மய மாயம்

இதோ ஆரம்பித்துவிட்டது. டிசம்பர் 2012. ! மயன் காலண்டர் பற்றி பல்வேறு ஊடகங்கள் லேசாக பீதியைக்கிளப்ப ஆரம்பித்தன. ஒரு படம் வந்து , கிளப்பிய பீதியை நன்றாகப் பரவ வைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு தரப்பினர் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்களின் எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. அப்பாடி! அழியட்டும்.. இவனுங்க செய்யும் அட்டகாசத்துக்கு அதான் சரி! இவ்வளவு கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம் பாருங்க! அழிவைத் தடுக்க ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கலையே? நான் அழியறதைப் பத்திக்கூட கவலையில்லை… அந்தத்தேதிக்குப் பிறக்கும் குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு? எல்லாமே தண்ணீர் மயமாயிடும் இல்ல? இருக்குற கொஞ்ச நாளிலாவது, நான் நினைச்சதை செஞ்சு பாக்கப்போறேன். இயற்கை ஏன் அழிக்கணும். மனிதன் செய்யும் அநியாயத்துக்கு.. அவனே அவனை அழிச்சுக்குவான். எத்தனை பாவம் பண்ணியாச்சு..!! அதுக்கெல்லாம் பரி...