Posts

Showing posts from July, 2013

எதிரிவினைகளாகும் எதிர்வினைகள்

Image
நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் முகநூல் மற்றும் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை . ஆனால் , அத்தகைய நட்பு தரும் முகநூலில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது . மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும் , ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது . அதுபோல்தான் முகநூல் சுவர்களும், பிரபலங்களும்… இதற்கு என்ன காரணமென்று பார்த்தால் , ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும் . அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும் . அதைவிட மேலாக , இதை எழுதினால் .. இவருக்குப்பிடிக்காது . அதை எழுதினால் , அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும் . தொடர்பில்லாமல் பத்துப்