Posts

Showing posts with the label திறமை இடைவெளி

திறமை இடைவெளி

Image
இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது. நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில்  Badri Seshadri  அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. ஆம்.. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை... இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான். படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap.. வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap. இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap. கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடி...