இரண்டு மகிழ்வுரைகளும் ஒரு புத்தகமும்
. எஸ்கேப் - என்று ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டு , என்னால் எழுதப்பட்ட, பிஸினஸ் நாவல் வகையைச் சேர்ந்த புத்தகத்துக்கு தனது அழகான மகிழ்வுரையைத்தந்த்தவர். டாக்டர்.பால சாண்டில்யன் அவர்கள்.. .அவருக்கு அன்புநிறை நன்றியுடன் அந்த மகிழ்வுரை இதோ! மகிழ்வுரை எப்போதும் பரபரப்பாக சுறுசுறுப்பாக இருக்கும் நண்பர் சுரேகா அவர்கள் தொலைபேசியில் ஒரு விண்ணப்பம் வைத்தார் . அவரது " எஸ்கேப் " என்கிற நூலினைப் படித்து விட்டு மதிப்புரை வழங்க வேண்டும் என்று . சுரேகா அவர்கள் நூல்களை ஏற்கனவே படித்தவன் என்கிற அடிப்படையில் ஒப்புக்கொண்டேன் ... ஆனால் ஒரு கண்டிஷன் போட்டு ... அதாவது அது என் மதிப்புரை அல்ல மகிழ்வுரை என்று சொல்லி ...! நூலாசிரியர் சுரேகா மட்டும் பரபரப்பானவர் சுறுசுறுப்பானவர் என்றல்ல . அவர் எழுதுகின்ற நூல்களும் விறுவிறுப்பானவை தான் . சிங்கம் 2, காஞ்சனா 2, சிறுத்தை 2 என்று திரைப்படம் வரலாம் ... புத்தகங்கள் வரக்கூடாதா ..? அந்த இரண்டாம் பாகத்தை வேறு பெயரிலும் வெளியிடலாமே .. என்ன தவறு ... என்ற அடிப்படையில் coa...