Posts

Showing posts from September, 2012

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் # 2

Image
பதிவர் சந்திப்பு நடந்தேறி, அதைப்பற்றிய நேர், எதிர் விவாதங்களும் சூடேறி, கொதித்து, அடங்கி் மீண்டும் அவரவர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில்..எனது அடுத்த பாகம்… இந்தப் பதிவர் சமூகத்தை சமூகமும், ஊடகங்களும் ஒரு ஓரப்பார்வை பார்த்தபடிதான் உள்ளன. பதிவுலகத்துக்கென்று ஒரு சில பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்திசாலிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் பார்க்கின்றன. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கணிப்பொறியில் வேலை பார்த்துக்கொண்டே , அதிலேயே கருத்துக்களையும், படைப்புகளையும் எழுதுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், சமூக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்களது கணிப்பு..!! பாவம்! J உண்மையில் நம்மில் பலர், அப்படித்தான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடனும், நியாயமான படைப்புகளுடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்வினைகளாலும், எதிரிவினைகளாலுமே காலம் கடத்தும் பதிவுகளையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பதிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், வலைப்பூக்கள் மிகப்பெரிய ஊடகமாக மிளிர்ந்

அகவை 70ல் அப்பா!

Image
          எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.!      என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம். அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர். அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரியமாக தட்டிக்கேட்கும் உறுதி கொண்ட மனிதர்!

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!

Image
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..! 12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள். போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன். வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!  எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன். போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன். நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன். அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என