Posts

Showing posts from January, 2011

சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!

Image
பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை!  எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்! அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை! அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது. வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன். ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்க

மீண்டும் ஒரு நற்செய்தி!

Image
இனிய நண்பர் கேபிள் சங்கரின் சிறுகதைத்தொகுப்பான ‘ மீண்டும் ஒரு காதல் கதை’ நாளை (4.1.11) மாலை டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படுகிறது. அனைத்து நண்பர்களும் வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர் பேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் :  இயக்குனர் திரு. சீனு ராமசாமி ஒளிப்பதிவாளர்: திரு.செழியன் நடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு பதிவர்கள் அப்துல்லா லக்கிலுக் (யுவகிருஷ்ணா) விதூஷ் வித்யா ஆதிமூலகிருஷ்ணன். அகநாழிகை வாசுதேவன் தேதி : 4/01/11 நேரம் : மாலை 6.00 மணி இடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்                 நெ.6. முனுசாமி சாலை                கே.கே.நகர். சென்னை