Posts

Showing posts with the label ஓமப்பொடி

ஓமப்பொடி # 9

Image
            உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால், நமது இரத்த அழுத்தம், அளக்கும் கருவியின் பாதரசம் வெடித்து வெளிவரும் அளவுக்கு எகிற வைக்கிறது.      பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களின் சிரமத்தை வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு, தனக்கான செலவினங்களில் ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ளாமல், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அலுவலர்களுக்கான சலுகைகளை மட்டும் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறது. இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மத்திய நிதி அமைச்சகத்தில், மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.     பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கும்போதும், எண்ணெய் நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலைவாசியை வைத்து, விலையை மாற்றும்படி அரசை நெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அரசு அவர்களது பெட்ரோலிய வரி வசூலில் இருந்து ஒரு பகுதியை மானியமாக அளித்து, சமாளித்திருக்கிறார்கள். இப்போது, தனது வரி வசூலில் ஒரு பைசா கூ...

விஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..

Image
          விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான், ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.     உண்மையிலேயே, தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.! அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இ...

ஓமப்பொடி # 7

Image
கேட்டால் கிடைக்கும் என்று பல நண்பர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் P.B. பாலாஜியின் வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்த குப்பையை எடுக்க, மேயருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றார். செய்துகொடுத்தேன். அவரே அனுப்பி, உடனே காரியமும் நடந்திருக்கிறது. மேலும் அதிகாரிகளும் வீட்டுக்கே வந்து பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதில் நண்பர் கேபிள் சங்கரும் அவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். கேட்டால் கிடைக்கும் என்று பிரபலங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.   ----------------------------------------------------------------------------------------------------------------------------- நிகழ்வுகள் நம்மை செதுக்குகின்றன என நம்புகிறேன். சமீபத்திய வெவ்வேறு நிகழ்வுகள், என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. துக்கப்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்படுத்தியிருக்கிறது. அவமானப்பட வைத்திருக்கிறது. ஆவேசப்படவைத்திருக்கிறது. ஆனால், அவை மொத்தமும் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை! (மொத்தத்தில் நிறைய ‘படுத்தியிருக்கிறது! J ) ஆனால், மகிழ்ச்சிப்...

ஓமப்பொடி # 6

Image
இடையில் எதுவுமே பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது தெரியவில்லை. சென்ற மாதம்  ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன. நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப் பேசியிருக்கிறார்கள். இவர்களும...

ஓமப்பொடி # 5

Image
     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்.. கையெழுத்துப் பயிற்சி, கலர் அடிக்கும் பயிற்சி, காசு எண்ணும் பயிற்சி, பூஜை செய்யப் பயிற்சி, புத்தகம் படிக்கும் பயிற்சி, பாட்டுப்பாடும் பயிற்சி, படம் வரையப் பயிற்சி, பறவை பார்க்கப் பயிற்சி போட்டோ எடுக்கப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி, பொருள் அடுக்கப் பயிற்சி இசை கேட்கப் பயிற்சி இசை வாசிக்கப் பயிற்சி சதுரங்கப் பயிற்சி சக்கரக்கால் பயிற்சி சோறு உண்ணப் பயிற்சி யோகா பயிற்சி அபாக்கஸ் பயிற்சி என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள். இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் எ...

ஓமப்பொடி # 4

Image
                         மின்வெட்டின் தாக்கம் காரணமாக,  ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.           எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :         சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.         அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.         முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.         போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !         எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெ...