அடிக்கடி தப்பு செய்யனும் :-))//

  நீங்களே சொல்லிட்டீங்க..அப்புறம் என்ன? செஞ்சுட்டா போச்சு!

  //உங்க பக்கத்து வீட்டுக்காரங்களை பத்தி இப்படிலாம் சொல்லக்கூடாது :-))//

  அடடே..இந்த ஐடியா என் லிஸ்ட்லயய இல்லையே..! அடுத்த வீட்டுக்காரர். இந்த பதிவு படிக்காமலிருக்கக்கடவது..!

  ReplyDelete
 21. தஞ்சாவூரான் said...

  //வித்தியாசமான பார்வை...அருமையான நடை!

  வாழ்த்துக்கள் :)//

  நன்றிங்கண்ணா..

  எல்லாம் உங்க வழிகாட்டுததால்கள்தான்.! :)

  ReplyDelete
 22. புதுகைத் தென்றல் said...

  //superungo.

  nalla iruku. vaalthukal//

  வாங்க..நல்லா இருக்கீங்களா?

  நன்றி..! உங்களைவிடவா கலக்குறோம்.?

  ReplyDelete
 23. முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் கிடைக்கவில்லை போல.

  மூலப்படைப்பிலிருந்து இப்படியான புனைவைத் தருவதற்கு அபரிதமான திறமை வேண்டும். அனுபவப்பட்ட எழுத்தாளரின் கைவண்ணம் உங்களின் இந்தப் படைப்பில் தெரிகின்றது.

  ReplyDelete
 24. good critics. but such a critics from you!

  different aaka...

  ReplyDelete
 25. கானா பிரபா said...

  //சுரேகா

  அருமையான புனைவு, ஒரு மூலத்திலிருந்து இப்படி இன்னொன்றை உருவாக்கும் வித்தைக்கு நிறைந்த திறமை வேணும், நல்லாவே செஞ்சிருக்கீங்க. இதுபோல் தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

  ReplyDelete
 26. கானா பிரபா said...

  //முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் கிடைக்கவில்லை போல.//

  ஸாரி அண்ணா..அது..பல பின்னூட்டங்களுக்குள் மறைந்திருந்தது. ஜி மெயிலில்..தெரியவில்லை..இப்ப போட்டுட்டேன்.

  ReplyDelete
 27. Anonymous said...

  //good critics. but such a critics from you!

  different aaka...//

  நன்றிங்க!

  ReplyDelete
 28. கயல்விழி முத்துலெட்சுமி said...

  //நல்லா இருக்கே இது.. :)//

  முதல் வருகைக்கு நன்றிங்க!

  அடிக்கடி வாங்க!

  ReplyDelete
 29. சுரேகா,

  நல்லாவே பண்ணியிருக்கேம்மா நீ. ஏதேச்சயாதா இந்த வலைப்பூவுக்கு வந்தேன் ஆனா இன்னிலயிருந்து என்னோட புக்மார்குக்கு இந்த வலைப்பூவும் வருது.

  ஒரு புனைகதையில இருந்து இன்னொரு யதார்த்தமான புனைகதை. கலக்கல்ஸ்..ரொம்ப டச்சிங்க்.

  தொடர்ந்து கலக்கும்மா..

  ReplyDelete
 30. கருத்துக்கள் அருமை !!

  ReplyDelete
 31. கௌபாய்மது said...

  சுரேகா,

  //நல்லாவே பண்ணியிருக்கேம்மா நீ. ஏதேச்சயாதா இந்த வலைப்பூவுக்கு வந்தேன் ஆனா இன்னிலயிருந்து என்னோட புக்மார்குக்கு இந்த வலைப்பூவும் வருது.//

  முதல் வருகைக்கு
  ரொம்ப நன்றிங்கண்ணா..
  இந்த அன்பு எனக்கு அதிகம் பொறுப்பு தருது!

  //ஒரு புனைகதையில இருந்து இன்னொரு யதார்த்தமான புனைகதை. கலக்கல்ஸ்..ரொம்ப டச்சிங்க்.

  தொடர்ந்து கலக்கும்மா..//

  கண்டிப்பா முயற்சி பண்றேன்..!

  ReplyDelete
 32. தமிழ் குழந்தை said...

  //கருத்துக்கள் அருமை !!//

  முதல் வருகைக்கு நன்றிங்க !

  ReplyDelete
 33. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் செஞ்சுரி அடிக்கவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. அருமையான பதிவு.

  ReplyDelete
 35. நிஜமா நல்லவன் said...

  //50வது பதிவுக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் செஞ்சுரி அடிக்கவும் வாழ்த்துக்கள்.//


  வாங்க நிஜமா நல்லவன்! நன்றிங்க!

  ReplyDelete
 36. ரமணன் said...

  //அருமையான பதிவு.//

  வாங்க ரமணன்! நன்றிங்க!

  ReplyDelete
 37. இதெல்லாம் கொஞ்சம் ஓவருய்யான்னு சொல்ல தோணல :)

  (நடை அற்புதம்)

  சுரேகாயணம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. நன்றி நிலாரசிகன்!

  ReplyDelete
 39. Dear Surekha

  I have not expected from my ilaval. Really wonderful padaippu.
  How about publishing a sirukadhai thokuppu with all your padaippukkal. It will add a feather in the crown of thamizh-thai.

  With warm regards

  S. Bhaskar
  9908732667

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தசாவதாரம் - விமர்சனம் !

நித்யானந்தாவும், நானும்..!

அகவை 70ல் அப்பா!