Posts

Showing posts with the label BOOK FAIR

புத்தகக் காட்சி - தரிசனங்கள்

Image
பொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன். இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய  செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு  மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா!   எம்புட்டு? ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க!)   சில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும்...

புத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி

Image
     நேற்று (ஜனவரி 17) மதியம் சென்னை வந்து சேர்ந்ததால், புத்தகக் காட்சியின் கடைசி நாளை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, மாலை சென்று, பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த பழைய புத்தகக் கடைகளை நோண்ட ஆரம்பித்தேன். முன்னரே நிறையபேர் நோண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடாமல் தேடியதில், குஷ்வந்த்சிங் ஜோக்ஸ் – Rs.10 One Night @ call Center – Rs.20 பொதுக் கட்டுரைகள் – Rs.10 Tamil Nadu – A photographical Journey (Raghubir Singh) – Rs.150 அப்பாலுக்கு அப்பால் (நாவல்) – Rs.10 ஆகியவற்றை அள்ளிக்கொண்டு பு.காட்சிக்குள் நுழைந்தேன். நிறைவு நாள் என்ற பிரக்ஞையுடன் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. தமிழினியில் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு, ஞானபானு சென்றேன். அங்கு ஞானி அமர்ந்திருந்தார். அரைநிமிடப் பேச்சுக்குப்பின் அங்கிருந்த கூடங்குளம் பற்றிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, பாதை பதிப்பகத்தின், ரணம் சுகம், நியான் நகரம் ஆகிய ஒலி நாவல்களைப் பார்த்து, கேட்டுவிட்டு அப்படியே நமது பதிவர் பஸ் ஸ்டாண்டான டிஸ்கவரி புக் பேலஸ் - 334ஐ...

நான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி

Image
பத்தொன்பது நிமிடங்களாக, பச்சை விளக்கே போடாமல் பாம்புபோல் வாகனக்கூட்டத்தை நிற்கவைத்த, பச்சையப்பா கல்லூரிக்கருகிலேயே யோசித்திருக்கவேண்டும். இன்று அப்துல் கலாம் அவர்கள் வருகிறாரே உள்ளே நுழைவதற்குள் நாக்கு,பேக்கு என அனைத்து உறுப்புகளும் தள்ளிவிடும் என்று! வாகனத்தை உறுமிக்கொண்டே நின்று, நின்று, சென்று சென்று விருகம்பாக்கத்திலிருந்து, புத்தகச்சந்தையில் சென்று வாகனம் யதாஸ்தானத்தை அடைவதற்குள் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகியிருந்தது. மொத்த தூரம் 6.8 கிலோமீட்டர் என்று கூகிள் சொல்கிறது. இதே நேரத்தில் பைக்கில், புதுகையிலிருந்து மதுரை (109கி.மீ)சென்று விடலாம்.!! வாழ்க சென்னைப் போக்குவரத்து…!!       உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் புத்தகப் பட்டியல் எடுக்க ஆரம்பித்தேன். நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மீண்டும் நான்கு வரிசைகள்! அப்போது பலாபட்டரை ஷங்கர் அவர்கள் வந்து லந்தினார்.  நான் நேற்று எழுதியிருந்த கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் புத்தகம் வாங்கவேண்டும் என்றார். அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த நூலின் ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களே ...

மூன்றாம் நாள் புத்தகக் காட்சி

Image
உண்மைத் தமிழன் அண்ணாச்சியுடன் உள்ளே நுழையும்போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. முரட்டுக் கூட்டம்..! உள்ளே சென்றதும் ,நேராக கிழக்கில் கால்கள் நின்றன. அப்புறம்தான் தெரிந்தது. பாரா இருக்கிறார். அவருடன் பேச ஆரம்பித்தால், பல்வேறு தகவல்கள் தந்தார். அப்போது ட்விட்டர் புகழ் சுப்புடுவும் வந்தார். Samsung, iPhone தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் பகிர்ந்துகொண்டோம்.      அப்படியே ஒவ்வொரு கடையாக மேய ஆரம்பித்தேன். சில புத்தகங்களின்மீது நாட்டம் ஏற்பட்டபோது தலைப்பு-ஆசிரியர்-பதிப்பகம்-கடை எண்ணை எழுதிக்கொண்டேன். பொறுமையாக ஒரு பகல் நேரத்தில் வந்து தேவையான புத்தகங்களை வாங்க உத்தேசம்..! முன்னோட்டமாக எல்லாக்கடைகளையும் வரிசையாக பார்வையிடும் நோக்கம்! முழுமையாக பார்த்துமுடித்தபின் நாளை புத்தகப் பட்டியல் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.      இந்த புத்தகக் காட்சியின் மிகப்பெரிய ஆச்சர்யமாக, தொடங்கி மூன்றே நாட்களில் , காமிக்ஸ் விற்பனைசெய்துவந்த கடையில், எல்லா காமிக்ஸும் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஷ்வாவும், ரகுவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையில் இவ்வளவு காமிக்ஸ் ...

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2

Image
முதல் நாள் கட்டுரையைத் தேடாதீர்கள். நான் போகவில்லை. புத்தகக் கண்காட்சியின் நாள்தான் தலைப்பு ! எனக்கு, இன்றுதான் முதல் நாள்! உள்ளே நுழையும்போதே…..பார்க்கிங்கில் நாம் டென்ஷனில் reflect ஆகக்கூடாதென்று, தானே reflect ஆகும் உடை அணிந்து ஏழெட்டு ஆட்கள் வண்டிகளை நிறுத்தி வலுக்கட்டாயமாக சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கேபிள் எழுதியதைப் படித்திருந்ததால், பத்தை எடுத்து நீட்டி ‘இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அராஜகத்தை’ என்று சொல்லி, அவன் முறைப்பை சோடியம் விளக்கொளிக்கு தின்னக் கொடுத்துவிட்டு வண்டியை நிறுத்தினேன். வாசலை நோக்கி நடக்கத்தொடங்கிய வினாடி, என்னைக் கடந்து சென்ற பைக்கை ஓட்டியவர் ’மஜக்’கென்று சென்றுகொண்டிருந்தார். அட..! இது நம்ப மாமல்லன் சாராச்சே என்று நினைத்து.. உள்ளேஏஏஏ செல்லும்வரை நடைத்துணைக்கு வேண்டுமே என்று அவருக்காக நின்று, பேசிக்கொண்டே உள்நுழைந்தோம். பேராசிரியர் ஞானசம்பந்தன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். ‘நிலவு சொல்கிறது..ஏ..! மனிதா!’ என்று ஆரம்பித்தார். அடுத்த நொடி மாமல்லன் சார் ஒரு கமெண்ட் அடித்தார் பாருங்கள்..!! குபீர்ச் சிரிப்பிவிட்டேன். கமெண்ட...