Posts

Showing posts with the label பாராட்டு

வெறும் கணக்கு

Image
விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது. பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம் ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும். இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவ...

கீசக வதம்

Image
மெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார். சாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது. சரியா...

பிரமிக்க ஒன்று! சிரிக்க ரெண்டு!

Image
ஏ.ஆர்.ரஹ்மானை கண்டு பிரமிப்பதற்கான காரணம் இதுவும் ஒன்றுதான்!   கனடாவில் ஒரு கல்லூரி இசைக்குழு பாடி அசத்துகிறது பாருங்கள்! மேலை உலகைத் தமிழ் பாட வைத்து பிரமிக்கடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! இதுதான்  பிரமிக்க ஒன்று !  ஒரு சிறுபெண்! மொழித் தடுமாற்றம் இல்லாமல், மேடைபயம் இல்லாமல், என்னமாய்ச் சிரிக்க வைக்கிறாள்! அவர்கள் வீட்டில் திருஷ்டி சுற்றிப்போடச்சொல்லவேண்டும். இதுதான் சிரிக்க ஒன்று !!  ஆங்கிலப் புரிதலும், அனைத்து நாட்டார்களும் .....பழைய நிகழ்ச்சியாக இருக்கலாம். சுவை சூப்பர்! இதுதான் சிரிக்க ரெண்டு !

ஞானாலயா

Image
புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது. அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :) அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வ...

பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!

Image
சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி! எனக்கு பல வித மகிழ்ச்சிகள்! அதுக்கு பல காரணங்கள்! முதல் காரணம், ! நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்! இதுதான் புத்தகங்கள்! மற்ற விபரங்களுக்கு.... இங்கே போய் கட்டாயம் பாருங்க! புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! இது.. பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்! கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)

நம்புங்க டீச்சர்! - 2

8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்.. தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி.. நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்.. நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார். அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார். தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று .. 'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார். அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார். மேடம்..! நீங்க அந்த ரெண்...

அறிந்து கொள்க - அடடே! புத்தகம்!

Image
             காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!              புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது!  முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !         புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்...

நானா...? அவ்வளவு கூலா?

Image
நம்ம சக பதிவர்... அன்புச்சகோதரி.. பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய தென்றல், தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல் . ... புதுகைத்தென்றல் திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ, இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க! மிக்க நன்றிங்க! இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது! இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் ! சொன்னதுக்காக கொஞ்சம் கூல்... வெயிலுக்கு இதமாக..! தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் ! காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥ அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்! விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்... சஞ்சய் ஜி

அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!

நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்!  நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன். அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால... (எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?) பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.! எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன். ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.  ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே! அதேபோல், வ...

படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன். இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய- சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் -புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது. விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன். முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்! அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார். படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம். புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அ...