Posts

Showing posts from April, 2013

தாத்தா சாபம்

Image
உன்னை நினைக்க  நேரமில்லாமல்தான் திரிந்துகொண்டிருந்தேன். எத்தனையோ சொல்லியிருக்கிறாய்! என்னன்னவோ செய்திருக்கிறாய்! நான் பெரிதாக உனக்கொன்றும் கெடுதல் செய்ததில்லை. ஆனால் உன் சாபம் பலித்துவிட்டது. ”எங்க காலத்துல மாதிரி இருட்டுல இருந்தா தெரியும்.. உங்க லச்சணம்” அன்று நீ சொன்னதை நினைத்து எக்காளித்தேன். உன் சாபம் பலிக்கிறது தாத்தா! இப்பதான் கரண்டுல கை வச்சிருக்கானுங்க! ... மாட்டுவண்டிப்பயணமும் கண்ணுக்குத் தெரியுது.! ”இப்படியே போனா... சோத்துக்கு.....” என்று ஒரு சாபம் கொடுத்தாயே? அதை நினைத்தால்.. இப்பவே ’பக்’கென்கிறது..!