Posts

Showing posts with the label யுடான்ஸ் நட்சத்திரம்

யுடான்ஸ் நன்றி

Image
வாய்ப்பு நல்கி வாசிக்க உள்ளங்களும் நல்கி காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை கல்லால் அடிக்காமல் கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து, இரண்டு மாதப் பதிவுகளை ஏழு நாளில் போட வைத்து, எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு எத்தனையோ பதிவருக்கு எளியோனை அறிமுகப்படுத்தி, என்னைக்கொஞ்சம் ஆடவைத்த யுடான்ஸுக்கு என் உடான்ஸ் இல்லாத நன்றி!

பெயருக்குப் பின்னால்

Image
            பள்ளி செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் விபரம் தெரிந்த வயதில்,  பெயருக்குப்பின்னால் படித்த பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசிரியர்களைக்கண்டு, பிரமிப்பாக இருக்கும். அவர்கள் வீட்டுக்கதவில் பெயர் எழுதி, பின்னால். M.A. என்று போட்டுக்கொள்வதை மிகவும் ஆச்சர்யமாவும், மரியாதையாகவும் பார்ப்பேன்.       நண்பர்களிடையே, ஒருவரைப்பற்றி பேசும்போது, அவரது படிப்பையும் சேர்த்துத்தான் பேசுவோம். அவுங்க மாமா இளங்கோ பி.எஸ்ஸி தெரியுமுல்ல! என்போம். அந்த இரண்டு அல்லது மூன்று எழுத்தைப்பெறுவது மிகவும் கடினம் என்று கவலைப்படுவோம். நாமெல்லாம் இப்படிப் படித்துவிடுவோமா என்று ஏங்குவோம்.         எங்கள் பள்ளி தட்டச்சு ஆசிரியர் கன்னாபின்னாவென்று படித்து, அவர் பெயர்ப்பலகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பட்டத்தை சேர்த்துக்கொண்டே போவார்.       ’இந்த ஆளு எப்பதான் படிக்கிறாரு? எப்படி இவ்ளோ பட்டம் வாங்கினாரு?’ என்று பேசிக்கொண்டே அவரது வீட்டைக் கடந்திருக்கிறேன்.       என் தோழி ஒருத்திக்கு, தன் பெயருக்குப்பின்...

அடைக்கலக் காதல்

Image
'அடைக்கலம்?' 'என்ன மாப்புள?' 'இந்தவாட்டி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஜெயிக்கிற!' 'கண்டிப்பா! எனக்காக இல்லாட்டியும், மல்லிகாவுக்காக ஜெயிப்பேன்.' அடைக்கலத்துக்கும் எனக்குமான உரையாடல் இப்படித்தான் தொடங்கியது அன்று! அதேபோல், அந்த விளையாட்டுப் போட்டியில் அவன் பெயரை நான்குபேர் கொடுத்தோம். அந்த அளவுக்கு அவனது ஓட்டத்தின் மீது நம்பிக்கை! மல்லிகாவைக் கடுமையாகக் காதலித்த அடைக்கலம், எங்களிடம் சொல்லிய கண்டிஷன் ஒன்றுதான்.! 1500 மீட்டர் போட்டியில் ஓடும்போது உற்சாகப்படுத்த மல்லிகாவும் சேர்ந்து கத்தவேண்டும். ஓடிக்கொண்டிருப்பவனிடம் , குளுக்கோஸ் பவுடர் அல்லது பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையை அடுத்தடுத்த சுற்றுக்களில் கொடுக்கவேண்டும். அது அந்த நேரத்தில் பெரிய சவாலாகத் தோன்றவில்லை. நான் மல்லிகாவிடம் தூது போனேன். விபரம் சொன்னேன். ’மல்லி! அடைக்கலத்துக்கு அடைக்கலம் குடேன்!’ ‘இதப்பாரு பீட்டரு! அவன நான் காமெடிப் பீசாத்தான் பாக்குறேன். காதலிக்கிற அளவுக்கு அவனும் ஹீரோ இல்லை. எனக்கும் நேரமில்லை’ என்று இந்திரா நூயியின் எதிர்வீட்டுக்கா...

தொலையாமல் பேசுவோம்

Image
இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பெசியில் அடுத்த முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு! ‘ டாக்டர் ! எனக்கு ….   னு ஆரம்பிக்கும்போது ,  டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…       டாக்டர் ! எனக்க...

பெயருக்கு முன்னால்

Image
             பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.      அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும்.  எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…!       வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதா...

யுடான்ஸ் வணக்கம்!

Image
திரட்டியாக ஆரம்பிக்கும்போது , நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற அளவில்தான் தெரியும். அப்புறம் அது பதிவர்களிடையே பரவ ஆரம்பித்தது. அப்புறம் குறும்படங்கள் காட்ட டிவியும் இணைத்தார்கள். பின்னர் நேரடியாக ஒரு விழாவை ஒலிபரப்பினார்கள். திடீரென்று பரிசலும்,ஆதியும் நடத்தும் சவால் சிறுகதைப்போட்டியை வழங்கினார்கள். அலெக்ஸாவில் ரேட்டிங் அள்ளினார்கள். வார நட்சத்திரம் தேர்ந்தெடுத்து, முகப்பில் வைத்தார்கள். குடான்ஸாக ஆரம்பித்தவர்கள் யுடான்ஸாக , நீங்களும் ஆடுங்களென்று பிரமிக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கேபிள் அண்ணன் கூப்பிட்டு நீங்க அடுத்த வாரம் என்றார். நான் அதற்கடுத்த வாரம் என்றேன்.சரி என்றார். நானும் விட்டுவிட்டேன். சொன்னபடி சரியாகக் கூப்பிட்டார். நான் ஜகா வாங்க முயற்சித்தேன். நடக்கவில்லை.  இதோ.. வந்து நிற்கிறேன். அதுவும் வாரம் ஒரு பதிவாவது எழுதாமல், மாதத்துக்கே இரண்டு, மூன்று என்று சுருங்கிப்போன சுண்டெலிப் பதிவனான என்னைத் தூக்கி நிறுத்தினால், இந்த வாரம் கட்டாயம் 7வது தேறிவிடும் போலிருக்கிறது. ஜெய் ஜோசப் சங்கர ஜேகே !   திரட்டியின் முகப்பில், நா...