Posts

Showing posts with the label சினிமா

இறைவி - எண்ணங்கள் எனது !

Image
 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட...

உன்னைக் காணாது நானிங்கு..

Image
      எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!! “ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ” பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்!      கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன்  வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில்   ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன்.  கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே  நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது. ...

துப்பாக்கி

Image
       தீபாவளி வெளியீடு என்றவுடன், கிராமத்தில்தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாயிற்று..!! அங்குதான், இரசிகர்களின் உண்மையான உணர்வுகள் தெரியவரும்.      அதேபோல் தியேட்டருக்குள் நுழையும்போதே ஆர்ப்பாட்டம்..!! விஜயின் அறிமுகக்காட்சியில் ஐந்து நிமிடங்கள் அனைத்து இரசிகர்களும் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தார்கள்.          முழுக்க முழுக்க முருகதாஸ் படமாக எடுக்க , விஜய் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய ஆரம்பித்தது. மிகவும் அடக்கி வாசித்து, தனக்கான இடத்தை மிகவும் அழுத்த்தமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.        சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள், தீவிரவாதிகளின் மூளைச் சலவையால், மனம் மாறி, அவர்கள் சொல்வதைச் செய்யும்படி தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தில், அவரவர் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தலைவனிடமிருந்து கட்டளை வரும்போது (குண்டு வைப்பது) அதை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு SLEEPER CELLS என்று பெயர்.!!    அந்தவகை மனிதர்களின் வேரைக் கண...

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!

Image
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..! 12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள். போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன். வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!  எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன். போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன். நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன். அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள...

பில்லா 2 – முதல் காட்சி!

Image
திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன். ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம். ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘...

இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு

Image
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம். இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு. அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன. விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும்,...

HERO - இனிமையான பழமை

Image
DUSTIN HOFFMAN ஐ   TOOTSIE   யிலிருந்தே மிகவும் பிடிக்கும். அப்புறம்   RAIN MAN ,  WAG THE DOG     என்று தேடித்தேடிப் பார்த்தேன்.  இன்னும் அதிகமாக வியக்க வைத்தார். அந்த வரிசையில், நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்த படம்தான்.. HERO , 1 992ல் வெளிவந்தது. அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட ஒரு அழகான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். பெர்னார்ட் லாப்ளேண்ட் (டஸ்டின் ஹாஃப்மேன்) சிறு சிறு திருட்டுவேலைகள் செய்யும் ஒரு ஆள். தன் வக்கீலிடமே பணத்தை அபேஸ் செய்யும் ஒரு டுபாக்கூர்..! அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம்.! ஒருநாள் அவனை படத்துக்குக் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில், மழையால், கார் மக்கர் செய்கிறது. அப்போது இவர் கண்ணெதிரிலேயே திடீரென்று ஒரு விமானம் தரையில் மோதி இறங்குகிறது. மெதுவாக தீப்பிடிக்கவும் ஆரம்பிக்கிறது.       அதைப்பார்த்துக்கொண்டே இருக்கும...

பண்பலை அரசியல்

Image
சிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும் நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும், திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.! இவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார் FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கா...