மரம் தங்கசாமி
அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்! அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார். 'அய்யா காசு குடுங்கய்யா!' ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை செய்யலாமில்ல? 'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!' அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா? நல்லா பாக்குறேன் அய்யா 'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார். கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...? ம். 18 ரூவா இருக்குங்க! சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல? சரிங்கய்யா..! என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று! உடனே ஒ...