Posts

Showing posts with the label நன்றி

வெறும் கணக்கு

Image
விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது. பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம் ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும். இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவ...

ஓமப்பொடி # 3

Image
சென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30 க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் அதன் முன்னோட்டம்….இதோ!  இந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS)  நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!                            ***   சவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக...

யுடான்ஸ் நன்றி

Image
வாய்ப்பு நல்கி வாசிக்க உள்ளங்களும் நல்கி காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை கல்லால் அடிக்காமல் கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து, இரண்டு மாதப் பதிவுகளை ஏழு நாளில் போட வைத்து, எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு எத்தனையோ பதிவருக்கு எளியோனை அறிமுகப்படுத்தி, என்னைக்கொஞ்சம் ஆடவைத்த யுடான்ஸுக்கு என் உடான்ஸ் இல்லாத நன்றி!

நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

Image
 புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார். அனைவரும் கையில் புத்தகங்களுடன்...  புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.  வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்) கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்) புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

இன்றே சொல்லவேண்டிய நன்றி!

Image
திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத்திரும்பமுடியுமா? சொல்லும் பொருட்களை வாங்கிவர முடியுமா? ஓவராகப் பேசினால் சமாளிக்கமுடியுமா? இவற்றை மீறி, நம்மால் ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்கள் வீட்டிலிருந்து தாயும், தந்தையும் ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து என் பெற்றோரைச்சந்தித்தார்கள். நாங்கள் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச்சென்றோம். போனால் ' சரி ' என்றுதான் சொல்லுவேன் என்ற நிபந்தனையுடன் போனேன். ஒரு பெண்ணைப் பார்த்து உன்னை எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்று கூறுவதில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை. நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருந்ததால்...! திருமணமும் நடந்தது. அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் என் வாழ்வில் ஏற்படுத்திவிடாமல் சகஜமான வாழ்க்கையை அப்படியே வாழவைத்தாள். என் பெற்றோரிடம் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும...

'ஆனந்தி'யில் எதிரி!

Image
ஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தி யில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. படத்தை க்ளிக்கி பெரிதாகப்பார்க்கலாம். நான் எழுதி அனுப்பிய கட்டுரை: எதிரி மேலாண்மை நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்! ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க,...

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்.... முழுமையாக ஏழு நாட்கள். நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும். கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும். உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும். இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு! நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன். சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன். இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன். ( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-) எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்.... உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன். (ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) ) ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் ! கலியாப்பட்டி ! போட்டுக்கொடுத்த பொடிப்பையன்! எதிர்(ரி)...

'ஆனந்த' மகிழ்ச்சி!

Image
இன்று ஒரு ஆனந்தம்..! என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது. இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான். அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம். நன்றி நண்பர்களே !

நானா...? அவ்வளவு கூலா?

Image
நம்ம சக பதிவர்... அன்புச்சகோதரி.. பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய தென்றல், தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல் . ... புதுகைத்தென்றல் திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ, இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க! மிக்க நன்றிங்க! இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது! இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் ! சொன்னதுக்காக கொஞ்சம் கூல்... வெயிலுக்கு இதமாக..! தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் ! காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥ அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்! விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்... சஞ்சய் ஜி