ஆனந்த விகடனில்.....

ஆனந்த விகடனில் டிக்..டிக்..டிக் என்ற தலைப்பில் வந்த ஜாலியான, ஆனால் ஏறத்தாழ உண்மையான தத்துவங்கள் மிகவும் நன்றாக உள்ளன. இப்போதெல்லாம், வாங்கியவுடன் அதைப்படிக்கும் அளவுக்கு அடக்கமுடியாத ஆவலைத்தூண்டும் தத்துவங்களை கொஞ்சம் கொத்தி எடுத்து..உங்கள் முன்னால்..! 

ஒரே காரணம்!
விவாகரத்துக்கு முக்கியக் காரணம்... திருமணம்தான்!

பெண்களின் தப்பு!
பல பெண்கள் ஒன்றுமில்லாததுக்கெல்லாம் பரவசப்படுகிறார்கள். அது கூடப் பரவாயில்லை; அவர்கள் செய்யும் தப்பு, அதையே கல்யாணமும் செய்துகொள்வதுதான்!

மனிதன்
திருமணம் ஆகும் வரை எந்த ஒரு மனிதனும் முழுமை பெறுவதில்லை; திருமணம் ஆன பின்போ... முடிந்தேபோகிறான்!

பின்புத்தி!
இரண்டு கால்களாலும் நீரின் ஆழத்தைச் சோதிக்காதே!

சொல்லாதே!
உண்மை என்பது மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு விஷயம். அதனால், தகுதியற்றவர்களிடம் அதைக் கொடுக்கலாகாது!

அந்த முயற்சியாவது...
யாராவது உங்களிடம் வந்து உதவி கேட்டால், அதைச் செய்து தர நீங்கள் முயற்சி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை; ஆனால், முயற்சி செய்யவாவது
முயற்சி செய்யுங்கள்!

வித்தியாசம்
அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான். அறிவாளி தன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறான்; புத்திசாலி பிறரின் தவறுகளிலிருந்து பாடம்
கற்கிறான்!

அந்த ஒரு கலை!
உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் கலையை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும்... நீங்கள் தினம் தினம் புதிது புதிதாக நிறையக் கற்க முடியும்.

வள்ளல்
பெரும்பாலும் நாம் எல்லோருமே நமக்குத் தேவையில்லாத, நாம் உபயோகப்படுத்தாத ஒன்றைத்தான் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறோம். புத்திமதியும் ஆலோசனையும்கூட அப்படித்தான்!

அர்த்தம்
'வாழ்க்கை' என்பதற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாமலே நாட்களைக் கடத்துவது சரியல்ல; அதனால், அகராதியை ஒருமுறை உடனே புரட்டிப் பார்த்துவிடுங்கள்!

சாக்லெட் வாழ்க்கை
வாழ்க்கை என்பது சாக்லெட் உள்ள பெட்டி என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், பலருக்கு ஒன்றிரண்டு சாக்லெட்டுகள் மட்டுமே உள்ள பிரமாண்ட
பெட்டியாகவே அமைந்துவிடுகிறது!

இயற்கை முரண்!
ஒரு வேடிக்கை பார்த்தீர்களா... மனிதனுக்குக் கண் இரண்டு; காது இரண்டு. வாய் மட்டும் ஒன்றுதான். ஆனாலும், கவனிப்பதை விட அவன் பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது!

இரண்டு வகை!
மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு வகையினர் - என்னைப் போல் மனிதர்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பவர்கள்; இரண்டாவது வகையினர் - அப்படிப் பிரிக்காதவர்கள்!

புத்திசாலித்தனம்!
நீங்கள் ஜெயிக்கவில்லை என்றால் பரவாயில்லை; உங்கள் முயற்சியின் தடயங்களை அழித்துவிடுங்கள்!

இதுதாண்டா உலகம்!
யாருமே உங்களைக் கவனிக்கமாட்டார்கள் - நீங்க ஏதாவது தப்பு செய்கிற வரைக்கும்!

இரண்டு வழிகள்!
பெண்களிடம் வாதாட இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆனால், இரண்டுமே பயனற்றவை.

அது இயல்பல்ல!
தவறுவது மனிதருக்கு இயல்பானதுதான்! ஆனால், மன்னிப்பது கம்பெனியின் கொள்கைக்கு முரணானது!

சுய முன்னேற்றம்!
சுய முன்னேற்றத்துக்கான முதல் படி, புத்தகக் கடையில் அது தொடர்பான புத்தகத்தை சேல்ஸ்மேன் உதவியின்றி நீங்களே தேடி எடுப்பதுதான்!

காரணம்!
நாம் பிறக்கும்போதே நிர்வாணமாக, ஈரமாக, பசியோடு பிறக்கிறோம். இந்த மூன்றும்தான் மனிதர்கள் தவறு செய்யக் காரணங்களாக அமைந்துவிட்டன!

பாடம்!
தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள முடியும். எனவே, அதிகம் தவறுகள் செய்வீர்!

பட்டியல்
மறப்போம்; மன்னிப்போம்! ஆனால், அவற்றுக்கெல்லாம் ஒரு பட்டியல் வைத்துக்கொள்வோம்!

அழுகிற பிள்ளை...
அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்; சமயத்தில் அடியும் வாங்கும்!

பணம்
பணம்தான் எல்லாம் என்பதில்லை; ஆனால், பணம் இருந்தால்தான் எல்லாம்!

அவர்கள்
எப்படி வேலை செய்யவேண்டும் என்று தெரிந்தவர்கள் அதிக முன்னேற்றம் அடைகிறார்கள்; யாருக்கு வேலை செய்யவேண்டும் என்று தெரிந்தவர்கள் அதிகச் சம்பளம் பெறுகிறார்கள்!

புத்திசாலித்தனம்
உன் வாகனத்தின் பிரேக்கை சரிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால், ஹாரனையாவது சத்தமாக ஒலிக்கும்படி வைத்துக்கொள்!

அடையாளம்
சுத்தமான மேஜை ஒரு நல்ல ஊழியரின் அடையாளம்தான் & இழுப்பறைகள் அடைசலாக இல்லாதிருந்தால்!

முடியாது!
எதிர்மறை வாக்கியங்களையே பயன்படுத்திக்கொண்டு இருந்தால், முன்னேற முடியாது!

ஒரு வித்தியாசம்
நாய்க்கு நாம் எஜமான்; பூனைக்கு நாம் பணியாளர்!

ஆனாலும்...
கடின உழைப்பு எவரையும் கொல்லாது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், அதற்கு வாய்ப்பு கொடுப்பானேன் என்று சிலர் யோசிக்கிறார்கள்!

சுவர்கள்
அண்டை வீட்டுக்காரரோடு சிநேகமாக இருங்கள்; அதற்காக காம்பௌண்ட் சுவரை உடைத்துவிடாதீர்கள்!

அட, தெரியுமுங்க!
எனக்குக் கராத்தே தெரியும்; இது மாதிரி இன்னும் கூட ஏழெட்டு ஜப்பானிய வார்த்தைகள் தெரியும்!

டிஸ்கி  : இதை ஒரே  வலைப்பதிவில் போட்டுவைத்திருக்கும் திரு.ரவிப்பிரகாஷ்..விகடன் பொறுப்பாசிரியர் அவர்களிடமிருந்து சுட்டது !   :-)

Comments

  1. வித்தியாசம்

    அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான். அறிவாளி தன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறான்; புத்திசாலி பிறரின் தவறுகளிலிருந்து பாடம்
    கற்கிறான்!

    அப்ப புத்திசாலி ஆற்றின் கரையிலேயே நின்னுகிட்டு அடுத்தப் பக்கம் தட்டு தடுமாறி போய்ச் சேர்ந்தவர்களின் அனுபவத்தோட தன்னோட அனுபவமும் நிகர்னு சொல்லிக் கொள்ளலாமா... அப்படி ஒரு பயணத்தை மேற் கொள்ளலாமேலேயே, அதுதான் புத்திசாலித்தனமா, சுரேகா!

    An utter contradiction is right there...

    அந்த ஒரு கலை!

    உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் கலையை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும்... நீங்கள் தினம் தினம் புதிது புதிதாக நிறையக் கற்க முடியும்.

    இப்படி நிறைய இருக்கு... தத்துவம் பேசும் நோக்கில் உதிர்த்துக் கொண்டே போகலாம், ஏனெனில் அவைகள் யோசிக்கும் மூளையின் செல்லக் குழந்தைகள் மாறி மாறி தேற்றமுறும்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..

    திரு.ரவிபிரகாஷ் அவர்களின் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி. :)

    ReplyDelete
  3. Thekkikattan|தெகா said...

    //அப்ப புத்திசாலி ஆற்றின் கரையிலேயே நின்னுகிட்டு அடுத்தப் பக்கம் தட்டு தடுமாறி போய்ச் சேர்ந்தவர்களின் அனுபவத்தோட தன்னோட அனுபவமும் நிகர்னு சொல்லிக் கொள்ளலாமா... அப்படி ஒரு பயணத்தை மேற் கொள்ளலாமேலேயே, அதுதான் புத்திசாலித்தனமா, சுரேகா!//

    அண்ணா..
    இது நேரடி தத்துவம் இல்ல!
    அதில் ஒரு நக்கல் இழையோடும் பாருங்க!

    நான் என்னன்னு புரிஞ்சுக்கிட்டேன்னா...

    அடுத்தவன் தவறுலேருந்து கத்துக்கிட்டேன்னு சொல்றவனுக்கு புத்திசாலின்னு நெனப்பு..!

    அதுதான்.

    ReplyDelete
  4. SanJai said...

    //நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..

    திரு.ரவிபிரகாஷ் அவர்களின் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி. :)//

    நன்றி சஞ்சய்...!

    நேரமிருக்கும்போதெல்லாம் வாங்க..நிறைய விளையாடலாம்!

    ReplyDelete
  5. padithaen niraiya therinthukondaen

    nam vaazkkaiyil ellamae vanthu povaikalthaan..
    irunthum..
    ennai kavarnthathu..
    சொல்லாதே!
    உண்மை என்பது மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு விஷயம். அதனால், தகுதியற்றவர்களிடம் அதைக் கொடுக்கலாகாது!

    fact...vibin

    ReplyDelete
  6. itha eppadi nan miss pannen.

    superungo. suttalum nalaltha suttu pottirukeenga. thanks

    ReplyDelete
  7. நன்றி விபின் சார்!

    ReplyDelete
  8. //புதுகைத் தென்றல் said...

    itha eppadi nan miss pannen.//

    வாங்க..
    நல்ல வேளை...இப்பவாவது வந்தீங்களே ! :)

    ReplyDelete
  9. வாவ் அருமையா இருக்கு பதிவு.

    ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  10. மங்களூர் சிவா said...

    //வாவ் அருமையா இருக்கு பதிவு.

    ரசித்து படித்தேன்.//

    நன்றி சிவா..!

    இப்படி ஏதாவது உருப்படியா அமைஞ்சுடும். :) (அதுவும் சுட்டது)

    ReplyDelete
  11. It is very good. thought provoking as usual. you are time again proving that you are different and brilliant.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!