Wednesday, November 28, 2007

வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து
கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி
கணிசமாய் வெங்காயம் சேர்த்து
கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...!


கவனமாய் உண்பீரே.!
எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..!

சமைக்கிறோமோ இல்லையோ

நக்கல் நல்லா வருதுங்கோ...

Sunday, November 25, 2007

தலை வெட்றதை பாக்குறீங்களா..?

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நான் ஏதாவது காய் வாங்கி வரலாம்னு யான்பு அல் பஹாருக்குப் போனேன். காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க!

நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?"

"தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்).

கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்...

ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க.. மொத ஆள் கொஞ்சம் வயசானவர்...40-45ருக்கும். ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர்.

ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்.. (என் ஒடைஞ்ச அரபை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்) "மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?"

கூட்டம் உடனே, "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது!

அடுத்து - குள்ளமான சௌதி மறுபடியும் படிச்சார்.. "ரெண்டாவது ஆள் ஒரு சூடானி.. வேலை பாத்த வீட்டுப் பெண்ணைக் கற்பழித்து, கொன்னு ப்ரிட்ஜில் வச்சிட்டான். தப்பிக்கும்போது மாட்டிக்கிட்டான். திங்கட்கிழமை நடந்த சம்பவத்துக்கு வியாழக்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப் போறோம். ஏதாவது ஆட்சேபணை உண்டா?"

மறுபடியும் கூட்டத்தினர், "இல்லை! இல்லை!"னு சத்தம் போட்டாங்க!

நான் குசுகுசுன்னு பக்கத்து ஆளிடம் கேட்டேன்... "ஏன் ஏதாவது ஆட்சேபணை உண்டா?" ன்னு கேக்குறாங்க.. அவர் சொன்னாரு.. "அந்தக் குற்றவாளி நிரபராதின்னு நிரூபிக்க தகுந்த ஆதாரம் இருந்தா, அத வச்சு இப்போ தண்டனையை நிறுத்திவிட்டுப் போய்டுவாங்க.. அப்புறம் கோர்ட்டில் சொல்லி விடுவிச்சுடலாம்.. நம்ம சொன்னதில் தப்பு இருந்தாலோ, சும்மா சொல்லிட்டாலோ நமக்கும் சேத்து ஆப்புதான்..!" (கோர்ட்டை அவமதிச்சதுக்கு...)

இப்போ ஸீனுக்குள்ள ரெண்டு பெரிய சௌதிகள் வந்தாங்க... அவங்களோட ஒரு டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் ஒரு வேனில் வந்திருந்தாங்க... ரெண்டு பெரிய சௌதிகளும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலிருந்து வாள்களை தேர்ந்தெடுத்தாங்க..!

மண்டி போட்டிருக்கும் ஆட்களைப் பார்த்து "யா அல்லா"ன்னு சொல்லச் சொன்னாங்க.. அவங்களும் சொன்னாங்க! பாகிஸ்தானி அழுக ஆரம்பிச்சுட்டார்... ரொம்ப பாவமா இருந்தது.

சூடானி கலங்கவே இல்லை...(அட..போங்கடா! நீங்களும் ஒங்க ஒலகமும்னு நெனச்சிருப்பான்.)

ஒரு கணம்தான்... (ரொம்ப வேகமா வாளை இறக்கலை... சாதாரண வேகம்தான்..)

மொதல்ல.. பாகிஸ்தானி தலையை வெட்டினாங்க.. அது முழுசா வெட்டுப்படலை. காயை அறுக்கிற மாதிரி அறுத்துத் தள்ளினாங்க..! அந்த இடமே ரத்தமா போச்சு..!

பிறகு சூடானி தலையை வெட்டினாங்க.. துண்டா போய் விழுந்தது. ரத்தம் பீய்ச்சி அடிச்சது..!

ஒடம்பு தனியா துடிக்குது...! அதைப் பார்த்ததாலே கை, காலெல்லாம் வெட வெடன்னு ஆடிப்போயிட்டேன்.

அந்த டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் விறு விறுன்னு ஒடம்புகளையும், தலைகளையும் சேத்து வச்சுத் தச்சு ஒரு பாலிதீன் பையில் போட்டு வேனில் ஏத்திட்டாங்க..!

எல்லோரும் கலைஞ்சு போய்ட்டோம். நானும் பல்வேறு எண்ணங்களுடன் காய்கறி வாங்கிக்கிட்டு திரும்ப வந்து அந்த எடத்தைப் பார்த்தா... ரெண்டு சின்னப் பசங்க ஓடி வெளையாடிக்கிட்டு இருக்காங்க..

அன்னிக்கு ராத்திரி (அந்த வாரம் முழுதும்) தூங்கவே இல்லை.

ஒரு நொடி முன்னால் வரை உயிருடன் இருந்த மனிதர்கள் நம் அனைவர் முன்னிலையிலும் சட்டப்பூர்வமாக இறந்து போனார்கள்...

Friday, November 23, 2007

'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல!
சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது !

(இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி )

மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு..

இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..!

பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..?
ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க!

குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (நமக்கு கெட்டது) நடக்கணும்னா எதுவேணும்னாலும் செய்யுற பார்ட்டி..அவரும் எவ்வளவு நாள்தான் பதவி வெறியே இல்லாத மாதிரி நடிக்கிறது..?

கூட்டு சேந்தவன் கெஞ்சுன கெஞ்சுல, சரி மாப்ளே..நீயே முதலமைச்சரா இரு! ஆனா நாந்தான் துணை முதல்வர்ன்னு ஒரு வழியா பேசி முடிவுக்கு வந்தாய்ங்க..!

வந்தாய்ங்களா..!அந்த ஆளும்..அதான் நம்ப எடியூரப்பா! குடும்பம் குட்டியோட போட்டால்லாம் புடிச்சு அந்த பாழாப்போன நாற்காலில
ஒக்காந்தாரு.அப்பறம்தான் தெரிஞ்சுது.அதுக்கும் ஆப்பு இருக்குன்னு.!

சரி வந்தது வந்துட்டோம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு (பாருங்க..அதுலயே கெடுப்பு இருக்கு) கழுதையை முடிப்போம்னு அந்த ஆள் 'நம்பி ' சட்டசபைக்கு வந்தாரு..வந்தப்புறம்தான் தெரிஞ்சுது..சனியன் சடை பின்னி பூ வைக்காம
போகாதுன்னு! அசுர கவுடா கவுத்துப்புட்டாருல்ல..அழுதுக்கிட்டே வெளீல போனான் மனுஷன்.

கடைசியா குமாரசாமி இப்ப சொல்றாரு."கர்நாடகால கட்சியெல்லாம் கெட்டுப்போச்சு! நான் புதுசா கட்சி ஆரம்பிச்சுத்தான் கர்நாடகாவை சாப்பிடணும்"னு !

அடப்பாவிகளா..இவ்வளவு கூத்தடிக்கிறீங்களே..எங்க காசை தின்னுப்புட்டு, எங்க ஓட்டை வாங்கிக்கிட்டு, ஒரு மாநிலத்தையே தொங்கல்ல விடுறீங்களே.நீங்கள்லாம் மனுசந்தானான்னு ஒரு பொது ஜனம் கூட கேக்கலயா? தர்ணா பண்ணலையா? பஸ்ஸை கொளுத்தலையா? இல்ல.. அவனுங்களையே கொளுத்தலையான்னு கேட்டா..

அவுங்க சொல்றாங்க..நாங்க கேக்கலாம்னு பாத்தோம்..எம் எல் ஏ ல ஒருத்தன் சொல்றான்.நம்ம மக்கள் எவ்வளவு இளிச்சவாயனா ஆக்கினாலும் தாங்கிக்குவாங்க..ஏன்னா அவுங்க ரொம்ப "நல்லவுங்க"....ஊஊஊஊஊ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...