Posts

Showing posts with the label மொக்கை

இதுக்கெல்லாம் செக் லிஸ்டா? சரிதான்!!

Image
ஊரு கெட்டுப்போச்சுன்னு சொன்னா யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க! இதோ பாருங்க! ஒரு கம்பேனி, விவாகரத்து பண்ணனும்னா என்னன்ன தேவைன்னு செக் லிஸ்ட் குடுத்திருக்காங்க! Divorce Checklist is powered by Checklist.com இந்தத் தளத்தில் மிகவும் உபயோகமான செக்லிஸ்டுகள் உள்ளன. வீட்டுக்கு ரொம்ப உபயோகமான ரெண்டு லிஸ்ட் எடுத்தேன். + Automotive Checklists + Business Checklists + Computers & IT Checklists + Employment Checklists + Event Checklists + Family Checklists + Finance Checklists + Health Checklists + Home Checklists + Personal Checklists + Recreation Checklists + Safety Checklists + Sports Checklists + Travel Checklists இவ்வளவு தலைப்புகளில், நூற்றுக்கணக்கான பட்டியல்கள் உள்ளன. நாமும் புதுசா சேத்துக்கலாம். மிகச்சிறப்பாக ஒரு செக் லிஸ்ட் தொழிற்சாலையே நடத்துறாங்க! உண்மையிலேயே பயனுள்ள பக்கம்! இதை தமிழில் செய்யவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. உள்ள வேலையில் இது வேறயா??  படிச்சுட்டு பயனுள்ளதை மட்டும் எடுத்துக்குங்க!! :)

’கேபிளால்’ எழுதலாம்!!

Image
என்ன எழுதலாம்? காமன் வெல்த் டகால்ட்டிகளைபபத்தி எழுதுவோம்னா..எல்லா நியூஸ் சேனலும் தின, வார, மாத, சாயங்கால, அதிகாலை, மதிய, ராத்திரி இதழ்களும்,டப,சக,டுப்,கரபுர எனும் அனைத்து ரேடியோக்களும் எல்லா விளையாட்டையும் வினையாக்கும் வெப்தளங்களும் போட்டுக் கிழித்துவிட்டன. அப்புறம் என்னத்த எழுத? சுரேஷ் கல்மாடி....! யோவ்...உனக்கு மேல் மாடில கல்தான்! அயோத்தி...தீர்ப்பு ... அண்ணன் தம்பிக்கு ஆளுக்குப்பாதின்னு பிரிச்சதை எழுதலாம்னா முன்னாடி 10 நாள், பின்னாடி 3 நாளா எல்லாரும் கருத்தா சொல்லிச்சொல்லி இதாஞ்சரி! அதாஞ்சரி! என்று நல்ல நட்புகளையும் சேர்த்து இடித்து 18வயசுப்பொண்ணை , கெடுத்தவன் கையில பிடிச்சுக்கொடுத்ததை நியாயப்படுத்தும் நடுநிலையாவது,வெங்காயமாவதுன்னு காங்கிரஸைப் பார்த்து கேக்கலாம்னா... அதையும் எழுதிப்புட்டாங்க! அலகாபாத்!! ஓட்டுவங்கி அகலா பாத்து! எந்திரன்.. . விமர்சனமோ ,வியாக்கியானமோ, வியந்தோ எழுதினா..வியாபரத்திலேயே குறியா இருக்கும் சூரியக் குடும்பம் சுடச்சுட அல்வா சாப்பிட்ட மாதிரி, எந்திரன் படத்தைப்பற்றி இணையத்தளங்களில் எண்பதாஆஆஆஆயிரம் இடுகைகள் இடப்பட்ட இமாஆஆலய சாதனை என்று அதையும்...

சிறு மூளை

Image
உடனே ஒட்டும் பசை விளம்பரம்! பார்த்துக்கொண்டிருந்த மகன் கேட்டான். அப்பா! அது எல்லாத்தையும்  ஒட்டுமா? ஆமாம் என்றேன். போனை? ஆமாம்! நோட்டை? ஆமாம்! கார் பொம்மையை? ஆமாம்! அப்புறம் ஏன் அது வச்சிருக்கும் குப்பியில் ஒட்டிக்கலை? 24மணி நேர மருத்துவமனை! வாசலில் பலகை பார்த்து கேட்க ஆரம்பித்தான். எல்லா நேரமும் திறந்திருக்குமா? ஆமாம்! நடுராத்திரி? ஆமாம்! தீபாவளிக்கு? ஆமாம்! ஞாயிற்றுக்கிழமை? ஆமாம்! அப்புறம் ஏன் வாசல்ல கதவு வச்சிருக்காங்க? இவர்களுக்கு பதில் சொல்ல மூளைக்கு என்ன செய்ய?

மூன்றுவரித் திரைப்படங்கள்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..! தம்பி கிழித்தான் கோட்டை! அண்ணி தாண்டினாள் கோட்டை! அண்ணன் விட்டான் கோட்டை! இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்! படித்து கிராமம் சென்றான்! ஊருக்காக நின்றான்! பங்காளியைக் கொன்றான்! ---- பொய்யாய் வேலை வைத்தியம்! பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்! மருத்துவமனைக்கே வைத்தியம்! ----- பத்துபேரும் பினாமி! கிருமிதான் எனிமி! எனிமி கொல்ல சுனாமி! ----- சேர்த்துவைத்த நட்புக்கு வலி! நட்பினால் காதல் பலி! மீண்டும் பிரிந்தால் பொலி! ------ ஆசையாய் இலவசப் படிப்பு ! ஆதிகேசவனால் இடிப்பு ! கள்ளப்பணத்தால் முடிப்பு! பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்! படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!

மீண்டும் நரி!

Image
காலையிலிருந்து கிடைக்காத உணவுக்காக காடெங்கும் தேடிவிட்டு நிழலுக்கு நின்றிருந்த மரத்துக்கு காகமொன்று வந்தது. வாயினில் வடை! பாடச்சொல்லி நான் கேட்க, வடை எனக்கு அருகில்விழ, தயவு செய்து கொடுத்துவிடு! கேட்ட காகத்திடம் வந்து எடுத்துக்கொள் என்றேன். கீழே வந்த காகத்தை வினாடி பிசகாமல் அடித்து உண்டேன். எவன் தின்பான் வடையை? அதுவும் காகத்தின் எச்சிலை! டிஸ்கி: கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை, கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..

ஒரே சமயத்தில் 22 !

இந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு ....! நற...நற...நன்றியுடன்! :) 1 .Grab the book nearest to you, turn on page 18 and find line 4? எடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது...! (எப்புடி?) புத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு "நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்..." 2. Stretch your left arm out as far as you can & touch air? இல்லை...அதற்குமுன்னரே அது என்னைத்தொட்டுவிட்டது 3.What is the last thing you watched on TV? சுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு 4.Without looking, guess what time it is? இரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள் 5. Now look at the clock, what is the actual time? இரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள் 6. With the exception of the computer, what can you hear? தொலைக்காட்சி 7. When did you last step outside? What were you doing? நட்சத்திரங்கள் மொட்டைமாடியில்...! நண்பனிடம் உலாபேசிக்கொண்டே! 8.Before you started this Q&As, what did you look at? அப்துல்லாவின் பதிவு 9. What are you ...

இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

Image
ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல்  விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு! என்னங்க நடக்குது!? என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும்  போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு  ரொம்ப நன்றிங்கோ ! அந்த மொக்கையைப்பாக்க... இங்க போங்க! இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)

இப்படியும் நடக்கலாம் ...!

Image
அது ஒரு தொடர்வண்டி நிலையம்! அவன் எங்கோ போகவேண்டும் அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப! திருமணம் ஆன புதிது! விட்டுச்செல்ல மனமில்லை! விலகி இருக்கவும் திறனில்லை! கண்கள் கலங்கவும், கைகள் நடுங்கவும், ஒருவரை ஒருவர்  உயிராய் உருகி ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள். அந்தச்சிறு அணைப்பிலேயே அழுத்தம் கொடுத்து சொல்லுகிறான். கவலைப்படாதே! நிறைய நாட்களில்லை! சீக்கிரம் வந்துவிடுவேன்.! நீங்கள் செல்வதே எனக்கு நரகம்தான்! அப்புறம் என்ன  கொஞ்சம் ,நிறைய ? கண்ணீர் உகுத்து கரைகிறாள் அவள்! வண்டி புறப்படும் நேரம் வர மனமின்றி அவனும் ஏறி விட புறப்பட்ட வண்டியையே நீர் படரப் பார்க்கிறாள்! அவ்விடத்திலேயே நின்று ஆசுவாசப்படுத்த, வண்டியும் சென்றுவிட.. அதிசயமாய் எதிரில் பெட்டியுடன் அவன்! ஓடிப்போய் முத்துகிறாள்! என்னவனே! இவ்வளவு காதலா? என்னைவிட மனமிலையா? நான் என்ன தவம் செய்தேன்? இப்படி நீ இருப்பதால்தான் இதயம் முழுதும் நிறைகின்றாய் ! இறுக்கமான முகத்துடன் அவன் சொன்னான்..! அதெல்லாம் சரி! வண்டியின் டிக்கெட்டை உன் பைக்குள் வைத்திருக்கிறாய் ! இனியெப்படி போவது?

சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

http://podian.b logspot.com/200 8/09/blog-post_ 5240.html சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு! அட....அப்படியா? பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது  பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன். அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்! சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்: அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு! இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை!  இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

குசும்பன் கல்யாணம் சூப்பரு!

Image
குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க! அதிகமான  பதிவர்கள் வருகையோடு நண்பர் குசும்பனின் கல்யாணம் சூப்பரா நடந்துச்சு! தாலி கட்றப்ப பதிவர்கள் யாரும் பக்கத்துல இல்ல ! (தூரமா நின்னு வாழ்த்தினாங்க) நம்ம குசும்பன் கஷ்டப்பபடுறதை யாராலயும் தாங்கிக்கமுடியாததாலத்தான்னு நினைக்கிறேன்.  :) பொடியன், மங்களூரார், நாமக்கல் சிங்கம், இம்சை அண்ணாச்சி, அபி , அபி அம்மா, நட்டு... அப்புறம் அவுங்ககூட யாரோ கெச்சலா...ஆங்க்.. அபி அப்பா! , நாகை புலி, ஜ்ஜேக்கே, ஜிஜிஜி, காய3, கவி ஜூனியர்  நானு எல்லாரும் போய் கல்யாண மண்டபத்தில் சமைச்ச  சாப்பாடு வீணாகாம பாத்துக்கிட்டோம்.  எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு  கூத்தடிச்சுட்டு ஊரைப்பாக்க எஸ்கேப்...! வாழ்க குசும்பன்!

எல்லாரும் பதில் சொன்னபிறகு...ஒப்புக்கு..!

Image
மூளைக்கு வேலைன்னு நானே சுட்டுப்போட்டா.. நமக்கும் மேல உடனே சுடச்சுட பதிலை அடிச்சுத்தட்டிவுட்டுட்டாங்க நம்ம மக்கள்! அதிலும் ஒரு கூத்து என்ன ஆச்சுன்னா.. நான் பாட்டுக்கும் எல்லா பதிலையும் உடனுக்குடன் பிரசுரிச்சு சுவாரஸ்யத்துக்கே வழியில்லாம செஞ்சுட்டேன். (முன்ன பின்ன போட்டி நடத்தியிருக்கணும்...!) படக்குன்னு பதில் சொன்ன பதிவர் மாதங்கிக்கு வாழ்த்துக்கள்! ஒப்புக்கு ...பதில் தாள்!

மூளை வேலைக்கு வேளை !

Image
இந்த கேள்வித்தாளுக்கு பதில் எழுதி பின்னுட்டத்தில் போடுங்களேன். உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும்............... எவ்வளவோ செய்றீங்க ! இதைச்செய்ய மாட்டீங்களா ? பதில் அடுத்த பதிவில்...!

விடைபெறுகிறேன்..

அற்புதமான சூழலில் எழுதத்தூண்டி சினேகத்துடன் வாசித்து பின்னூட்டங்களிட்டு மகிழ்வூட்டிய உங்களிடமிருந்து...... இல்லை...! (அதுக்குள்ள விட்டுருவோமா?) இப்ப ஒரு அரசு பண்பலையில் வானொலி ஓட்டி (RJ க்கு தமிழில் என்னப்பா?) யாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால், கொஞ்சம் நல்லபிள்ளையா நடிக்கவேண்டிய கட்டாயத்தில் பதிவெழுத முடியலை... இப்போதெல்லாம் நேயர்களிடம்.. நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பேசி...கேள்விகள் கேட்டு விடைபெறுகிறேன்.. அதைத்தான் சொல்லவந்தேன்.. அதுக்குள்ள...!

தொடர் விளையாட்டா....? சரி...சரி..

சமீப காலமா...பதிவுலகத்துல பாத்துக்கிட்டிருந்தேன்..ஒருத்தர் பதிவு போட்டுட்டு. அது சம்பந்தமா 4 பேரை தொடரச்சொல்றது ! அட..இது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இருக்கேன்னு பாத்தேன். ஆனா...வேடிக்கை பாத்தவனை கூத்தாடச்சொன்னமாதிரி... புதுகைத்தென்றல்..என்னைய இதுல இழுத்துவுட்டுப்புட்டாங்க! சாதாரணமாவாவது ஏதாவது ரைம்ஸ் ஞாபகம் இருக்கும்! இப்ப சுத்தமா இல்லை! அப்துல் ரகுமான் ஒரு கவிதை எழுதியிருப்பாரு. நான் மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்லை! ஒரு நாள் ஒதுங்க நேரிட்டபோது கூட மழையைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன்...! அதுமாதிரி...எனக்கு இந்த pre-KG அனுபவமெல்லாம் கிடையாது. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ..பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த பாட்டுக்கள்னா....! 1.தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமாமே! 2. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே! (ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்) 3. அதோ பார் ரோடு ரோட்டு மேல காரு காருக்குள்ள யாரு? நம்ம மாமா நேரு நேரு என்ன சொன்னாரு? எழுதப்படிக்க சொன்னாரு! ( இதையும் எலியப்புடிக்க சொன்னாருன்னு மாத்திப்பாடி வாங்குப்பட்டிருக...

இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!

கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை.. பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும் பதிவுகளின் தலைப்புகள் இப்போது.. 1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல் 2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு 3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு 4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான். 5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி 6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..) எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா? :-)

ஊடலே இதற்கும் காரணி...!

இந்த கவிதை (மாதிரி).... பதிவா போட்டபிறகுதான்.. என் நண்பன் ஒருத்தன் அழைப்பு நிலையத்தில் வேலை பார்ப்பவன் சந்திச்சு பேசினான். அவனிடம் பேச்சுவாக்கில் இதுபத்தி சொல்ல. அதையேன் கேக்குற? அப்படி போனில் சந்தேகம் கேட்டு, எனக்கு மூட் சரியில்லாததால சண்டையாகி , அப்புறம் மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவதான் என் மனைவின்னான். அப்படிப்போடு..! ன்னேன். அதுமட்டும் இல்லடா..! அவளும் ஒரு அழைப்பு மையத்தில் வேலைக்கு சேர..எனக்கு இரவு வேலை..அவளுக்கு பகலில்.! ஆக வீட்டு வேலையெல்லாம் நான் செய்யவேண்டியிருந்தது..(இதுமட்டும் காரணமில்ல...! ஆனா வெளிப்படையா சொல்லுவாங்களா?) அன்னிக்கு ஒரு நாள் அவ கிளம்பிக்கிட்டிருக்கும்போது வண்டி சாவியப்பாத்தீங்களா ன்னு என்னப்பாத்து கேக்க , ஏன் நான் உனக்கு வேலையாளான்னு நான் அலுப்பாக பேச.. அது மெதுவா பூதாகரமாகி சண்டையா வெடிக்க, உனக்காகத்தானே..உன் சுமை குறைக்கத்தானே வேலைக்கு போய் கண்டவன்கிட்ட திட்டுவாங்குறேன். இனிமே வீட்ட பாத்துக்கறேன். வேலைக்கு போகலன்னு திடீர்ன்னு எகிறி சத்தியாக்கிரகம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா.. ஐய்யய்யோ.. அப்புறம்..? அன்னிக்கு அவளை சமாதானப...

வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி கணிசமாய் வெங்காயம் சேர்த்து கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...! கவனமாய் உண்பீரே.! எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..! சமைக்கிறோமோ இல்லையோ நக்கல் நல்லா வருதுங்கோ...