Posts

Showing posts from June, 2008

தசாவதாரம் - விமர்சனம் !

இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன். படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள். ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...! ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.

இரு திருமணங்கள்

இரு திருமணங்கள் நேற்று முகூர்த்த நாள்.. ஊருக்குள் பலப்பல விழாக்கள்.. நானும் சில விழாக்களில் கலந்துகொண்டேன். அது ஒரு மருத்துவர் குடும்ப திருமணம்.! அவரது மகனுக்கு ஈரோட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர் குடும்பத்துப்பெண்ணை மணம் முடிக்கிறார்கள். நல்ல கூட்டம். சுமார் ஆயிரம்பேர் அமரக்கூடிய மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்தும் இருந்தோம். முகூர்த்த வேளை நெருங்கியது. யாருக்கும் அட்சதை கொண்டு தரப்படவே இல்லை. ஏன் இப்படி செய்கிறார்கள்? மறந்துவிட்டார்களோ? என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். அந்த விஷயம் மணமகனின் தந்தை (மருத்துவர்) காதுக்குப்போனது. அவர் மேடையில் இருந்தே ' நான் இருக்கிறேன்' என்பதுபோல் ஒரு பாவனை செய்தார். முகூர்த்த நேரமும் வந்தது. தாலியும் கட்டியாகிவிட்டது. எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் அந்த மருத்துவர் (மணமகனின் தந்தை) ஒரு அற்புதமான காரியம் செய்தார். மணமக்களை கீழே அழைத்துவந்தார். ஒவ்வொரு வரிசை நாற்காலிகளுக்கு அருகிலும் , அவர்களை நிறுத்தினார். அட்சதை தட்டை எடுத்துவரச்செய்து, அந்த வரிசைக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச்செய்தார். அதேபோல் மண்டபத்தில் இருந்த ஒவ்வொருவ

தெய்வத் தொழிலாளி - பாகம் 2

நான் அவரை ஒரு நெற்றிச்சுருக்கலுடன் பார்த்தேன். ( முதல் பாகம் இங்கே ) 'என் பேரு சண்முகம் சார் ! எதுத்தாப்புல தெரியுற இடத்தைப்பாத்தீங்களா?' 'எதைச்சொல்றீங்க?' 'எதிர்க்கடைக்குப்பக்கத்துல ஒரு இடைவெளி தெரியுதே?' 'ஆமா!' 'அதுதான் சார் 10 நாள் முன்னாடி வரைக்கும் என் கடை!' நான் எழுந்து நின்று பார்த்தபோது அந்த இடம் முழுமையாகத்தெரிந்தது. சாலையின் அந்தப்பக்கம் தீயினால் எரிந்த ஒரு இடம். பலப்பல குழாய்களும்  அடையாளம் காணமுடியாத பொருட்களும் கருகிப்போய் குவிக்கப்பட்டிருந்தன. 'அதுதான் வடிவேலன் உணவகம்! வாசல்ல டீ ஸ்டால்! உள்ள டிபன் கடை! அன்னிக்கு காலங்காத்தால மண்ணெண்ணை ஸ்டவ்வை பத்தவச்சுட்டு பால   சுடட்டுமேன்னு வெளில வந்தேன். என்ன ஆனதுன்னே தெரியலை! ஒரு நிமிஷத்தில் ஸ்டவ் வெடிச்சு, வாசல் கூரையில் நெருப்பு பிடிச்சுக்கிச்சு! என்னால உள்ள போய் ஒரு சாமானைக்கூட எடுக்க முடியலை! உள்ளதான் கிரைண்டர் , மிக்ஸி, டேபிள் , சேர்ன்னு எல்லாம் சேத்து கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு பொருள் ! கொஞ்ச நேரத்தில் எல்லாமே நாசமாப்போச்சு சார்! 20 வருஷமா வச்சிருந்த கடை சார்.! அதை வச்சுத்தான்