சுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி!
கடந்த சில நாட்களாக, மருந்துகள் கண்காணிப்புத்துறையும், சுகாதாரத்துறையும் மண்டை பிய்த்துக்கொண்டும், பிய்த்துக்கொள்ள வைத்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதற்குப்பின்னணியில் இவர்களது லஞ்ச ஆட்டம் இருப்பது வசதியாக மறைந்துவிடுகிறது. அந்த ஆற்றாமையுடன் திரியும்போது இன்று ஒரு விஷயம் வினையாற்றவைத்திருக்கிறது. சாராள் இல்லம் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். அதன் நிர்வாகி டைசன் மிகவும் சிரமத்துக்கிடையில் ஒரு வாடகை வீட்டில் அந்த இல்லத்தை நடத்திவருகிறார். இதற்கிடையில் சமூகநலத்துறையின் அங்கீகாரத்துக்காக , மற்ற துறைகளில் சான்றிதழ் வாங்கவேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் கூற, ஒவ்வொரு துறையாக சுற்றிவந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் லஞ்சம்! அது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனிமனிதரிடம் வாடகைக்கு இருக்கும் பலமாக உள்ள கட்டிடம் - இது உண்மை ' பலமாக உள்ளது ' என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றிதழ் தர, ரூபாய் 1500/- ஒரே ஒரு கழிவறை உள்ளது. அனேகமாக எல்லாக்குழந்தைகளும் பக்கத்திலேயே உள்ள ஏரியைச்சுற்றியுள்ள கருவேலங்காட்டில் இயற்கை உபாதையைக்கழிக்கிறார்கள். - இது உண்மை! , இருபது கழிவறை உள்ளது...