Posts

Showing posts from February, 2009

அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!

நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்!  நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன். அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால... (எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?) பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.! எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன். ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.  ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே! அதேபோல், வ...

இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

Image
ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல்  விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு! என்னங்க நடக்குது!? என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும்  போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு  ரொம்ப நன்றிங்கோ ! அந்த மொக்கையைப்பாக்க... இங்க போங்க! இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)

சிதறிடுச்சு..!

இதோ இந்த விஷயத்தை எழுதிடலாம்னு யோசிச்சு திரும்பிப்பாத்தா ரொம்ப நாளா ஆயிருக்கு!  மனசுல ஒரு விஷயம் தோணும்போதோ, ஒரு நிகழ்வு நம்மை எழுதத்தூண்டும்போதோ உடனே பதிவா எழுதிடலாம். அப்படியும் சில  வேலைகள் நம்மை எழுத விடாமல் செய்துவிடுகின்றன. அப்படித்தான், சென்றமாதம்  முதல் , இந்த வாரம் வரை CRY (Child Rights and You) நடத்திய போட்டிக்காக , இருபது நிமிட ஆவணப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அதற்காக அலைந்து திரிந்து , காட்சிகள் சுட்டு, எடிட்டிங் முடித்து, அதை சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் இத்தனை நாள் ஓடியிருக்கிறது. இதில் இன்னொரு சேதியும் இருக்கு! அந்தப்போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த மத்த படங்கள் நம்ம படத்துக்கு போனா போகுதுன்னு விட்டுக்கொடுத்துட்டாங்களா, இல்லை அந்த குலோப்ஜாமூன் விளம்பரம் மாதிரி கலந்துக்கிட்டதே ரெண்டுபேரான்னு தெரியலை! நம்மை முதல் தகுதிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க!  அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் செய்திருந்ததால், எனக்கே முழுத்திருப்தி இல்லை. தமிழ்ல இன்னும் ஆழமா செய்திருக்கலாமோன்னு தோணிச்சு!   இந்தியாவால் நமது குழந்தைகளுக்கு கல்வியளிக்க இயலுமா? ன்னுதான் கேள்வி.! நேரமிருந்தி...