Posts

Showing posts with the label கொசுவத்தி

அருகாமை!

Image
தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது. அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.             அந்த ஆர்வத்தில் , அவரிடம் ...

பொங்கல் - வாழ்த்து

Image
ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள். அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும். வேறொரு வ ிதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும். பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்! எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இரு...

சர்க்கஸ்

Image
அந்த ஞாயிறுதான் கடைசி என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘சர்க்கஸ் கூட்டிக்கிட்டு போப்பா’ என்று மகள் வேறு அனத்திக்கொண்டே இருந்தாள். அவர்கள் பள்ளி வாசலில் கொடுக்கப்பட்டிருந்த தள்ளுபடி கூப்பனை வேறு பத்திரமாக வைத்திருந்து எனக்கு எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கே சர்க்கஸ் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது. சனிக்கிழமை கிளம்பி, குழந்தைகளிடம் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் இன்ப அதிர்ச்சியாய், சென்னை சென்ட்ரலுக்குப் பின்னால், ஜெமினி சர்க்கஸ் வாசலில் காரை நிறுத்தியபோது, அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வைத்து இந்த மாநிலத்துக்கு ஒரு ஆண்டுக்கு மின்சாரம் கொடுக்கலாம். J உள்ளே நுழையும்போது சாகஸங்கள் தொடங்கியிருந்தன. பார்வையாளர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். கீழே ஒரு வலை கட்டி, மேலே திறமையாளர்கள் பார் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறமைமேல் நம்பிக்கையுடன், மக்களை மகிழ்விக்கத்தான் இதைச் செய்கிறோம் என்ற திருப்தியுடனும் வேலை பார்த்தார்கள். நான் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் ஆசையுடன், சிறுவயது குதூகலத்துடன் பார்க்கத் தொடங்கினேன். பல...

திரைப்பாடல் நினைவுகள்

Image
        திரைப்படப்பாடல்கள் இந்தச் சமூகத்தில், நம்முடன் பிணைந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கு அறிமுகமான பாடலை இப்போது கேட்கும்போது அதே காலகட்டம் நினைவுக்கு வந்து ஒரு ரம்மியத்தையோ, சோகத்தையோ கிளறிவிட்டுவிடுகிறது.         நான் சிறுவயதில் பல ஊர்களில் படித்த நினைவுகள் பாடல்களோடு ஒன்றிப்போய் , அந்தக் காலகட்டங்கள் இன்றும் ஸ்லைட் ஷோக்களாகவும்,. சில நேரங்களில் 16mm படங்களாகவும் ஓடுகின்றன. குழந்தைப்பருவத்தில்.. ‘ என்னடீ ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதையே பாடிக்கொண்டிருப்பேன் என்று அம்மா சொல்லுவார்கள். அதிலும் நான் சொல்லும் என் நெஞ்சு குலுங்குலடி..! என்ற வார்த்தைக்காக எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்பார்களாம்.        ’மலர் கொடுத்தேன்..கைகுலுங்க வளையலிட்டேன்’ – இந்தப்பாடலை திருச்சி வானொலி நிலையத்தின் திரைகானம் நிகழ்ச்சியில் கேட்டதும் ..அந்த வளையலிட்டேன் என்ற வார்த்தை உள்ளேயே நுழையாமல்…நான் பட்ட அவஸ்தை..அப்பப்பப்பா…! தனியாகச் சொல்லிவிடுவேன். பாட்டோடு ச...

நாடா நினைவுகள் - தொடர்ச்சி....

Image
பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்‌ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது. ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்! பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம...

நாடா நினைவுகள்

Image
     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது. பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்! ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள்...

சித்தப்பா

சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா , மூத்த அண்ணன் , சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும். அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.       எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது , அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல...